சீமையில் இல்லாத புத்தகம் குறித்து ஆசிரியர் தி.தாஜ்தீன்
தேனி மாவட்டம் எனும் பெயரை கேள்விப்பட்டதும் கண்ணுக்கு விருந்து, மலைகள், பள்ளத்தாக்குகள், அருவிகள், குன்றுகள். பச்சைப்பசேல் எனப்பரந்து விரிந்த அழகிய இடங்கள், எண்ணிலடங்கா தேனி மாவட்டம், தமிழகத்தின் பொக்கிஷம், இயற்கை அழகின் தோட்டம், எப்போதும் மனதை கொள்ளை கொள்ளும் என்பது அனைவரும் அறிந்ததே. தேனிக்கு மற்றொரு பெருமை சேர்க்கும் விதமாக கல்விப் பணியில் எழுத்து ஆற்றலில் சிறப்பாக பங்காற்றி வருகிறார் தேனி சுந்தர் (Theni Sundar). தேனி சுந்தர் (Theni Sundar) அவர்கள் டுஜக் டுஜக், எதிர்பாராத பரிசு, மாணவர் மனசு, ஓங்கூட்டு டூனா, தேசிய கல்விக் கொள்கை, மற்றும் “சீமையில் இல்லாத புத்தகம்” போன்ற புத்தகங்களை எழுதி உள்ளார்கள். இவர் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் குழந்தைகளின் வாசிப்பு உலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது. குறிப்பாக என்னைக் கவர்ந்த நூல் “ சீமையில் இல்லாத புத்தகம் ” (Seemaiyil Illatha Puthagam). இந்த புத்தகம் , குழந்தைகளின் சிந்தனைத் திறனை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், அவர்களது கற்பனை உலகை விரிவுபடுத்துவதிலும் சிறப்பாக பங்காற்றும் சக்தி கொண்டது. ஒரு அப்பா, இரு குழந்தைகள், ஒர...