Posts

Showing posts with the label மாணவர் மனசு

மாணவர்களோடு மாணவர்களாக நானும் லயித்துக் கொண்டிருக்கிறேன் : விமலாதேவி, ஆசிரியர்

Image
ஆசிரியர் தேனி சுந்தர் அவர்களது படைப்பை சமீப காலங்களில் வாசித்து அவருடைய அன்பான அரவணைப்பில் மாணவர்களோடு மாணவர்களாக நானும் லயித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறலாம். பொதுவாகவே தொடக்கக் கல்வித் துறை என்று எடுத்துக் கொண்டால் அதில் நிரப்பப்படும் பணியிடங்களானது பெரும்பாலும் பெண் ஆசிரியர்களையே முன்னுரிமைப்படுத்துவர். காரணம், பெண் ஆசிரியர்கள் தான் தாய்மை உள்ளத்தோடும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவர்களுக்கு கரிசனையோடும் செயலாற்றும் பக்குவம் கொண்டிருப்பர் என்பதால் தான். இருப்பினும் ஆண் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் பொழுது அவர்கள் அவ்விடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய சூழல் உருவாகிறது. ஆனால் இப்படி ஒரு ஆசிரியர் மாணவர்களோடு மாணவர்களாக கலந்து பேசி மகிழ்ந்து உறவாடி விளையாடி களியாடிக் கொண்டிருப்பதை ஆசிரியரின் எழுத்துக்களில் தான் அறிய முடிந்தது. இந்த புத்தகத்திற்கான தலைப்பு ஆசிரியர் “மாணவரின் மனசு” என்று வைத்திருப்பது, உண்மையில் மாணவர் மனசு என்று ஒரு திட்டமானது ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் செயல்படுகிறதை மையப்படுத்தி தான். ஒரு சிவப்பு வண்ண பெட்டி ஒன்று மாணவர் மனசு என்று எழுதி பள்ளிக்கூடங்க...

அழகோ அழகு : மாணவர் மனசு நூல் குறித்து பா.இந்துமதி, ஆசிரியர்

Image
இப்புத்தகத்தை எடுத்து முதல் பக்கத்தை வாசிக்க ஆரம்பித்தவுடனேயே இவ்வாசிரிய எழுத்தாளரின் நகைச்சுவை கலந்த எழுத்துக்கும், அவரின் குழந்தை மனசுக்கும் என் மனம் அடிமையாகிவிட்டது என்றே கூறலாம். இவரிடம் படிக்கும் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள் என ஆசிரியரான எனக்கே அவர்மீது பொறாமை கொள்ள வைத்தது. குழந்தைகளோடு குழந்தைகளாக வாழும் உலகம் இனிமையானது. கள்ளம் கபடம் இல்லாதது. உண்மையானது. அவர்கள் உலகத்திற்குள் சென்று, அவர்களை அரவணைத்து அவர்களோடு அவர்களாக, அவர் பாடம் நடத்தும் முறை பற்றி விவரிக்கும் 16 கட்டுரைகளும் அழகோ அழகு. பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் ஒரு தெய்வம் போல. அவர்களுக்கு ஆசிரியரைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம். அலாதி பிரியம். சார், உங்க ஊர் எது சார்? எனக் கேட்பதும், உங்க ஊரைக் கண்டுபிடிச்சிட்டேன் சார். உங்கத் தெருவைக் கண்டுபிடிச்சிட்டேன் சார், என்று பள்ளி மாணவர்கள் கூறும்பொழுது, “சார் வீட்ல புதுசா ஒன்னும் இல்ல… சார் பெருமையா சொல்லிக் கொள்கிற அளவுக்கு சரித்திர முக்கியத்துவம் இல்லாத வீடு தான். அதுவும் நம்ம வீடு மாதிரி அதுவும் ஒரு சாதாரண வீடுதான்னு புரிஞ்சுக்குவான். ஆனா, அந்தக் குட்ட...

மாணவர் மனசு நூல் குறித்து ஆசிரியர் யாழரசி பதிவு

Image
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள மாணவர் மனசு பெட்டி குறித்த கட்டுரையாக இருக்குமென எண்ணி வாசிக்க ஆரம்பித்தப்பிறகே புரிந்தது அது மாணவர்-ஆசிரியர் மனசென.. குட்டி குட்டியான உரையாடல், நிகழ்வுகள் அனைத்தும் தொகுப்பாக 16 கதைகள் அல்ல அல்ல 16 மனசுகள். ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு ஊருக்கு போறீனா சொல்லிட்டு போகமாட்டீயா?? ஏன் சார் நீங்களும் கூட வருவீங்களா? முதல் கதையிலே.. கூடவே சுத்திட்டு இருந்தியேடா செவ்வாழ மொமண்ட்.. You Brutus.. அந்த பால்வாடி டிக்கட்ஸ் தான் வாழ்றாய்ங்யா.. தேனீ சுந்தர் அவர்களின் வகுப்பறையில் ஒரு ஓரத்திலிருந்து பார்த்தது போல் இருந்தது.. தேனி சுந்தர் அவர்களின் வரிகள் அருகிலிருந்து கதை கேட்பது போல் அனுபவம். உங்கள் அனுபவங்களில் எனக்கும் சில உண்டு. வகுப்பு தோழன் வீட்டுப்பாடம் செய்யவில்லை என நிற்கும் போது, இனி சரியாக இருப்பான் டீச்சர் என வக்காலத்து செய்து, அவனை சரியாக வீட்டுப்பாடம் எழுதி வருவதை உறுதி செய்கின்றனர். ஒன்றாம் வகுப்பு குட்டி குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் டப்பா ஓபன் பண்ணி தரும்போது நீங்க ஒன்னு எடுத்துகோங்க என்ற அன்புக்கு நானெல்லாம் என்றுமே அடிமைதான் அதுகள அதட்டி திட்ட மனசு வரமாட்டுது. அதன...

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!

Image
தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்! திட்டமிடாத வகுப்பறைகள்.. மாணவர் மனசு.. உங்க ஜட்ஜ்மெணட் ரொம்பத் தப்பு சார்.. தேனி சுந்தர் இதுவரை படைத்துள்ள நவரத்தினங்களில் மிகவும் முக்கியமான தொகுப்புகள் தற்போது வெளிவந்துள்ள மேலே சொன்ன மூன்று தொகுப்புகள். தேனி சுந்தர் ஒரு ஆசிரியர். ஆசிரியர் என்றால் பண்பாட்டு தளத்தில் செயல்பாட்டாளர் (Teacher is a cultural activist) என்று பாவ்லோ ஃபிராயரே கூறுவர். ஆசிரியருக்கான இந்த வரையறை தேனி சுந்தருக்கு பொருந்தும். கெட்ட வார்த்தையா? கேட்ட வார்த்தையா? குற்றவாளி கூண்டில் நம் அனைவரையும் நிறுத்தும் "திட்டமிடாத வகுப்பறைகள்". இது போன்ற ஏராளமான கேள்விகளை "மாணவர் மனசு" மற்றும் "உங்கள் ஜட்ஜ்மெணட் ரொம்பத் தப்பு சார்" எழுப்புகிறது. தனது வகுப்பறை அனுபவத்தை பகிர்வதன் மூலம் தன்னைத் தானே செழுமைப்படுத்திக் கொள்கிறார் தேனி சுந்தர். இதை படிப்பவர் ஒரு குழந்தையின் மனநிலையை உணர முடியும். உணர வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் இதே போன்ற நாட்குறிப்பு எழுதப் பழகிக் கொண்டால், ஒவ்வொரு வகுப்பறையும் ஒரு பூந்தோட்டம்தான். ஒவ்வொரு மாணவரும் பட்டாம்பூச்சிதான்....

மாணவர் மனசு நூல் குறித்து சீனி சந்திரசேகரன்

Image
பாரதி புத்தகாலயத்தின் மூலம் வாங்கிய புத்தகம். குழந்தைகள் மொழி, விளையாட்டு, வருத்தம், கொண்டாட்டம் என ஒவ்வொன்றையும் அருமையாக பதிவு செய்திருக்கும் கட்டுரைகள் தொகுப்பு இந்நூல். நூலிலிருந்து... ஆசிரியரை மழலைகள் பயமுறுத்த விளையாடும் விளையாட்டு நெஞ்சைகொள்ளை கொள்கிறது.. மன்னிப்பு கேட்காமலேயே மன்னிக்கிறவங்க மாமனிதர்கள். அந்த குணம் குழந்தைகளிடம் இருக்கிறது. ஆசிரியர் வீட்டை கண்டுபிடிப்பது ஆனந்தம் குழந்தைகளுக்கு.. குழந்தைக்கு வேறு சொத்துக்களெல்லாம் ஒண்ணும் வேண்டாம். எப்படியாவது அவனை நல்லா படிக்க வச்சிடுங்க சார். அதுபோதும் எனும் பெற்றோர்கள் வேண்டுகோள் கண்ணில் கண்ணீரை வர வரைக்கும். எப்பேர்ப்பட்ட ஆசிரியர் இருக்கும் வகுப்பறையாக இருந்தாலும் அவர் போட்ட கால அட்டவணைப்படி கற்றல் நிகழாது. ஆனால் நிகழும் கொஞ்சம் பிந்தி வாரதுகள நின்னு கூட்டிட்டு போகத்தான் இந்த பள்ளிகளுக்கு நேரமே இருப்பதில்லை.. பள்ளிக்கு வந்த அதிகாரி அந்த பதிவேடு எடுங்க இந்த பதிவேடு எடுங்க என ஆரம்பித்தார்.. வந்ததுக்கு ஏதாவது ஒன்றில் பிழை கண்டுபிடிப்பு கைகட்டி வாய் பொத்தி நிற்க வைத்து எங்களை அழகு பார்க்க வேண்டும் என்பதில் அவருக்கு அப்படி ஒரு ஆசை...

தேனி சுந்தரின் 'மாணவர் மனசு' வெளிப்படுத்தும் சிறார் உளவியல் : முனைவர் மு.செந்தில் குமார்

Image
புதியவன் செந்தில் அவர்களின் வாசிப்பு அனுபவம்     கம்பம் பள்ளத்தாக்கில் விளைந்த, விளையும் இலக்கியப் பயிர்களில் முக்கியமான, முதன்மையான பயிர் தேனி சுந்தர் அவர்கள். அப்பகுதியின் படைப்பாளர்கள் கதை, கவிதை, நாவல் என இயங்கும்போது இவர் மட்டும் குழந்தைகளுக்கான இலக்கியத்தைக் கையிலெடுத்து தொடர்ச்சியாகப் படைப்புகளைப் படைத்து வருகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மையப் பொறுப்பு, த.மு.எ.க.ச, ஆசிரியர் இயக்கங்களில் முனைப்போடு பங்காற்றி வருகிறார். கல்வி, சிறார்கள் தொடர்பான இவரது கட்டுரைகள் நாளிதழ்கள் இலக்கிய, இதழ்களில் வெளிவந்துள்ளன. 2016 - மகாராஜாவின் புதிய ஆடை 2021 - டுஜக் டுஜன் அப்பாவின் டைரி 2022 - சீமையில் இல்லாத புத்தகம் 2023 - எதிர்பாராத பரிசு 2023 - ஓங்கூட்டு டூணா 2024 - மாணவர் மனசு 2025 - நட்சத்திரங்கள் எட்டிப்பார்க்கின்றன 2025 - திட்டமிடாத வகுப்பறைகள் 2025 - உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் 2025 - நட்சத்திரக் குழந்தை மேற்கண்ட அவரது படை...

மாணவர் மனசு நூல் குறித்து தினமலர் நாளிதழ்

Image
மழலை அரும்புகளின் மனவோட்டம் அறிந்து போதிக்கும் முறையை அனுபவங்கள் வாயிலாக கற்பிக்கும் நுால். சுவையான அனுபவ தொகுப்பாக மலர்ந்துள்ளது. மற்றவர்கள் பழி சுமத்தி, சேட்டையை கச்சிதமாக அரங்கேற்றும் சிறுவர்களின் குறும்பு, நகைச்சுவை தருகிறது. ஆசிரியர் வீட்டை மழலையர் துப்பறிந்து கண்டுபிடிப்பது வியப்பூட்டுகிறது. கதைகளை உல்டா செய்வது, போட்டியில், பாயசம் குடித்ததாகக் கூறி பயமுறுத்துவது போன்ற சுட்டித்தனம் மகிழ வைக்கிறது.போதையுடன் வந்த தந்தையை கண்டித்தபோது கூறிய காரணம் நெகிழ வைக்கிறது. கல்வி அதிகாரிகள் மனோபாவமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. கற்றலில் இனிமையையும், எளிமையையும் கடைபிடிக்க வலியுறுத்துகிறது. மழலையர் பள்ளி ஆசிரியர்கள் படிக்க வேண்டிய நுால். –  புலவர் சு.மதியழகன் தினமலர் நாளிதழ் நூலறிமுகம்

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

Image
ஆசிரியருடைய மொழி நடை சிறப்பாக பேசப்படும் அளவுக்கு நகைச்சுவை நிறைந்தது. 16 தலைப்புகளில் ஆசிரியரின் அனுபவங்களை இந்நூலில் தொகுத்துள்ளார். பால்வாடி பிள்ளைகளை நேரில் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் "குது குதுன்னு காய்ச்சல் அடிச்சு கம்பம் ஆஸ்பத்திரியில் ஊசி போட்டது... பால்வாடி சித்திக், "சார், அப்படியே ஸ்னாக்ஸ் சாப்பிட்டுட்டு.. அப்படியே  விளையாடிட்டு.. சோறு சாப்பிட்டுட்டு... அப்படியே அம்மா வந்துடும்ல.. அப்படியே வீட்டுக்கு போய்டலாம்ல?” என்ற ஒரே கேள்வியை விடாமல் 5 நிமிடம் இடைவெளியில் மீண்டும் மீண்டும் கேட்பதும்,  ஒரு கட்டத்தில், “என்னால் முடியலடா சித்திக்... அப்புறம்  நா அழுதுருவேன்...!” என்று சார் சொல்வதும், “எங்க சார்.... கொஞ்சம் அழுங்க சார் ? எப்படி இருக்கீங்கன்னு பார்ப்போம்? ” என்று ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் கூறுவதும்...  பே....என்று கூறி ஆசிரியரை பயமுறுத்துவதும்.. ஹா ஹா ஹா ஹா என சத்தமா சிரிங்க சார் என்று கெஞ்சுவதும் (கொஞ்சுவதும்) அழகு. புதிய கழிவறை ஜன்னலை உடைத்து,  உள்ளே சென்று மலம் கழித்த மாணவர்களை கண்டுபிடிக்க பெயர் பட்டியல் தயாரிக்கவும்... வீடு வீடா...

மாணவர் மனசு நூல் குறித்து கனவு ஆசிரியர் இதழில்...

Image
வகுப்பறையில் மாணவர்களுடன் ஏற்படும் அனுபவங்களையும் மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் வித்தியாசமான முறைகளையும் சுவாரசியமான படைப்பாக்கி உள்ளார் இந்நூலாசிரியர். நூலில் உள்ள கட்டுரைகள் சலிப்பைத் தராமல், கதையாகவே எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு. ஒவ்வொரு ஆசிரியருமே இப்படியான முயற்சிகளை மேற்கொள்ளலாம் எனத் தோன்ற வைக்கும் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். மழலை மொழியை மழலையாகவே உணர்ந்து எழுதியிருப்பது நூலுக்கு வலுச் சேர்க்கிறது. - பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் வெளிவரும் “ கனவு ஆசிரியர்”  மாத இதழ்,   ஜூன் 202 5

மாணவர் மனசு நூல் குறித்து முல்லை தெய்வேந்திரன் வாசிப்பு அனுபவம்

Image
குழந்தைகளின் அகவுலகை நாம் புரிந்து கொள்வதன் மூலம் நமது ஆழமான தத்துவக் கேள்விகளுக்கு விடை காண இயலும்.. -  ஆலிசன் கோப்னிக்..   மாணவர் மனசு  நூல் குழந்தைகளை அவர்களின் அக உலகத்தை நெருங்கி நின்று தரிசிக்க நல்ல வாய்ப்பு. தேனி சுந்தர் ஜனநாயக வகுப்பறையை பெயரளவில் இல்லாமல் நடைமுறையிலும் நடத்தி வருகிறார். குழந்தைகளின் உரையாடல்களும் அவர்களை உற்சாகப்படுத்த வகுப்பறையில் தன்னை புதுப்பிக்க சுந்தர் எடுக்கும் முயற்சிகளும் மிகவும் அருமை.  தனது வகுப்பறைக்கு தேவையான கற்பித்தல் உத்திகளை தேர்வு செய்து குழந்தைகளை ஆச்சரியப்படுத்துவது கற்பித்தலில் புதுமையை நிகழ்த்த தொடர்ந்து முயல்வது நம் பள்ளிகளில் நடைபெற வேண்டிய அடிப்படை மாற்றங்களில் ஒன்று. உதாரணமாக டும் டும் டும் கட்டுரை. கதையாக தொடங்கி, பாடலாக மாறி எல்லோரும் இணைந்து செய்கிற ஒரு செயல்பாடாகவும் மாறியதை ஆசிரியர் உணரும் தருணம் அற்புதம். குழந்தைகள் முன் தங்கள் ஒளியை ஆசிரியர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்  என்பார் பேராசிரியர் மாடசாமி அவர்கள்..  சுந்தர் அதை தன் வகுப்பறையில் நிகழ்த்துகிறார். "சார் பயந்துட்டாரு" கட்டுரை அதற்கு ஒரு உதாரணம...

மாணவர் மனசு : வாசிப்பு அனுபவம் : வே.சங்கர், சேலம்

Image
குழந்தைகள் என்றாலே குதூகலம்தான்..எல்லோருக்கும் அவரவர் குழந்தைப் பருவத்தை நினைத்தாலே மனதிற்குள் ஓர் மகிழ்ச்சி துள்ளியெழும்.. நூலின் ஆசிரியர் திரு.தேனி சுந்தர் அவர்கள் ஓர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்..அவர் தன் பணிச்சூழலில், பள்ளியில் மாணவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களை அச்சுப் பிசகாமல் அச்சில் ஏற்றியிருக்கிறார்கள். தொடக்கநிலை மாணவப் பருவம் என்றாலே சிறு சிறு குறும்புத்தனங்களும், அப்பாவித்தனமும் நிறைந்ததே என அறிவோம். இங்கே அப்படிப்பட்ட 5 முதல் 10 வயதிற்குட்பட்ட மாணவர்களின் பள்ளி மற்றும் ஆசிரியருடனான செயல்பாடுகள் பற்றிய தனித்தனி தொகுப்பாக எழுதப்பட்டுள்ளது. எழுத்தின் எளிய நடை என்னை மிகவும் ஈர்த்துவிட்டது..இலக்கிய நடையில் அல்லாமல் அவரது வட்டார வழக்கு மொழிச் சொற்களையே பயன்படுத்தி அப்படியே எழுதப்பட்டதை வாசிக்கும்போது உடன் நேரில் நாமும் இருப்பதுபோலவே உணரவைக்கிறது. வாசிக்கும்போதே நிச்சயம் நம்முடைய குழந்தைப்பருவ சேட்டைகளும் நினைக்கு வந்துசெல்லும் என்பதில் ஐயமில்லை. குழந்தைகளோடு குழந்தைகளாய் ஒன்றிப்போய் பணியைச் செய்வதற்கும் ஓர் திறமை வேண்டும். நூலுள் சில... ஒரு மாணவனின் குடிகாரத் தகப்பன்.. தன் மகனை எப்படிய...

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : மருத்துவர் ஜான்சி

Image
28.12.2024 அன்று தேனி சுந்தர் சார் மாணவர் மனசு ,ஓங்கூட்டு டூணா என்ற இரண்டு புத்தகங்களை எனக்கு புத்தாண்டு அன்பளிப்பாக கொடுத்தார். ஏற்கனவே நான் சாரின் டுஜக் டுஜக்  நூலை படித்து அவரின் ரசிகையாகிவிட்டேன். தற்போது "மாணவர் மனசு" புத்தகத்தை இன்றுதான் படித்தேன். மாணவர் மனசு புத்தகத்தை படித்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முதல் பக்கத்தில் "Great things are done When men and mountains meet" என்ற பிளேக்கின் வரிகளோடு இரா.எட்வின் சார் எழுதிய அணிந்துரை ஆரம்பமே அசத்தல். நானும் கள்ளர் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி.கிராமத்து மாணவர்களின் மனநிலையும் அவர்களின் பெற்றோர் மனநிலையையும் சூழ்நிலையையும் மாணவர்கள் சேட்டையும் அவர் பார்த்ததையும் சந்தித்ததையும் அப்படியே எழுத்துக்களாக கொட்டி இருக்கிறார். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். மிகுந்த நன்றி சார்.. அதேபோல பேரா.மாடசாமி சார் அவர்கள் சொன்னதைப்போல ஒவ்வொரு கட்டுரையும் குழந்தைகளோடு குழந்தையாக மாறி வாழ்ந்து இருக்கிறீர்கள். சிரிப்பு போலீஸ் படித்ததும் ஆசிரியர்கள் இப்படி ஒவ்வொரு பள்ளி கல...

வாசிப்பு அனுபவம் : மாணவர் மனசு : தோகை பழனிவேல்

Image
போர்பந்தரில் பிறந்தாலும் 'மகாத்மா காந்தி' போரை விரும்பாதவர். அதைப் போலத்தான் தேனிக்கு அருகில் பிறந்தாலும் தேனீயைப் போலில்லாமல் தேன் போல இனிக்கிறது தேனி சுந்தரின் எழுத்து.. அவர் பல நாள் ஆராய்ந்து, அவதானித்து, ஆராய்ச்சி செய்து எழுதுவதாக சொல்லவில்லை. கண்களால் கண்டதை, தனக்குள் உணர்ந்த அன்றாடங்களை கட்டுரையாகவேர, கதையாகவோ உருமாற்றும் வித்தையை தெரிந்து வைத்திருக்கிறார். பார்த்தவற்றை நாம் சாதாரணமாக கடந்து விடுகிறோம். அவர் படைப்பாக்குகிறார் அவ்வளவே.. "மற்றவர்களெல்லாம் பூமியில் வசிக்கிறார்கள்.. படைப்பாளன் மட்டுமே வாழ்கிறான் " என்று நான் எப்பொழுதோ படித்த ஞாபகம். தேனி சுந்தரின் படைப்புகளை படிக்கிறபோது அந்த சொற்றொடர் மீண்டும் நினைவுக்கு வந்தது. சில நாட்களுக்கு முன்பு எங்களூர் கடை வீதியில் இரண்டு பள்ளி மாணவர்கள் பேசிக் கொண்டு சென்றார்கள். அதில் ஒருவன் "டேய்..! விக்னேசு...நீ ஏன்டா இன்னிக்கி பள்ளிக்கூடம் வல்ல.. ரொம்ப ஜாலியா இருந்துச்சு. இன்னிக்கி எந்த சாரும் பாடம் நடத்துல .. தெரியுமா"? என்றான். "அப்படியாடா முருகா டெய்லியும் சாருங்க பாடம் நடத்தாமயிருந்தா எவ்வளவு ஜாலிய...

தேனி சுந்தர் எழுதிய மாணவர் மனசு : பிளாட்பார்ம் தமிழ்

Image
பிரபல எழுத்தாளர் தேனி சுந்தர் அவர்கள் எழுதிய “மாணவர் மனசு” (Manavar Manasu Book) என்ற நூலினை வாசித்தேன். இப்புத்தகத்தில் மாணவர்களின் மனசை மிக எளிதாக ஆசிரியர் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். தொடக்கக் கல்வி ஆசிரியராகப் ஒருவர் பணியாற்றுவதற்கு நிதானமும் பொறுமையும் தேவை என்பதை இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம். மழலைப் பள்ளிகளுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் இடைப்பட்ட பருவத்தினர் படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களை கையாள ஒரு ஆசிரியருக்கு தனித்த அணுகுமுறை தேவை என்பதை “மாணவர் மனசு” புத்தகத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் அவர்களின் தரத்திற்கு ஏற்றவாறு உணர்வுகளை கையாளத் தெரிந்து கொண்டால் அப்புறம் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் கைவசம்தான். அப்படிப்பட்ட முயற்சிக்காக தேனி சுந்தர் அவர்கள் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறார் என்பதை இந்நூலிலுள்ள கட்டுரை வழியாக அறிய முடிகிறது. மாணவர்களை பொய் சொல்ல அனுமதிக்கும் ஆசிரியர் : ஆசிரியர்கள் சொல்லும் பொய்யுக்கும், மாணவர்கள் சொல்லும் பொய்யுக்கும் மிகப்பெரிய அளவில் வேறுபாடு இருக்கிறது...

மாணவர் மனசு - அனுபவப் புதுமை : இந்து தமிழ் நாளிதழ்

Image
 நன்றி : இந்து தமிழ் நாளிதழ்

மாணவர் மனசு புத்தகம் குறித்த வாசிப்பு அனுபவம் : சரவண ஸ்ரீ

Image
கோடை விடுமுறை.. குழந்தைகள் போல் ஏனோ எனக்கும் இந்த விடுமுறை தேவை பட்டது.. ஊரெல்லாம் சுற்றி வீடு வந்து சேர்ந்தாச்சு… இன்று எனது வாசிப்பில் தேனி சுந்தர் அவர்களின் மாணவர் மனசு புத்தகம் குறித்த வாசிப்பு அனுபவம்.. இந்த நூல் 16 கட்டுரைகளை கொண்டுள்ளது. பாரதிபுத்தகாலயம் வெளியீடு நூல் விலை : 70 ரூபாய்..  நான் புத்தகம் படித்து முடித்தவுடன் தோன்றியது என் மனதில் புத்தகத்தின் விலை குறைவு இப்புத்தகத்திற்கு இன்னும் எவ்வளவும் கொடுக்கலாம். சிரிப்பு போலீசு….. பெரும்பான்மை கிராமபுற பள்ளிகளில் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு நுளையும் போதே இன்று பள்ளியின் நிலை எப்படி இருக்குமோ? என்று மனதில்ஓடும். … இதில் குற்றவாளிகளை கண்டறிந்து…. சிரிப்பு போலீசாக படிக்கும் போதே நாங்களும் ஆகிட்டோம். சாரு பயந்துட்டாரு….. இதில் சீக்கிரம் வாங்க சார்…பயமுறுத்திட்டுப் போயி உக்காரணும் கால் வலிக்குது….இப்படி சொல்லும் ஆசிரியர் குழந்தைகளின் உறவை விட வேறு என்ன வேண்டும்? டும் டும் டும்……..வாசிக்கும் போதே குழந்தை போல் மகிழ்ந்தேன். மாணவர் மனசு வாசிக்கும் போதே எனக்கும் ஒரு போன் வேண்டும் என்று எழுதிப் போட தோன்றியது .எனது வகுப்பறையிலும் மா...

மாணவர் மனசு நூல் குறித்து : கௌசல்யா, ஆசிரியர்

Image
ஹைக்கூ கவிதை போல காட்சிகளை கண்முன் நிறுத்தும் குட்டிக் குட்டி கட்டுரைகளின் தொகுப்பை தந்த தேனி சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.. நாம் வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஏதோ ஒரு புத்தகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் என்பார்கள் . பல பள்ளிகளின் பிரச்சனை சிரிப்பு போலீஸ் காட்சி பகுதியில் ஒளிந்து உள்ளது. மாணவர் மனசு மட்டுமல்ல ஆசிரியர் மனசையும் பிரதிபலிக்கிறது இந்த புத்தகம் . புத்தகம் வாசிக்க பெரிதும் விரும்பாத ஆசிரியர்களுக்கு கூட ஆர்வத்தை தூண்டும் நூல் இது. எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படுத்தாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை காட்சிகள் அருமையான தலைப்பின் கீழ் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன .ஓவியங்களும் மிக அருமையாக உள்ளது. அதிலும் காமராஜர் பாயாசம் குடிச்சாரு கட்டுரையின் ஓவியம் மிகவும் சிறப்பாக உள்ளது. கட்டுரை ஆசிரியர் தன் மனதில் இருக்கும் பல ஆயிரம் காட்சிகளுள் நமக்கு இந்த தொகுப்பு மூலம் 16 காட்சிகளை மட்டும் தொகுத்து வைத்துள்ளார். துறை ரீதியாக தினம் தினம் நாம் பார்ப்பதை கவனிப்பதை கேட்பதை அப்படியே துல்லியமாக வார்த்தைகளால் வடித்ததால் என்னவோ புத்தகத்தை படித்து மு...