மாணவர் மனசு நூல் குறித்து ஆசிரியர் யாழரசி பதிவு

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள மாணவர் மனசு பெட்டி குறித்த கட்டுரையாக இருக்குமென எண்ணி வாசிக்க ஆரம்பித்தப்பிறகே புரிந்தது அது மாணவர்-ஆசிரியர் மனசென.. குட்டி குட்டியான உரையாடல், நிகழ்வுகள் அனைத்தும் தொகுப்பாக 16 கதைகள் அல்ல அல்ல 16 மனசுகள்.

ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு
ஊருக்கு போறீனா சொல்லிட்டு போகமாட்டீயா??

ஏன் சார் நீங்களும் கூட வருவீங்களா?


முதல் கதையிலே..

கூடவே சுத்திட்டு இருந்தியேடா செவ்வாழ மொமண்ட்..

You Brutus..


அந்த பால்வாடி டிக்கட்ஸ் தான் வாழ்றாய்ங்யா..

தேனீ சுந்தர் அவர்களின் வகுப்பறையில் ஒரு ஓரத்திலிருந்து பார்த்தது போல் இருந்தது..


தேனி சுந்தர் அவர்களின் வரிகள் அருகிலிருந்து கதை கேட்பது போல் அனுபவம். உங்கள் அனுபவங்களில் எனக்கும் சில உண்டு.




வகுப்பு தோழன் வீட்டுப்பாடம் செய்யவில்லை என நிற்கும் போது, இனி சரியாக இருப்பான் டீச்சர் என வக்காலத்து செய்து, அவனை சரியாக வீட்டுப்பாடம் எழுதி வருவதை உறுதி செய்கின்றனர்.

ஒன்றாம் வகுப்பு குட்டி குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் டப்பா ஓபன் பண்ணி தரும்போது நீங்க ஒன்னு எடுத்துகோங்க என்ற அன்புக்கு நானெல்லாம் என்றுமே அடிமைதான் அதுகள அதட்டி திட்ட மனசு வரமாட்டுது. அதனால் தான் என்னவோ எட்டாவது சேட்டை பண்ணினாலும் போ போய் அந்த மிஸ்கிட்ட அனுப்புங்க அவகளுக்கு தான் அடங்குவானுங்கன்னு சொல்லுவாங்க. நான்லாம் அடிக்கவும் மாட்டேன் திட்டவும் மாட்டேன் ஏண்டா என்ற ஒரு வார்த்தைக்கு கண்களில் நீர்க்கட்டி நிற்பார்கள், என்னிடம் போ என்று கூறினால் எல்லார் முன்பும் என்னை விட்டு கொடுப்பதாக நினைக்கின்றனர் இன்றும். ஆனாலும் சேட்டை ஒரு தொடர் கதை தான். இவை எல்லாம் ஒரு சாம்பிளே.. தினம் தினம் நினைத்து பார்க்க கோடி நினைவுகளை கொட்டி கொடுத்துள்ளது அரசுப்பள்ளிகளின் தொடக்கவகுப்புகள்.

என் பிள்ளைகளோட பிள்ளையா இருக்குறது தான் எனக்கு சந்தோசமே...

இப்போ தான் தெரியுது ஏன் மரியாதைக்குரிய டாக்டர்.இராதாகிருஷ்ணன் அவர்கள் எனக்கு இந்தியாவின் முதல் குடிமகன் என்னும் பதவியை விட தொடக்கப்பள்ளி ஆசிரியர் என்பது தான் என்னுடைய மகிழ்ச்சி என்று கூறினார் என்று...

நினைவுகளை கிளறிவிட்டீர் தோழர் தேனி.சுந்தர் அவர்களே. வாழ்த்துகள் . வாழ்க வளமுடன்..
-
யாழரசி.க,  இடைநிலை ஆசிரியர்
ஊ.ஒ.ந.பள்ளி செட்டிச்சிமிழி
கொரடாச்சேரி ஒன்றியம்
திருவாரூர் மாவட்டம்

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!