தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!
தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்!
திட்டமிடாத வகுப்பறைகள்..
மாணவர் மனசு..
உங்க ஜட்ஜ்மெணட் ரொம்பத் தப்பு சார்..
தேனி சுந்தர் இதுவரை படைத்துள்ள நவரத்தினங்களில் மிகவும் முக்கியமான தொகுப்புகள் தற்போது வெளிவந்துள்ள மேலே சொன்ன மூன்று தொகுப்புகள்.
தேனி சுந்தர் ஒரு ஆசிரியர். ஆசிரியர் என்றால் பண்பாட்டு தளத்தில் செயல்பாட்டாளர் (Teacher is a cultural activist) என்று பாவ்லோ ஃபிராயரே கூறுவர். ஆசிரியருக்கான இந்த வரையறை தேனி சுந்தருக்கு பொருந்தும்.
கெட்ட வார்த்தையா? கேட்ட வார்த்தையா? குற்றவாளி கூண்டில் நம் அனைவரையும் நிறுத்தும் "திட்டமிடாத வகுப்பறைகள்". இது போன்ற ஏராளமான கேள்விகளை "மாணவர் மனசு" மற்றும் "உங்கள் ஜட்ஜ்மெணட் ரொம்பத் தப்பு சார்" எழுப்புகிறது.
தனது வகுப்பறை அனுபவத்தை பகிர்வதன் மூலம் தன்னைத் தானே செழுமைப்படுத்திக் கொள்கிறார் தேனி சுந்தர். இதை படிப்பவர் ஒரு குழந்தையின் மனநிலையை உணர முடியும். உணர வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் இதே போன்ற நாட்குறிப்பு எழுதப் பழகிக் கொண்டால், ஒவ்வொரு வகுப்பறையும் ஒரு பூந்தோட்டம்தான். ஒவ்வொரு மாணவரும் பட்டாம்பூச்சிதான். ஆசிரியர் தோட்டக்காரர்தான்.
வாசிப்போம் குழந்தையின் மனங்களை புரிந்துக் கொள்ள முயற்சிப்போம். ஆசிரியர் தேனி சுந்தர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
தோழமை அன்புடன்
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
07. 10. 2025

Comments
Post a Comment