Posts

Showing posts with the label கட்டுரைகள்

ரெடி... ஆக்சன்.......

Image
நேற்று முன்தினம் பாண்டா பிளான் என்றொரு ஜாக்கிசான் படம் பார்த்தேன். இருபது வருடங்கள் கழித்து ஜாக்கிசான் படம் ஒன்றை முழுமையாக பார்த்தேன். ஆசிரியர் பணிக்கு வரும் முன்பு திராட்சை தோட்ட தொழிலாளியாக சில காலம் வேலை செய்து கொண்டிருந்த போது சிவச்சந்திரன் உள்ளிட்ட சக வயது நண்பர்களுடன் அருகில் உள்ள காமயகவுண்டன் பட்டி , சுருளிபட்டி கிராமங்களில் உள்ள திரையரங்குகளில் ஜாக்கிசான், புருஸ்லீ, ஜெட்லீ படங்கள் பார்த்து விட்டு சாவகாசமாக பேசிக்கொண்டு, இரவில் நடந்து வீடு வந்து சேர்வோம்.. மற்ற படங்களை விட ஜாக்கிசான் படம் என்றால் சண்டைக்கு சண்டை, சிரிப்புக்கு சிரிப்பு, விறுவிறுப்பு இருக்கும்.. அப்படியான எதிர்பார்ப்பில் தான் இந்த படத்தையும் பார்த்தேன்.. ஆனால் இந்த படம் வேறு மாதிரியான அனுபவமாக இருந்தது.. படத்தில் ஜாக்கி ஒரு திரைப்பட நடிகராகவே வருகிறார். உயிரியல் பூங்கா ஒன்றில் ஒரு பாண்டா கரடி குட்டி பிறக்கிறது. அதை தத்தெடுக்கும் நிகழ்ச்சி ஒன்றில் ஜாக்கி கலந்து கொள்கிறார். இன்னொரு புறம் ஒரு பெரிய பணக்கார குடும்பத்துக்கு அந்த பாண்டா குட்டி தேவைப்படுகிறது. தன் மகளுக்காக அதை என்ன விலை கொடுத்தாவது வாங்கி விட தயாராக இர...

குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் பவள விழா ஆண்டு : இந்து தமிழ் கட்டுரை

Image
நன்றி : இந்து தமிழ் திசை நாளிதழ்  

கிடைக்கிற கல்வி தரமானதாக வேண்டும் : தேனி சுந்தர்

Image
நன்றி : செம்மலர், ஜீன், 2024  

மாணவர் மனங்களில் ஒரு சிம்மாசனம் : புத்தகம் பேசுது கட்டுரை : கமலாலயன்

Image
puthiyaputhagampesuthu.com/2024/07/15/maanavar-manangkalil-simmasanam/  நன்றி : தோழர் கமலாலயன் புத்தகம் பேசுது இதழ் ஏப்ரல், 2024

எது சிறார் இலக்கியம் : தொடரும் விவாதம் - தேனி சுந்தர்

Image
 நன்றி :   இந்து தமிழ் நாளிதழ்

அதிர்ந்தது நிலம் மட்டுமில்லை… - தேனி சுந்தர்

இந்த முறை சீக்கியர்களை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என முடிவெடுத்துத் தனது பெரும்படைகளை அனுப்பினார் பேரரசர் ஃபரூக்சி. அவர் நினைத்தபடி நடந்தது. சீக்கியப் படைகள் தோற்கடிக்கப்பட்டன. அப்படைக்கு தலை மையேற்று மொகலாய அரசர்களுக்கு குடைச்சல் கொடுத்து வந்த பண்டா சிங் கைது செய்யப்பட்டார். “டெல்லியை நோக்கிப் புறப்பட்ட வெற்றி ஊர்வலத்தில் இருநூறு சீக்கியர் களின் தலைகளோடு விலங்கிடப்பட்டு இரும்புக் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட பண்டா சிங்கும் இருந்தார். தலைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அரசர் கோபமடைவார் என்று எண்ணிய படைத் தலைவர்கள், திரும்பிச் செல்கிற வழியில் இருந்த அக்கம்பக்கத்து கிராமங் களில் வசித்த அப்பாவி சீக்கியர்களைக் கொன்று குவிக்குமாறு தனது படை களுக்கு உத்தரவிட்டனர். இப்படியாக சாதாரண குடிமக்களும் கொல்லப்பட்டு அவர்களது தலைகளும் ஊர்வலத்தில் சேர்க்கப்பட்டன. இந்த ஊர்வலம் டெல்லியை அடைந்தபோது தலைகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தன. இந்தக் கொடூரம் நடந்தது 18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில். மன்னராட்சி காலத்திற்கு நிகரான அல்லது அதையும் விஞ்சி விடும் அளவிற்கு “என்னுடைய பகுதியில்தான் அதிகமான சீக்கியர...

பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வைத்த BRTE பூஜ்ஜியக் கலந்தாய்வு..!

தேனி மாவட்டத்தில் கலந்தாய்வு அறிவிப்பிற்கு முன்பிருந்த மொத்த ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள் 56. அதில் இறப்பு, ஓய்வு, கன்வர்சன் காரணமாக கட்டாயமாகப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் 10. (வழக்கு காரணமாக இன்னும் 8 பேர் பணி விடுவிப்பு செய்யப்படவில்லை). ஆக, இந்த நிலையிலேயே தேனி மாவட்டத்தில் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 13 ஆகும். கலந்தாய்வுக்கு இருநாள் முன்னதாக பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதன் அடிப்படையில் புதிதாக 22 பணியிடங்கள். ஆக மொத்தம் தேனி மாவட்டத்தில் மட்டும் 35 காலிப் பணியிடங்கள் இருந்தன. மாவட்டத்திற்குள் வர வேண்டும் என கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தவர்கள் எண்ணிக்கை 15.  ஏற்கனவே இருப்பவர்கள் தொடர்ந்து சொந்த மாவட்டத்தில்  பணிபுரிவது போக, பணி நிரவல் காரணமாக வெளியில் சென்றவர்கள் 15 பேரும் மாவட்டத்திற்குள் வந்திருக்க முடியும். அது மட்டுமின்றி கூடுதலாக இன்னும் 20 பேர் தேனி மாவட்டத்திற்குள் வந்திருக்க முடியும். மிக முக்கியமாக பணி நிரவல் காரணமாக மாவட்டத்திற்கு வெளியில் சென்றவர்களை உள்ளே கொண்டு வருவதற்கான முயற்சியாக நடந்த இந்த கலந்தா...

BRTE கலந்தாய்வு : அரசு சாதித்தது என்ன?

சரியான, தெளிவான கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படவில்லை.. எந்த இடம் காட்டப்படும், எந்த இடங்கள் மறைக்கப்படும் என்கிற விபரங்கள் கடைசி வரையிலும் தெரியவில்லை.. முன்னுரிமை பட்டியல் வெளியிடப் பட்டு ஆசிரியர் பயிற்றுநர் அனைவரிடமும் திருத்தம் ஏதுமில்லை என்று கடிதம் பெற்று முன்னுரிமை பட்டியல் இறுதி செய்யப்பட்ட நிலையில் தான் கலந்தாய்வு நடந்தது. ஆனால் கலந்தாய்வின் போதே சிலரது தரவரிசையில் மாற்றம் செய்யப்பட்ட வினோதமும் நடந்தது...! ஏற்கனவே இருந்த பணியிடங்கள் மட்டுமின்றி புதிதாக பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.. அந்த இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. அதுவரையில் சரி. ஆனால் கலந்தாய்வு நடக்கும் போதே பணியிட எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது எந்த வகையில் சரியானது என்று தெரியவில்லை.. மேலும் அனைத்து வட்டார வள மையங்களிலும் ஒரே விதமான பயிற்சி, பணிகள் தான் நடைபெறுகின்றன. ஆனாலும் ஒவ்வொரு மையத்திற்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை.. ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறு எண்ணிக்கை.. எந்த அடிப்படையில் பாடவாரியாக ஆசிரியர் பயிற்றுநர் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்.. ஒரு பொதுவான வழிகாட...

பள்ளிகள் வெடிகுண்டுகளை வீசி விடாமல் இருக்க வேண்டும்..! - தேனி சுந்தர்

மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் மக்கோடா அப்பாவிடம் கேட்கிறான் . இன்று ரேசனில் சீனி போடுகிறார்களாமே என்று. இல்லை, நமது பகுதியில் நாளை தான் போடுவார்கள் என்கிறார் அப்பா. பின்னாடியே வந்த கயானா கேட்கிறாள். அப்பா, இன்று ரேசனில் சீனி போடுவார்களாமே.. எங்கள் ஆசிரியர் சொன்னார் என்று கடைசி பாட வேளையில் அவளது ஆசிரியர் சொன்னதை அப்படியே சொல்கிறாள். "நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரேசனில் சீனி போடுகிறார்கள்.. நீங்கள் வீட்டுக்குச் செல்லும் போது, வீட்டில் உங்கள் அம்மா சீனியை வைத்து சுவையான பீன்ஸ் சூப் அல்லது வேறு ஏதாவது இனிப்பான பதார்த்தம் உங்களுக்காக செய்து வைத்திருப்பார்.. அதை நினைத்துக் கொண்டே வீட்டிற்கு செல்லுங்கள்.." அப்பா தன் மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார்.. யதார்த்தம் புரியாத இந்த ஆசிரியர்கள் தெரிந்தோ தெரியாமலோ இப்படியொரு வெடிகுண்டை வீசி இருக்கிறார்களே என்று.. இது ஒரு அப்பாவின் குறிப்பு. இது நடந்தது இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில்..! அமெரிக்கா, ஜப்பானில் ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் வீசிய அணுகுண்டு தாக்குதலால் அந்த நகரங்களில் இருந்த குழந்தைகள் எந்த அளவிற்கு பாதிக்கப் பட்டார்கள...

நான் அமைதியாக இருக்கப் போவதில்லை..! – தேனி சுந்தர்

Image
“கடந்த சில இரவுகளாக நான் ஒரு நிமிடம் கூட தூங்கவில்லை. தாங்கமுடியாத அளவுக்கு நான் பயமுறுத்தப்படுகிறேன். சித்திரவதைகளின் மூலம் குற்றுயிராக்கப்படுகிறேன். மருத்துவ வசதி ஏதும் தரப்படவில்லை..”- கென் சரோ விவா. யார் இந்த கென் சரோ விவா. நாம் நைஜீரியாவுக்குப் போக வேண்டும். நைஜர் டெல்டா பகுதிகள் முழுவதும் அங்குள்ள எண்ணெய் வளங்களுக்காக ஷெல் கம்பெனியால் சூறையாடப்பட்டது. அந்த நிலங்களில் பதிக்கப்பட்ட குழாய்களின் துருப்பிடித்து உடைந்த துளைகளில் இருந்து வெளியேறும் எண்ணெய்க் கசிவால் எந்நேரமும் – நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக – தீ ஜீவாலைகள் எரிந்து கொண்டிருந்தன. பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தீ ஜீவாலைகள் தெரிவதாக விண்வெளி வீர்ர்களே கூறியதாக பதிவுகள் இருக்கின்றன. அங்கு அப்போதிருந்த சர்வாதிகார ராணுவ அரசுக்கும் ஷெல் கம்பெனிக்கும் இடையிலான கள்ளக் கூட்டு காரணமாக இரக்கமின்றி நிலங்கள் சூறையாடப்பட்டன. அப்பகுதியில் வாழ்ந்த ஓகோனி மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அம்மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கின்றனர். ஓகோனி மக்களின் இனக்குழுத் தலைவர் ஒருவரின் மகன் தான் கென்சரோ விவா. அந்த மக்களின் துயரங்களை தன் எழுத்துகள...

ஏழை மக்களின் சுற்றுச் சூழலியல்

Image
பொதுவாக சுற்றுச் சூழலியல் குறித்த ஆர்வமும் அறிவும் அதற்கான செயல்பாடுகளும் வளர்ந்த நாடுகளில் தான் இருக்கும் .. அவர்கள் ஏற்கனவே வளர்ச்சியின் பெயரால் இயற்கையைப் பாழடித்த காரணத்திற்கு பரிகாரம் செய்வது போல செயல்படுவதும் உண்டு.. வளர்ந்த நாடுகளுக்கு தான் அதற்கான பணமும் செயல்படுவதற்கான ஆற்றலும் தேவையும் உண்டு.. ஏனெனில் அவர்கள் வளர்ந்து விட்டார்கள்.. ஏழை நாடுகளின் மீது சூழலியல் கட்டுப்பாடுகளைச் சுமத்துவது அவர்களின் வளர்ச்சிக்கு எதிரான கருத்து ஆகும்.. அதே போல படித்த, நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினர் அது குறித்து சிந்திப்பர், எழுதுவர், பேசுவர் என்கிற பார்வையும் இருக்கிறது.. சுற்றுச் சூழல் சிந்தனை என்றாலே துருவப் பகுதிகளில் பனி உருகுவதும், பனிக் கரடிகள் பரிதாபமாக நிற்பதுவும் ஓசோன் படல ஓட்டையும் தான் நினைவுக்கு வருகிறது.. அவற்றிலும் கூட உலகளாவிய சிந்தனை உள்ளூர் அளவிலான செயல்பாடுகள் வலியுறுத்தப்படுகின்றன.. உலகளாவிய அளவில் கவனம் பெற்ற சில சூழலியல் போராட்டங்கள் உள்ளன. இவையாவும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் குறிப்பாக 1970களில் தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்றவை. வளர்ந்த நாடுகளில் நடைபெற்றவை அல்ல....

ஓங்கி ஒலிக்க வேண்டிய குரல்....

Image
அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி ஜோபைடன் பேசியது விவாதமாகி இருக்கிறது. தடுப்பூசி முழுமையாக செலுத்தியவர்கள் முகக் கவசம் களைந்து முகத்தில் புன்னகையோடு மற்றவர்களை வரவேற்கலாம். இன்னும் முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார். முகக்கவசம் தொடர்பாக இவ்வளவு தூரம் அவர் அவசரப்பட வேண்டியதில்லை என்று கருத்துகள் வந்துள்ளன. அவ்வளவு நம்பிக்கையோடு அவர் பேசுவதற்கு காரணம் அந்த நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது என்பது தான். தடுப்பூசி போட்டதால் அங்கு தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளது. தினசரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உயிரிழப்பும் குறைந்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் நோயால் மரணித்தவர்களின் எண்ணிக்கை ஆகிய இரண்டிலும் அமெரிக்காவை முந்தும் தகுதி உலகில் மோடி தலைமையிலான இந்தியாவிற்கு மட்டுமே உள்ளது என்று கிண்டலாக விமர்சிக்கப்படுகிறது.அந்த நையாண்டிக்குப் பின்னுள்ள துன்பமும் துயரமும் கையறு நிலையும் எதிரி நாட்டுக்கும் கூட வந்து வ...

தாய்மொழிவழிக் கல்வியே தரமான கல்வி : சங்கரய்யா

Image
ஜூலை,15 – தமிழகத்தின் மூத்த இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான தோழர்.சங்கரய்யா அவர்களின் பிறந்த நாள். சமூக வலைத் தளங்கள் முழுவதும் நேற்றைய தினம் தோழர் சங்கரய்யா அவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். அவரது கட்சி சார்ந்த, சாராத அனைவருக்கும் அவர் தோழர்.சங்கரய்யா தான். பல தரப்பினரும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைத்த சம்பவங்களையும் அவருடைய வாழ்க்கைத் துணுக்குகளையும் நிறைய பகிர்ந்து கொண்டிருந்தனர். அவரைப் பற்றிப் படிக்க வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தின. நல்வாய்ப்பாக என்.ராமகிருஷ்ணன் எழுதிய என்.சங்கரய்யா : வாழ்க்கையும் இயக்கமும் என்கிற புத்தகம் கிடைக்கப் பெற்றேன். மாணவர் பருவத்தில் இருந்து, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் தொடர்ச்சியான இயக்கங்கள், போராட்டங்கள், சிறைவாசம், தலைமறைவு வாழ்க்கை என விறுவிறுப்பான திரைப்படம் போல இருக்கிறது இவரது வாழ்க்கை அனுபவங்கள். அவருடைய இந்த, பொதுவுடைமை இயக்கம் சார்ந்த பிடிப்பு மிக்க வாழ்க்கை அமையப் பெற்றமைக்காக யாருக்காவது நன்றி சொல்ல வேண்டும் என்றால் சுதந்...

கொரோனா காலத்தில் மாற்று வகுப்பறை..! - தேனி சுந்தர்

Image
உலகம் முழுவதும் கொரானா தொற்று காரணமாக அனைத்தும் முடங்கியிருக்கிறது. நோய்த் தொற்றால் இலட்சக் கணக்கிலான மரணங்கள் என்றால் இன்னொரு பக்கம் பொருளாதாரத் தேக்கம், வேலை வாய்ப்பின்மை, வருவாயின்மை எனப் பல சிக்கல்கள் நம்மைச் சூழ்ந்து நிற்கின்றன. இத்தனைக்கும் இடையில் தான் அரசும் மக்களும் பெற்றோரும் கல்வியாளர்களும் குழந்தைகளின் கல்வி குறித்து பெருங்கவலை கொள்கின்றனர். பள்ளிகளை எப்போது திறப்பது, பாடத் திட்டத்தைக் குறைக்கலாமா, பாடங்களைக் குறைக்கலாமா, தேர்வுகளை நடத்தலாமா, கல்வி ஆண்டு முழுவதும் ரத்து செய்து விடலாமா, பள்ளிகளைத் திறந்து விட்டால் வகுப்புகளை எப்படி நடத்துவது எனக் கேள்விகள் வரிசைகட்டி நிற்கின்றன. உண்மை என்னவென்றால், கொரானா தொற்று தீவிரமாகி வருகிறது. எந்த ஷிப்டும் நடைமுறைக்கு வரமுடியாது. அதனால் புதிய அல்லது மாற்று வகுப்பறைகள் குறித்து சிந்தித்தே ஆக வேண்டும்.  இங்கு தான் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தன் தொடர்ச்சியான பணிகளின் அனுபவத்திலிருந்து சில முன்மொழிவுகளை அரசின் முன்பும் சமூகத்தின் முன்பும் வைக்கிறது. கல்லாமையை இல்லாமை ஆக்கும் உறுதியோடு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடங்கியத...