ஆசிரியருடைய மொழி நடை சிறப்பாக பேசப்படும் அளவுக்கு நகைச்சுவை நிறைந்தது. 16 தலைப்புகளில் ஆசிரியரின் அனுபவங்களை இந்நூலில் தொகுத்துள்ளார். பால்வாடி பிள்ளைகளை நேரில் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் "குது குதுன்னு காய்ச்சல் அடிச்சு கம்பம் ஆஸ்பத்திரியில் ஊசி போட்டது... பால்வாடி சித்திக், "சார், அப்படியே ஸ்னாக்ஸ் சாப்பிட்டுட்டு.. அப்படியே விளையாடிட்டு.. சோறு சாப்பிட்டுட்டு... அப்படியே அம்மா வந்துடும்ல.. அப்படியே வீட்டுக்கு போய்டலாம்ல?” என்ற ஒரே கேள்வியை விடாமல் 5 நிமிடம் இடைவெளியில் மீண்டும் மீண்டும் கேட்பதும், ஒரு கட்டத்தில், “என்னால் முடியலடா சித்திக்... அப்புறம் நா அழுதுருவேன்...!” என்று சார் சொல்வதும், “எங்க சார்.... கொஞ்சம் அழுங்க சார் ? எப்படி இருக்கீங்கன்னு பார்ப்போம்? ” என்று ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் கூறுவதும்... பே....என்று கூறி ஆசிரியரை பயமுறுத்துவதும்.. ஹா ஹா ஹா ஹா என சத்தமா சிரிங்க சார் என்று கெஞ்சுவதும் (கொஞ்சுவதும்) அழகு. புதிய கழிவறை ஜன்னலை உடைத்து, உள்ளே சென்று மலம் கழித்த மாணவர்களை கண்டுபிடிக்க பெயர் பட்டியல் தயாரிக்கவும்... வீடு வீடா...
Comments
Post a Comment