மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

ஆசிரியருடைய மொழி நடை சிறப்பாக பேசப்படும் அளவுக்கு நகைச்சுவை நிறைந்தது. 16 தலைப்புகளில் ஆசிரியரின் அனுபவங்களை இந்நூலில் தொகுத்துள்ளார்.

பால்வாடி பிள்ளைகளை நேரில் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் "குது குதுன்னு காய்ச்சல் அடிச்சு கம்பம் ஆஸ்பத்திரியில் ஊசி போட்டது...

பால்வாடி சித்திக், "சார், அப்படியே ஸ்னாக்ஸ் சாப்பிட்டுட்டு.. அப்படியே  விளையாடிட்டு.. சோறு சாப்பிட்டுட்டு... அப்படியே அம்மா வந்துடும்ல.. அப்படியே வீட்டுக்கு போய்டலாம்ல?” என்ற ஒரே கேள்வியை விடாமல் 5 நிமிடம் இடைவெளியில் மீண்டும் மீண்டும் கேட்பதும்,  ஒரு கட்டத்தில், “என்னால் முடியலடா சித்திக்... அப்புறம்  நா அழுதுருவேன்...!” என்று சார் சொல்வதும், “எங்க சார்.... கொஞ்சம் அழுங்க சார் ? எப்படி இருக்கீங்கன்னு பார்ப்போம்? ” என்று ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் கூறுவதும்...  பே....என்று கூறி ஆசிரியரை பயமுறுத்துவதும்.. ஹா ஹா ஹா ஹா என சத்தமா சிரிங்க சார் என்று கெஞ்சுவதும் (கொஞ்சுவதும்) அழகு.



புதிய கழிவறை ஜன்னலை உடைத்து,  உள்ளே சென்று மலம் கழித்த மாணவர்களை கண்டுபிடிக்க பெயர் பட்டியல் தயாரிக்கவும்... வீடு வீடாக சென்று ராயப்பன் பட்டி போலீஸ் ஸ்டேஷன்ல கம்பிளேன்ட் கொடுத்துருவோம் என்று மிரட்டும் போது உடனிருந்து உதவிய மாணவர்களே ...அந்த செயலை செய்தது ... என்பதை அடுத்த நாள் அறிய வரும்போது சிரிப்பு போலீஸ் தான் ஆசிரியர்கள் .


காமராஜர் பிறந்த நாள் விழாவில் எல்லோரும் பேசியும் ,படம் வரைந்தும், கட்டுரை எழுதியும் பரிசு பெறும் போது எனக்கும் பரிசு வேணும் சார்... என்று கேட்ட குட்டி அம்மு..

நீயும் ஏதாவது பேசு அம்மு...எனக்கு பேச தெரியாதே! என்று சார் கூறியதும்.. மேடையில் ஏறி, “அன்னைக்கு ஒரு நாள் எங்க அம்மா பொங்கல் செஞ்சாங்க. அன்னைக்கு வந்தாங்க அந்த தாத்தா .. வந்து பொங்கல் சாப்பிட்டுட்டு, அப்புறம் போயிட்டாங்க ...” என்கிறாள்.


யாரு பாப்பா?

அந்த தாத்தா தான் சார்..

எந்த தாத்தா ?

காமராஜர் தாத்தா தான் சார் ...

பரிசு உறுதியானது அம்முவுக்கு.. பாயசம் குடிச்சாரா பரவாயில்லையே?

அந்த தாத்தா என்ன டிரெஸ் போட்டு இருந்தாரு.... ? அம்மு

ம்....ம்.... வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி...

நிகழ்வு முடிந்து கொஞ்ச நேரம் கழித்து, “ ஏன் அம்மு ? நீ என்னமோ காமராஜர் தாத்தா உங்க வீட்டுக்கு வந்து பொங்கல் சாப்பிட்டாரு.. பாயசம் குடிச்சாருன்னு சொன்னியே ஆனா அவரு தான் செத்துப் போயிட்டாராம்லல பாப்பா ?” என்று சார் கேட்கிறார்..

அப்பவும் அம்மு கெத்து விடல .


சார்! அவரு சாகறதுக்கு முன்னாடி வந்தாருல்ல சார் அத சொன்னேன்... என்கிறாள்..

பரிசு என்னமோ... பென்சில் தான்..  "குழலினிது யாழினிது என்பர் தம் மழலைச் சொல் கேளதாவர்.. "

“சாரே என் மகன் கிட்ட வீட்டு தொறக்குச்சி வாங்கிக்கிறேன் சாரே?” என்று வரும் குடிகாரக தகப்பனின் பணி சூழலைக் கேட்கும் பொழுது நமக்கு கண்ணீர் வருகிறது..


அதே வேலையை பள்ளிக்கூடத்தில் ... குழந்தை அவசரத்தில் ஆயிருந்த பாத்ரூமை கழுவிவிட்டுக்கிட்டே "குட்டி குழந்தையை படிக்கிற இடத்துல ஒரு ஆயா போட்டோ தான் என்னவாம்? என்று ஆசிரியர் புலம்பும் போதும் சத்தமிட்டு சிரிப்போம்.

பள்ளிகளில் இருக்கும் மாணவர் மனசு Article 19 (1) A Right to Express ன் சிறு வடிவம் தானே ! அதில் செல்போன் எடுக்க போறேன் : அதற்கு கொஞ்சம் காசு சேர்த்து கொடுத்து உதவுங்கள் என்று கிஷோர் எழுதியிருப்பது நகைச்சுவையாக இருப்பினும் அவன் உரிமையை பயன்படுத்த தெரிந்திருப்பது பாராட்டுக்குரியது..

ஆசிரியர்களுக்கு குறைபட்டுக் கொள்ள, புலம்ப பல காரணம் இருப்பினும். மாணவர்களை விட நம்மை யாரும் சந்தோஷமாகவும் வைத்து கொள்ள முடியாது என்பதும் உண்மை. தேனி சுந்தர் ஆசிரியரின் வகுப்பறை நிகழ்வுகள் நம் மாணவர்களை இன்னும் அதிகமாய் ரசிக்க நேசிக்க வைக்கும் என்பதை மறுக்க முடியாது.
-
ஐ.சுமதி
முதுகலை வணிகவியல் ஆசிரியர், 
அ.மே.நி.பள்ளி செட்டிகுளம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!