உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு சார் : நூல் வாசிப்பு அனுபவம் : ஆசிரியர் ஐ.சுமதி
புத்தகத்தின் அட்டை படத்தையும் தலைப்பையும் பார்க்கும் போது உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்.. நூல் ரொம்ப polite மாதிரி தான் தெரியும்.. ஆனா அப்படி இல்ல... நம்முடைய அந்த ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு.. கட்டுரைகள் எல்லாமே ரௌத்திரம்..!
உனக்குரிய இடம் எங்கே?, விடுங்க சார்.. திட்டாதீங்க சார்.. படிக்க வைக்கவா? எதார்த்தத்தை விவாதிக்க வைக்கவா?, மாணவர்கள் எதை தெரிந்து கொள்ளணும் ?, கைய கட்டு ..வாய பொத்து .., கேள்வியா கேட்கிற கேள்வி?, எவ்வளவு தைரியம் பாஸ் உங்களுக்கு ? - இப்படியான இந்நூல் 25 கட்டுரைகளின் தொகுப்பு.
தலைப்புகளில் பல கேள்விகள்... இந்த கேள்விகளில் மாணவன் ஆசிரியரை நோக்கி கேட்கும் கேள்விகள் மட்டுமல்ல, ஆசிரியர் அதிகாரியை நோக்கி கேட்கும் கேள்விகளும் அடங்கும்..
கணக்கும் இனிக்கும் என்ற கட்டுரையில் கணக்கு ஆசிரியர் என்றாலே " ஏன் கோபம்? சிடுசிடுப்பு? சிரிச்சா என்ன? (கொஞ்சம் ஃப்ளாஷ்பேக் போய் பார்த்தால் நம் கணித ஆசிரியர் எல்லாருமே கொஞ்சம் உர்ன்னு தான் இருந்துருக்காங்க🤔) "சிரிக்கத் தெரியாத மனிதர்களைப் பார்த்தால் சிரிக்க தோன்றும் எனக்கு " என்கிற கவிஞர் வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வந்து போகிறது .
சாகித்தியன் சண்டை போடத்தான் வேண்டும் என்ற கட்டுரையில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களையும் பள்ளியில் சேர்த்து விட்டோம். ஆனால் அவர்களுக்கான பாடத்திட்டம் எங்கே? அவர்களை கையாள ஆசிரியர்களுக்கு பயிற்சி உண்டா?அந்த மாணவனுக்கான சிறப்பு போட்டிகள் மன்றங்கள் உண்டா?
கல்வியாண்டில் ஒரே ஒருநாள் மட்டுமே அவர்களுக்காக (scribe) தேர்வு எழுத செல்லும் போது ஆசிரியர்களாகிய நாம் வெளிப்படுத்துகிற அங்கலாய்ப்புகளும் புலம்பல்களும் நியாயம் தானா ? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டி இருக்கின்றது..
"அதிகாரிங்க என்ன வேணாலும் சொல்லுவாங்க.. என்ன சொன்னாலும் சரிங்க சார்னு சொல்லுங்க.. இல்லைன்னா, பேசாம அமைதியா இருங்க.. மறுத்து பேசாதீங்க.. விளக்கம் சொல்லாதீங்க.." என்பது புதிய மற்றும் கொஞ்சம் துடுக்கான ஆசிரியர்களுக்கு சீனீயர்களின் பாலபாடம்..( Pan india dialouge)
நாம் பெறுவதையே குழந்தைகளுக்கும் கொடுக்கிறோம். கைய கட்டு ..வாய பொத்து ... கேள்வி கேட்காத ...மறுத்து பேசாதே... அமைதி ஒழுங்கல்ல...!!
ஒரே நாளில் ஒருவன் எப்படி புத்தனாக முடியும். ஒருவர் கூறும்போது மற்றவர் அமைதியாக இருந்தாலோ ... சரி என்றாலோ நிச்சயம் அவர் கூறியதை கேட்க மாட்டார் என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உணராமல் உள்ளத்தில் ஒளி எப்படி உருவாகும்?
உணவு, உடை பயணம் , உறவுகளுக்கு இடையான நெருக்கம், பொழுதுபோக்குகள் எல்லாமே மாறிக்கிட்டு இருக்கு.. ஆசிரியர்கள் மட்டும் மாறாமல் 30 வருடத்திற்கு முன்பு இருந்த நமது ஆசிரியரை போலவே இருப்பது.. காலத்தோடு பொருந்தாமல் இருப்பது போன்றது (not a updated version) பொருத்தமில்லாதது .
ஆசிரியர் தேனி சுந்தரின் இந்த கட்டுரைகள் நம்மையே கேள்வி கேட்கும்.. கேள்விகளுக்கு இது நல்ல கேள்வி? ரொம்ப நல்ல கேள்வி? என்று சிரித்து கடக்காமல் ... இருக்க ஆசிரியர்களும், . அதிகாரிகளும் தற்போதய மனநிலையை மாற்ற வேண்டும்.. இல்லையேல் மாற்றப்படுவோம்..
"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல காலவகை யினானே "
-
ஐ.சுமதி, ஆசிரியர், செட்டிகுளம்

Comments
Post a Comment