Posts

Showing posts with the label டுஜக்டுஜக்

டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி - வாசிப்பு அனுபவம் : இளையவன் சிவா

Image
மழலைச் சிறகில் மனம் பெறும் அனுபவங்கள்.. எல்லோருக்கும் குழந்தைச் செல்வங்கள் வரமெனக் கிடைத்து வாழ்வாங்கு வாழ்கின்ற வாழ்வை இல்லறம் ஏற்படுத்தித் தருகிறது. ஆனால் எல்லோருமே குழந்தைகளின் இயல்பை, குழந்தைத் தன்மையை விரும்பி ரசிக்கின்ற அதே நேரம் அதை ஆவணமாக பதிவாக நினைவுபடுத்தி வைப்பதில்லை. அப்படி ஒரு அப்பாவின் டைரியில் தனது பிள்ளைகளின் மழலைத்தனமான வினாக்களையும் அவர்களின் குறும்புகளையும் பதிவு செய்து பொதுவெளியில் உலவ விட்டிருக்கிறார் தேனி சுந்தர். கல்வியின் பல அம்சங்களை குறித்து பொது அரங்குகளில் பல முக்கியமான விமர்சனங்களையும் விவாதங்களையும் நிகழ்த்தி வருபவர். கற்றல் கற்பித்தல் தொடர்பான அனுபவங்களை நூலாக எழுதியிருப்பவர் தேனி சுந்தர். சிறு குழந்தைகள் அப்பாவுடன் நடத்தும் உரையாடல் வழியே அவர்களுக்கு உரிய மழலைத்தனமும் எதையும் கேள்வி கேட்கும் தன்மையும் இயல்பாகவே அமைந்து விட்டு விடுதலையான சுதந்திரத்தனத்தில் பெரியவர்களின் வாழ்க்கை முறையையும் ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளின் வழியே வளரும் உரையாடலகளை கவிதைகளாக எழுதி தேனி சுந்தர் காட்சிப்படுத்தி இருக்கிறார். பொதுவாகவே எல்லோரது வீடுகளிலும் குழந்தைகள் தொடர்ந்...

டுஜக் டுஜக் (ஒரு அப்பாவின் டைரி ) - வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

Image
இந்நூல் நூறு பக்கங்களை கொண்டது. புதுக்கவிதை வடிவில் குழந்தையின் மழலை மொழியை பதிவு செய்துள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு பக்கத்தை வாசிக்கும் பொழுதும் நம் மனதில் ஒரு பிளாஷ் பேக் தோன்றும். நம் வீட்டுக் குழந்தைகளின் சிறுவயது நினைவுகள் ஞாபகத்திற்கு வரும். இந்த புத்தகத்தை வாசித்த பின் கண்ணில் காணும் குழந்தைகள் எல்லாம் (நடமாடும்) கவிதைகளாகவே தோன்றும். அவர்களின் ரசிகர்களாவோம் நாம்... அடுத்தவர்களின் டைரியை வாசிக்க கூடாது !ஆனால் இந்த அப்பாவின் டைரியை தைரியமாக வாசிக்கலாம்.. இது ஒரு அப்பாவின் டைரி அல்ல... அப்பாக்களின், அம்மாக்களின் டைரி... இந்த நூலை வாசிக்கும் பொழுது இப்படி ஒரு டைரி நாம் எழுதாமல் போனதுக்கான வருத்தம் தோன்றும்... புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தேதியை குறிப்பிட்டு இருக்கிறார் ஆசிரியர் - இது அனைத்தும் கொரோனா காலம் Lock down எனும் களம் அமைத்து தந்த நேரத்தில் எழுதப்பட்டது. அய்யோ... மின்னல் வெட்டுது பாப்பா ... உள்ள ஓடி வந்துரு. ...! அது நிம்மல் இல்லப்பா... கெட்டுப்போன லைட்டு....! இப்ப பாரு அமந்து அமந்து எரியும் ..,.! ---------------------------------- "கொஞ்ச நாள் கிளி வேணும் கிளி வேண...

டுஜக் டுஜக் நூல் குறித்து கனவு ஆசிரியர் இதழில்..

Image
நாம் எல்லோரும் குழந்தைகளோடு உரையாடி இருப்போம். நாம் வழக்கமாகப் பார்க்கும் பொருள்களையும் உயிரினங்களையும் அவர்கள் வேறொன்றாகப் பார்ப்பார்கள். கேள்விகளைத் தொடுத்துக் கொண்டே இருப்பார்கள். குழந்தைகளின் உலகம் என்ன என்பதை அவர்களிடம் இருந்தே தெரிந்து கொள்ளும் போது நாமும் குழந்தையாக இருக்கும் போது இப்படித்தான் இருந்திருப்போமா எனச் சிந்திக்க வைப்பார்கள். இந்நூலும் அப்படித்தான், இரண்டு குழந்தைகளும் ஒரு அப்பாவும் உரையாடுவதை அப்படியே மழலை மொழியில் தந்து படிக்கும் நம்மை மழலையாக்கிச் சிந்திக்க வைக்கிறது.. - கனவு ஆசிரியர்  டிசம்பர் 2024 இதழ் (பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளிவரும் மாத இதழ்)  

தமிழ் அமுது 211வது நிகழ்ச்சி : டுஜக் டுஜக்

டுஜக் டுஜக் நூல் அறிமுகம்  

ஓங்கூட்டு டூணா - வாசிப்பு அனுபவம் : ராஜசேகரன், ஆசிரியர்

வணக்கம் தோழர்.... படிச்சுட்டேன்.. உங்க டுஜக் டுஜக் மற்றும் ஓங்கட்டு டூணா - இந்த ரெண்டு புஷ்தகத்த படிச்சுட்டேன்.. கீத்தி,புலல்,ஷர்வீன், டார்வின், அபி, அனிருத்,அஜீஸ், யோகா,கலெக்டர் பவுனியா, திவ்யேஷ், பூவினி, சகானா, சிவாணி, யாஷனா, வெனிதாஸ்ரீ தஙக்ச்சி வித்யா, ஜீவனேஷ், சுபிக்ஷா, யோகஸ்ரீ , நந்துசேனா, அம்ரிதா மோடி, ரக்சித், மயூரி, மஞ்சுளா, கவிஸ், ஊமைகுசும்பன் பூங்கதிர், வித்யா, பாரதிராஜா, ரஜினி - இத்துணை காதாபாத்திரங்களை கண்முன் நிறுத்தி... வகுப்பறையிலும் வீட்டிலும், குட்டி குட்டி குழந்தைகளுடன் வாழும் உள்ளம்... எல்லாருடைய வீட்டிலும், வகுப்பறையிலும், நடக்கும் எதார்த்த உரைகளை சற்றே இல்லை இல்லை .. ஆழமாக சிந்திக்க தூண்டும் வகையில் எழுதி இருக்கீங்க.. அரிய பொக்கிஷம் ..‌‌.! டுஜக்.. டுஜக் மற்றும் ஓங்கட்டு டூணா... நூல்களில் குழந்தைகளின் மழலைகளின் சொற்களை கொண்டாடியுள்ளீர்கள்.... சிறப்பு சார்... 👍👍👍 - இராஜசேகரன், ஆசிரியர், தி.கூடலூர்

டுஜக் டுஜக் : நூல் குறித்து தினமலர் நாளிதழ்

Image
டுஜக் டுஜக் : நூல் குறித்த அறிமுகம் - தின மலர் நாளிதழ், சென்னை பதிப்பு

டுஜக் டுஜக் - ஒரு அப்பாவின் டைரி : வாசிப்பு அனுபவம் : ரமேஷ், நாராயணத் தேவன் பட்டி

Image
டுஜக்..டுஜக்... படித்தேன்.. நண்பர் சுந்தரை பாராட்ட வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன். புத்தகத்தை கீழே வைக்காமல் படித்தேன். சூப்பர்...! என் மகனின் மழலைப்பருவம் என் கண்முன் வந்து நிழலாடியது. அவனை பள்ளியில் சேர்க்க போகும் போது பள்ளியில் கேட்ட கேள்வி: யானை என்ன கலர்? அவன் சொன்னான்.. யானை, யானை கலர் தான்....! டுஜக்... டுஜக்... ஓர் அற்புத படைப்பு..! குழந்தைகளின் மொழியை, சிந்தனையை, ஆர்வத்தை, தெளிவாக பதிவு செய்து தொகுத்திருக்கிறார். தரமான உரையாடல்கள்.. தேதி வாரியான பதிவுகள் மிகவும் சிறப்பு.! கொரனா வந்து பிஸ்கோத்து பாக்கெட்ட தூக்கிட்டு போயிரும்! என கூறும் மழலையின் புரிதல் சுகானுபவம். டார்வின், விவேக் இறந்துவிட்டார் என பதிவு செய்யும் போது குழந்தைகளின் சமூகம் சார்ந்த சிந்தனைகளை புரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பற்றிய புரிதல் இல்லாமல் போனது சுவாரசியமானது. குழந்தைகளுக்கு எது பிடிக்குமோ அதனையே விரும்பி கற்றுக் கொள்கிறார்கள்.. நினைவிலும் வைத்துக் கொள்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. உதாரணமாக என்னிடம் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் அல்ஜீப்ராவில் மிக...