டுஜக் டுஜக் (ஒரு அப்பாவின் டைரி ) - வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

இந்நூல் நூறு பக்கங்களை கொண்டது. புதுக்கவிதை வடிவில் குழந்தையின் மழலை மொழியை பதிவு செய்துள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு பக்கத்தை வாசிக்கும் பொழுதும் நம் மனதில் ஒரு பிளாஷ் பேக் தோன்றும். நம் வீட்டுக் குழந்தைகளின் சிறுவயது நினைவுகள் ஞாபகத்திற்கு வரும்.

இந்த புத்தகத்தை வாசித்த பின் கண்ணில் காணும் குழந்தைகள் எல்லாம் (நடமாடும்) கவிதைகளாகவே தோன்றும். அவர்களின் ரசிகர்களாவோம் நாம்...


அடுத்தவர்களின் டைரியை வாசிக்க கூடாது !ஆனால் இந்த அப்பாவின் டைரியை தைரியமாக வாசிக்கலாம்.. இது ஒரு அப்பாவின் டைரி அல்ல... அப்பாக்களின், அம்மாக்களின் டைரி... இந்த நூலை வாசிக்கும் பொழுது இப்படி ஒரு டைரி நாம் எழுதாமல் போனதுக்கான வருத்தம் தோன்றும்...


புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தேதியை குறிப்பிட்டு இருக்கிறார் ஆசிரியர் - இது அனைத்தும் கொரோனா காலம் Lock down எனும் களம் அமைத்து தந்த நேரத்தில் எழுதப்பட்டது.



அய்யோ...
மின்னல் வெட்டுது பாப்பா ...
உள்ள ஓடி வந்துரு. ...!

அது நிம்மல் இல்லப்பா... கெட்டுப்போன லைட்டு....!
இப்ப பாரு அமந்து அமந்து எரியும் ..,.!

----------------------------------

"கொஞ்ச நாள்

கிளி வேணும்

கிளி வேணும்ன்னு... திரிஞ்சான்... 
கொஞ்ச நாள் பூனை வளர்க்கணும்னு 
சொல்லிக்கிட்டே இருந்தான்... " என்ற வரிகளை வாசிக்கும் போது எம் பொன்னு யானை வளர்க்கனும் .. வாங்கிட்டு வாப்பா ன்னு சொன்னதும் நினைவுக்கு வந்தது...


ஏம்ப்பா..
நானு... அண்ணன்..
நாமெல்லாம் தீபாவளிக்கு சீனி வேட்டு
போட்டோம்லப்பா...


ஆமாம் பாப்பா...
சீனி வேட்டு மாரி
உப்பு வேட்டும் இருக்காப்பா....?

பணிச்சுமை காரணமாக குழந்தைகளை மழலை (கவிதை) மொழி ரசித்து விட்டு கடந்து செல்லும் நாம்.. நான்கு வரிகள் எழுதி பின்னாளில் நம் பிள்ளைகளுக்கோ ... பேர பிள்ளைகளுக்கோ... பரிசளித்தால் அது உண்மையிலேயே எதிர்பாராத பரிசாக இருக்கும்...


நம் பாட்டியோ அத்தையோ தான் நம் குழந்தை பருவ சுட்டிதனங்களை நினைவுகளில் இருந்து மீண்டும் மீண்டும் பகிர்ந்து கொள்வர்... இந்த டைரி அப்படிபட்ட பாட்டியையும் அத்தையையும் நினைவுக்கு கொண்டு வரும் ❤️.


குழந்தைகளை திட்டி கிட்டே ...அடித்து கிட்டே வன்முறையை கையாளுபவர் இப்புத்தகத்தை வாசித்தால்... ஒரு நல்ல கவிதையை கசக்கி... கிழித்து எரிகின்ற குற்ற உணர்வை தரும்... மன மாற்றம் வரும்.

நூலின் பெயர் காரணம் .. சொல்லனும்.. டுஜக் டுஜக்..

...
பாப்பாவுக்கு கவுன் போட்டு விட்டேன்...

கரெக்டா வழிய கண்டுபிடிச்சி
கையை நுழைச்சு வெளியே எடுத்துட்டா
ஒரு டுஜக்

வலது கைக்கு
ஒரு டுஜக்!

இடது கைக்கு
ஒரு டுஜக் !!

 எப்படி டுஜக் டுஜக்😎...


"மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் 
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு "

I trust book as God... சரியான நேரத்தில் சரியான புத்தகம் நம் கைக்கு வந்து சேரும். என் மகனை கையாளுவதில் இருந்த சிரமம் குறைந்தது.. என் மகனின் மகளின் தாயாக மட்டும் இல்லாமல் ரசிகையாகவும் மாறிக் கொண்டிருக்கிறேன். நம் குழந்தை களை நாம் நேசிக்காமல், ரசிக்காமல் வேறு யார் நேசிக்க... going to Be the first Lover of my children...

ஐ. சுமதி, ஆசிரியர்
அ.மே.நி.ப.செட்டிகுளம்.


Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!