குழந்தைகள் மனதைப் படம் பிடித்து காட்டும் நூல் : சீனி சந்திரசேகரன்
குழந்தைகள் உலகை பார்க்க நமக்குத் தெரியவில்லை. குழந்தைகளின் மனம் கவிமனம். எப்போதும் படைப்பூக்கம் துள்ளும் குழந்தைகள் மனதைப் படம் பிடித்து காட்டும் நூல். நூலிலிருந்து.. அறிந்தும் அறியாத பருவத்திலேயே இந்த சமூகம் தன்னிடம் இருக்கும் சகலத்தையும் குழந்தைகள் தலையில் திணிக்கிறது அதில் கடவுள் மதம் சாதி சடங்கு சம்பிரதாயம் மூட பழக்கங்கள் எல்லாம் அடங்கும். பேய் சாமி எல்லாமே சும்மாச்சும் தான் பாப்பா.. வீட்டுப்பாடம் தரும் அல்லலை புரிய வைக்கும் நிகழ்வு... அம்மாச்சி வீட்டுக்கு போய் எழுத போறேன்னு சொல்லி ஸ்லேடும் நோட்டும் எடுத்து ஒரு பையில போட்டு கொண்டு போயிட்டாங்க இரண்டு மணி வாக்குல வாட்ஸ் அப்பில் ஒரு போட்டோ வந்துச்சு கட்டம் போட்டு எழுதி இருந்தது எழுதியது அம்மா.. எழுதச் சொன்னது டீச்சரா நடிச்ச குழந்தை.. இத இத இத இதெல்லாம் எழுதிட்டு வந்துருங்க ஈஸியா சொல்றாங்க டீச்சர் எழுதற எங்களுக்கு தானே கையெல்லாம் வலிக்குது குழந்தை டார்வின் கவலை... குழந்தைகளை எப்படி அழைத்தாலும் அழகுதான் எனச் சொல்லும் எனக்கு நான்கு பெயர். வட்டக் கண்ணாடி போட்டவர் எல்லாம் குழந்தைகளுக்கு காந்தி தான். அதிகாரிகள் விசிட் வருவதைப் பற...