குழந்தைகள் மனதைப் படம் பிடித்து காட்டும் நூல் : சீனி சந்திரசேகரன்

குழந்தைகள் உலகை பார்க்க நமக்குத் தெரியவில்லை. குழந்தைகளின் மனம் கவிமனம். எப்போதும் படைப்பூக்கம் துள்ளும் குழந்தைகள் மனதைப் படம் பிடித்து காட்டும் நூல்.


நூலிலிருந்து..

அறிந்தும் அறியாத பருவத்திலேயே இந்த சமூகம் தன்னிடம் இருக்கும் சகலத்தையும் குழந்தைகள் தலையில் திணிக்கிறது அதில் கடவுள் மதம் சாதி சடங்கு சம்பிரதாயம் மூட பழக்கங்கள் எல்லாம் அடங்கும்.


பேய் சாமி எல்லாமே
சும்மாச்சும் தான் பாப்பா..


வீட்டுப்பாடம் தரும் அல்லலை புரிய வைக்கும் நிகழ்வு...

அம்மாச்சி வீட்டுக்கு
போய் எழுத போறேன்னு
சொல்லி
ஸ்லேடும் நோட்டும்
எடுத்து ஒரு பையில போட்டு
கொண்டு போயிட்டாங்க

இரண்டு மணி வாக்குல
வாட்ஸ் அப்பில்
ஒரு போட்டோ வந்துச்சு
கட்டம் போட்டு எழுதி இருந்தது

எழுதியது அம்மா..
எழுதச் சொன்னது டீச்சரா நடிச்ச குழந்தை..



இத இத இத
இதெல்லாம் எழுதிட்டு
வந்துருங்க
ஈஸியா சொல்றாங்க டீச்சர்

எழுதற எங்களுக்கு தானே
கையெல்லாம் வலிக்குது

குழந்தை டார்வின் கவலை...




குழந்தைகளை எப்படி அழைத்தாலும் அழகுதான் எனச் சொல்லும் எனக்கு நான்கு பெயர்.

வட்டக் கண்ணாடி போட்டவர் எல்லாம் குழந்தைகளுக்கு காந்தி தான்.

அதிகாரிகள் விசிட் வருவதைப் பற்றி பயம் ஆசிரியர்களுக்கு தான். குழந்தைகளுக்கு அல்ல.


எங்க ஸ்கூலுக்கு வந்து
நாங்க நகம்
வெட்டி இருக்கோமா? இல்லையான்னு? பார்ப்பாங்களாப்பா

எனும் கேள்வி விளக்குகிறது

குழந்தைகளுக்கு விடை தெரியாத, தெரிந்து கொள்ள தவிக்கும், ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. சில சமயங்கள் மர்மமாக நீடிக்கும். சந்தர்ப்பம் வாய்க்கும்போது அதனை தெளிவு செய்து கொள்ள குழந்தைகள் தயாராக இருக்கின்றன.

அப்படி சில

ரோட்ல மஞ்சள் கலர்
எலுமிச்சம்பழம் கிடக்குல்ல
அதை மிதிச்சா
நம்ம வீட்டுக்கு பேய் வருமா?


ஏம்பா டிவிக்குள்ள
ஒடச்சி போனா
இவங்க எல்லாம்
இருப்பாங்களாப்பா


காக்கா கத்தினா
சொந்தக்காரங்க
வருவாங்களா


சாப்பிட சாப்பிட வயிறு
பெருசா இருக்குது பா
இன்னும் இன்னும் சாப்பிட்டால்
வயித்துக்குள்ள குழந்தை வருமா?


எப்ப பார்த்தாலும்
தண்ணிக்குள்ளே
இருக்கிற மீனுக்கு மட்டும்
காய்ச்சலே வர மாட்டுதே ஏன்?


தலையில மட்டும்
எதுக்குப்பா
இப்படி தொடச்ச உடனே
ஈரம் போக மாட்டேங்குது?


ஏம்பா மனுஷங்க மட்டும்
ரெண்டு கால்ல நடக்குறோம்?

எல்லா நட்சத்திரமும்
நம்பளவே தான்பா பார்க்குது.




சீட்டா அம்மா செத்துப் போயிட்டாங்க அப்பா
சீட்டா அவங்க வீட்டு நாய் பெயர்.

ஏடிஎம்மில் பணம் எடுத்து வரும் தந்தையை பார்த்து உள்ளே யாருமே இல்ல களவாடி வந்துட்டியா?

இருட்டு ஆயிடுச்சின்னா நம்மள மாதிரியே மேகமும் அவங்க வீட்டுக்கு போயிருமா?

உனக்கு முத்தம் கொடுத்தா இந்த தாடி என்னை குத்தி குத்தி வைக்குதுப்பா.

அன்னைக்கு சேரு போட்டி வச்சாங்க இல்ல.
அதுல நான் தோத்ததுக்கு பரிசு இந்தத் தட்டு.

வீட்டுப்பாடம் எழுதலையா?
அதெல்லாம் எழுதி முடிச்சு
50 வருஷம் ஆச்சு
இப்போ வந்து
கேட்டு இருக்கே?

இப்படி குழந்தைகள் எதையும் யோசிப்பதில்லை. அவர்களுக்கு உடனே தோன்றுவதை, உடனே சொல்லி விடுவார்கள்.

குழந்தைகளின் எண்ணங்களை, குழந்தை மொழியை, அப்படியே அச்சு அசலாக இலக்கியமாக படைத்திருக்கும் எழுத்து இந்நூல்.

படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களது குழந்தைகளுடனான உரையாடல்களை பசுமையாக நினைவுக்கு கொண்டு வருகிறது இந்த நூல்.

நூல்- நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன
தேனி சுந்தர்
தோழமையுடன்
சீனி சந்திர சேகரன்

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!