சுந்தரின் ஜட்ஜ்மெண்ட் ரொம்ப கரெக்ட்.... : கவிஞர் இதயநிலவன்
வணக்கம் தோழர்களே, சரியான ஜட்ஜ்மெண்டில் எழுதப்பட்டிருக்கும் உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் என்கிற கட்டுரை நூல். முதலில் இந்த தலைப்பிற்குள் எழுத வேண்டும் என்று முடிவு செய்த தோழர் ஆசிரியர் தேனி சுந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ....
தான் பணி செய்கிற துறையில் நிகழ்கிற செயல்பாடுகளை துணிச்சலான வார்த்தைகளோடு எழுதியிருக்கிறார் .... கல்வி என்பது இன்றைய காலகட்டத்தில் பணம் ஈட்டும் ஒரு ஏடிஎம் மிஷினை போல மாணவர்களை தயார் படுத்தும் அவல நிலை நிகழ்வதை ஒட்டுமொத்தமாக இந்தக் கட்டுரை தொகுதி சொல்லி முடிக்கிறது..
முதல் கட்டுரையில் தொடங்கி ஒவ்வொரு கட்டுரையிலும் அவர் அடிக்கோடிட்டு காட்டும் விடயங்கள் மாணவர்களுக்கு, மாணவர்களின் சிந்தனைக்கு, மாணவர்களின் வாழ்க்கை முறைக்கு மாணவர்களின் உடல் மற்றும் மனநிலையை இரண்டாம் பட்சமாக கருதும் ஒரு கல்விச் சூழல் இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அவர் தைரியமாக சொல்லிக் காட்டுகிறார்.
ஆசிரியர் பணி என்பது ஒரு அறப்பணி மட்டுமல்ல ஒரு பாதுகாப்பான பணி என்பதையும், நமக்கு இணையாக, அல்லது அதற்கும் மேல் ஆசிரியர் படிப்பை படித்துவிட்டு அன்றாடம் காட்சிகளாக இருக்கும் பல லட்சம் பேரை நாம் நினைவில் வைத்துக் கொண்டு செய்கிற இந்த ஆசிரியர் பணியை எதிர்கொள்ள வேண்டும் என்பதை சொல்வதற்கு தனியாக ஒரு தைரியம் வேண்டும் தான்.
படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் எல்லா பாடங்களுமே இலகுவாக வந்து விடாது. அப்படி வந்து விடாத பாடங்களை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் அதற்காக பள்ளிப்படிப்பை கூட நிறுத்திவிட்டு ஓடியவர்கள் எத்தனையோ பேர் என்றிருக்கும் போது, அப்படிப்பட்ட நிலைகளை சுலபமாக கடந்து செல்வதற்கு பள்ளிக் கல்வியில் என்ன வழிகாட்டுதல்கள் இருக்கின்றன என்று கேட்பது சமீபத்திய கல்விக்கு மிகவும் அவசியமானது....
எல்லோரும் கேட்கிற கேள்விதான் சரியாக படிக்காத மாணவர்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாத, மாணவர்களை அடிப்பதை தவிர வேற என்ன வழி இருக்கிறது. என்கிற கேள்விக்கு இந்த கட்டுரைகளில் பதில் இருக்கிறது.
அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் என்கிற இரண்டு அரசு பள்ளியில் இருக்கும் போது அதில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களை கட்டுப்படுத்த நிர்வாகமே ஆசிரியர்களுக்கு சில சுதந்திரங்களை கொடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம் ...
இது இன்னும் கூட தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் தோழர் சுந்தர் அவர்கள் சொல்வதைப்போல மாணவர்களை அவர்கள் போங்கிற்கு விட்டு அவர்களின் எதிர்காலத்தை அவர்கள் கையிலே ஒப்படைக்கிற ஒரு சுதந்திரமான சூழலை நாமும் எதிர்வரும் கல்வி திட்டங்களில் எதிர்பார்ப்போம்..
விடுங்க சார் திட்டாதீங்க சார் என்கிற கட்டுரையில் மாணவர்கள் ஒன்று சேர்ந்து இனிமேல் யாரையும் யார் மீதும் கோல்மூட்ட மாட்டோம், என்று அவர்கள் சபதம் எடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அது சுந்தர் அவர்கள் நடைமுறையில் சாத்தியப்படுத்தி இருந்தால் மிகவும் பாராட்டுக்குரிய செயலாக அது கருதப்பட வேண்டும் ...
நானும் சில பரிக்ஷாத் த முயற்சிகளை வகுப்பறையில் எடுப்பதுண்டு. அதாவது மாணவர்களை பேசவிட்டு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை நாம் உற்று நோக்குகிற போது சில நேரங்களில் அதிர்ச்சியாகவும் சில நேரங்களில் ஆச்சரியமாகவும் சில நேரங்களில் கோபமும் கூட வருவது உண்டு. ஆனால் அவர்கள் விவாதிக்கும் ஒவ்வொரு செயலும் நம்மைச் சுற்றியுள்ள பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் இவற்றையெல்லாம் பெரிதாக நினைத்து வாதிக்கிறார்களோ அவற்றையெல்லாம் தான் அவர்கள் புதிதாக நினைக்கிறார்கள். இந்த ஒரு இடத்தில் அவர்களின் போக்குகள் நாம் விட்டு விடாமல் அவர்களை இந்த இடத்தில் நெறிப்படுத்த வேண்டிய அவசியம் ஆசிரியர்களுக்கு இருக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் ...
ஆங்கில மீடியத்தில் நம்மையெல்லாம் பேச அழைக்கிறார்கள்,! என்பது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. அங்கே போனால் போன போதையில் எல்லோரும் அந்தப் பள்ளியை பற்றி வரிந்து தள்ளி இருப்பார்கள். ஆனால் அங்கேயும் சென்று அரசு பள்ளியை பற்றி பேசியது உண்மையிலேயே மிகவும் நெகிழ வைத்த ஒரு விடயமாக இருக்கிறது ...
உங்களுக்கு இன்னும் மிகப்பெரிய ஒரு இடர்பாடு என்னவென்றால் துறையின் சார்பாக பயிற்சி வகுப்பு என்று ஒன்றை நடத்துவார்கள். அந்த பயிற்சி வகுப்பிற்கு உயர் அதிகாரிகள் வருவார்கள். ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள் அனைவரும் குறிப்பாக கோபித்துக் கொள்ளக் கூடாது, ஆசிரியர்கள் அனைவரும் அந்த பயிற்சி எதற்காக எடுக்கப்படுகிறது? அது 100% அவசியம்... இதனால் மாணவர்கள் 150 சதவீதம் பலனடைவார்கள்... என்றெல்லாம் அதிகாரிகளிடம் கிளிப் பிள்ளையாக ஒப்பிக்க வேண்டும். என்று நமக்கு பயிற்சி வழங்குகிற அதிகாரிகள் நினைக்கிறார்கள்.
அந்த இடத்தில் நாம் எதார்த்தத்தை எழுந்து பேசுகிறபோது அதிகாரத்திற்கும் அதிகாரிகளுக்கும் நாம் எதிரானவர்கள் என்று சித்தரிக்கப்படுவோம். இந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. சில நேரங்களில் பயிற்சி ஆசிரியர்களே என்னிடத்தில் வந்து சார் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணி பேசுங்க சார்... என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். அது நேர்மையாக அணுக நினைக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் ஒரு சான்றிதழ் தான் ... அதிகாரிகள் தாமதமாக பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களை கண்டும் காணாமல் வாயிற் படியில் நிற்க வைக்கும் இடையுங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
தேனி மாவட்ட மையத்தில் பயிற்சி என்றால் 40 கிலோ மீட்டருக்கு அந்த பக்கம் இருக்கும் கூடலூரில் இருந்து அந்த ஆசிரியர் எத்தனை மணிக்கு புறப்பட வேண்டும் என்கிற சிந்தனை அதிகாரிகளுக்கும் வேண்டும்தானே. அதை தைரியமாக சுந்தர் அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார் ....
பள்ளிகளில் நடத்தப்படும் போட்டிகளில் ஏற்படும் குளறுபடிகளை தோழர் சுட்டிக்காட்டி இருக்கிறார் நான் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் அல்ல, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் என்ற காரணத்தினால் இந்த விவாதத்திற்குள் என்னால் வர முடியவில்லை...
தமிழ்நாட்டில் பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் கல்வி எவ்வாறெல்லாம் பாதிப்பது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த பாதிப்புகளை சரியாக்குவதற்கு ஒரு கல்வி திட்டத்தை கொண்டு வந்து அதை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக எண்ணும் எழுத்தும் என்கிற போர்வையில் உங்களில் குறிப்பாக ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை அறிவியல் சமூக அறிவியல் பாடங்களை மாணவர்கள் முழுவதுமாக படிக்க முடியாத ஒரு சூழ்நிலை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் சமூக அறிவியல் அறிவியல் பாடங்களை ஊறுகாய் போல் தொட்டுக் கொள்வதற்கு வைத்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு அடுத்த கட்டத்திற்கான பாடங்கள் இருக்கின்றன. அவற்றை யாரும் குறிப்பாக கல்வியாளர்கள் நினைவில் கொண்டு எதிர்வரும்பாடத்திட்டங்களை வடிவமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நான் முன்வைக்கிறேன்...
தோழர் சுந்தர் குறிப்பிடும் மற்றொரு விடயம் கல்வி என்பது கற்றுக் கொள்ளுதல் .. ஒரு பள்ளிக்கூடம் நான்கு சுவர் உள்ள வகுப்பறை குள்ளும், புத்தக நோட்டுக்குள்ளும், மட்டும் அல்ல அந்த கல்வி கற்றல் என்பது பரவலானது, இந்தப் பரவலான கல்வி திட்டங்களை இந்த நாடு மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அப்படி வழங்குகிற போது தான் அதை படிக்கிற அந்தச் சூழலில் படிக்கிற மாணவர்கள் நாம் ஈட்டுகிற பணத்தை நேர்மையான வழியில் ஈட்ட வேண்டும் என்கிற ஒரு எண்ணம் ஏற்படும் ......
ஆங்கில வழி பள்ளியில் பணம் கட்டி படிக்கும் மாணவர்கள் அந்த பணத்தைக் கட்டி படிக்க வைக்கும் பெற்றோர்கள் அந்த மாணவர்களிடத்தில் உனக்கு ப்ரீ கேஜியிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை நான் இத்தனை லட்சம் செலவு செய்திருக்கிறேன். என்று சுட்டிக் காட்டுகிற போது அந்த மாணவன் ஒரு கடன் காரனாக தன்னை உணர்வானே அன்றி மெத்த படித்த ஒரு கல்வி கற்றவனாக அவன் தன்னை உணரவே முடியாது. அப்படி இருக்கும்போது அவனை நேர்மையாக பணம் ஈட்ட வேண்டும் என்று நீங்கள் எப்படி கூறுவீர்கள். அதனால் தான் நாங்கள் கல்வியை பொதுப்பட்டியை வைக்கச் சொல்லி தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம் மாணவர்களுக்கு கல்வியும் மனிதர்கள் மொத்தத்திற்கும் மருத்துவமும் இலவசமாக கிடைக்கும் சூழல் உருவாகும் போது தான் ஒரு குற்றமற்ற சமூக சூழல் உருவாகும். கல்வி கற்கும் பொழுதே அவனை கடன்காரனாக ஆகும் கல்வியை வைத்துக்கொண்டு அவனை நேர்மையாக சம்பாதிக்க சொல்வது, முரண்பாடானது, முட்டாள்தனமானது என்பதை ஆணித்தரமாக சுந்தர் குறிப்பிடுகிறார். அதை நான் ஆமோதிக்கிறேன்.
அதுமட்டுமில்லாமல் ஆசிரியர்கள் கல்வி பணியைத் தாண்டி அவர்களுக்கு கொடுக்கப்படும் பணிகளின் சுமையை பல கட்டுரைகளில் அவர் எழுத்தாண்டு இருக்கிறார். எண்ணும் எழுத்தும் இயக்கம் குழந்தைகளுக்கு இன்னொரு கூண்டு என்பதை நான் ஏற்கனவே விவாதித்து இருந்தாலும் இந்த கட்டுரையில் அவர் சிறப்பாக தன்னுடைய கருத்தை எடுத்த ஆண்டு இருக்கிறார். மாண்டிச்சோரி அவர்கள் கூறிய கருத்துடன் அந்த கட்டுரை நிறைவு பெறுகிறது. அந்த கட்டுரையில் உள்ள நிலைதான் தற்போதைய எண்ணும் எழுத்தும் நிலை... புதிய கல்விக்கொள்கையில் ஏற்படுத்தப்படும் வளாகப் பள்ளிகளால் எப்படியெல்லாம் தமிழ்நாட்டின் ஏழை மக்களினுடைய கல்விச் சூழல் சுக்கு நூறாக உடைய போகிறது என்பதை அதில் எப்படி எல்லாம் கிராமம் தோறும் உள்ள அந்த அறிவு பொக்கிஷங்கள் எந்த நிலைக்கு ஆளாகப் போகிறது என்பதை நினைத்தாலே நெஞ்சு பதர்கிறது. இதை சிறப்பாக அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
பொதுவாக நாங்கள் ஆசிரியர் பள்ளி பயிற்சி முடித்துவிட்டு வேலைக்கு வரும் பொழுது ஒவ்வொரு ஆசிரியரிடமும் இருந்து வெளிவரும் ஒரு வார்த்தை.... நாம பயிற்சி எடுத்ததுக்கும், நாம இந்த வேலை பாக்குறதுக்கும் சம்பந்தமே இல்ல... என்று சொல்வார்கள் இது எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை அனைத்து ஆசிரியர்களும் உணர்ந்து இருக்கிறார்கள்... ஆனால் அதிகாரிகள் உணர்ந்ததாக தெரியவில்லை. வேடிக்கையாக ஒரு உரையாடல் உண்டு திரைப்படங்களில் களத்தில் நிற்கிறது நான்கடி மாப்ளே என்ற ஓர் உரையாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆசிரியர்கள் தான் களத்தில் நின்று வேலை செய்பவர்கள் . அந்த வேலை எப்படிப்பட்டது என்பது ஆசிரியர்களுக்கு தான் தெரியும். இன்னமும் கூட புதிய கல்வி திட்டங்களை உருவாக்கும் பொழுது அதிகபட்சமாக கிராமப்புறங்களில் இருக்கும் ஆசிரியர்களை அழைத்து புதிய கல்வி திட்டங்களை வகுக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த விமர்சனத்தின் மூலம் நான் முன் வைக்கிறேன் ....
ஒரு படத்தையோ ஒரு செய்தியையோ அந்த மாணவன் பார்க்கிறபோது படிக்கிற போது அவனுக்கு நெருக்கமானதாக அவன் உணர வேண்டும். அப்படிப்பட்துதானே பாடத்திட்டங்கள் .. இந்த அடிப்படை கல்வியில் அவசியம் என்பதை உணர வேண்டும் ....
உளவியலில் குறிப்பாக ஆசிரியர் பயிற்சி படிக்கும் நேரத்தில் கல்வி உளவியல் என்கிற ஒரு பாடம் இருக்கிறது. அந்தப் பாடத்தில் நுண்ணறிவிவு என்கிற ஒரு பாடம் இருக்கிறது. அது என்ன நுண்ணறிவு ஈவு என்றால் உங்கள் அனைவருக்கும் புரியும்படி சொன்னால் ஒரு மாணவனுக்கு 15 வயதாகிறது. இந்த 15 வயது என்பது அவனுடைய கால வயது, அவனுடைய நுண்ணறிவு வயது அவன் ஒன்றை கற்றுக் கொள்கிற வயது அல்லது அவன் ஒன்றை வெளிப்படுத்துகிற வயது .. அவனுக்கு மன வயது வெறும் பத்தாக இருக்கலாம். ஆனால் நமது கல்வித் திட்டம் அனைவரையும் 100 மார்க் எடுக்கும் பந்தய குதிரைகளாக தயார் படுத்தும் வேலைகளைத் தான் செய்கின்றன. ஆனால் அவனுடைய நுண்ணறிவு இவை பற்றி யாருமே யாருமே கவலைப்படுவதில்லை ...
ஒரு செய்தியை நான் சொல்ல முடியும் ஒரு பயிற்சியை வகுப்பில் ஒரு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் முதல்வர் அவர்கள் வந்து பேசுகிறார். ஆசிரியர்களை பற்றி மிகத் தர குறைவாக பேசுகிறார். பேசுகிறபோது ஒரு மாணவனுக்கு மூன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது அவனுக்கு எழுத்துக் கூட்டாமல் வாசிக்கவும் எழுதவும் தெரியவில்லை என்றால் நீங்கள் ஒரு ஆசிரியரே இல்லை ... நீங்கள் எல்லாம் இவ்வளவு சம்பளம் வாங்கிக் கொண்டு தண்டத்திற்கு பள்ளிக்கு வருகிறீர்கள்... என்று நேரடியாகவே அவர் குற்றம் சாட்டுகிறார் ... ஆனால் அந்த முதல்வர் தான் சார்ந்த ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சைக்காலஜி சொல்லிக் கொடுக்கும் பொழுது நுண்ணறிவை நுண்ணறிவு ஈவை புளி போட்டு விளக்கினார் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆகவே அதிகாரிகள் எதார்த்தம் எதுவோ அதுவாக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். அதுவாக ஆசிரியர்களை நடத்த வேண்டும். அதுவாக நீங்கள் ஆசிரியர்களை நடத்துகிற போது அவர்களும் அதுவாக மாணவர்களை நடத்துவார்கள்.
உண்மையில் சுந்தர் அவர்களின் இந்தக் கட்டுரை தொகுப்பை வாசித்து முடிக்கும் பொழுது சுந்தரின் ஜட்ஜ்மெண்ட் ரொம்ப கரெக்ட்....
கவிஞர் இதயநிலவன்
தேனி

Comments
Post a Comment