உனக்குள் புதிய ஆசிரியன் - இந்து தமிழ் திசை நாளிதழ்
ஒரு சின்ன பள்ளிக்கூடத்தில் வழக்கமாக வருவது போல அனுஸ்ரீ என்கிற குழந்தை அன்றும் பள்ளிக்கூடம் வந்திருக்கிறாள். தாமதமாக வந்ததற்கு ரெண்டு திட்டு திட்டிவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டேன். ஒரு விபத்தில் சிக்கி அனுஸ்ரீயின் அப்பாவும் தாத்தாவும் மருத்துவமனையில் இருக்கிற செய்தி நமக்குத் தெரியாமலேயே போய்விட்டது. காரணம் விலகல்.. ஆசிரியர் மாணவர் இடையே இடைவெளி... - இப்படியான தொடர் சுயபரிசோதனைக்குத் தன்னைத்தானே உட்படுத்திக் கொள்ளும் அரசுப் பள்ளி ஆசிரியர் தேனி சுந்தர். இவர் எழுதி பிரபல இதழ்களில் வெளியான கல்வி குறித்த கட்டுரைகளின் தொகுப்பு உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்.. தமிழ்நாடு பள்ளிக் கல்வியின் அனைத்துப் பரிமாணங்களையும் உற்றுக் கவனித்து பல்வேறு கோணங்களில் அலசும் இந்நூலை ஆசிரியர்கள் வாசித்தால், அவர்களும் புதிய ஆசிரியனாக உதித்தெழுவது திண்ணம்..
-
இந்து தமிழ் திசை நாளிதழ்
ஜன.13.2026

Comments
Post a Comment