நமது கல்விமுறையில் அறிவியல் மனப்பாங்கிற்கும் அறிவியல் பார்வைக்கும் உரிய இடம் கொடுக்க வேண்டும் - பேரா.பொ.இராஜமாணிக்கம்
முப்பது ஆண்டு கால அறிவியல் செயல்பாட்டாளர், ஏராளமான அறிவியல் பிரச்சாரக் கட்டுரைகள், நூல்கள் எழுதியவர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். தற்போது அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பில் துணைத்தலைவராகச் செயல்பட்டு வருகிறார். பி.ஆர். என்று அனைவராலும் அறியப்பட்ட பேரா.பொ.இராஜமாணிக்கம் அவர்களுடன் நமது புதுவிழுது இதழுக்கான நேர்காணல்.. தேனி திண்ணை மனித வள மேம்பாட்டு மையம் சார்பில் தங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.. விழுது இதழின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னவிதமான பணிகளை அங்கீகரித்து விருது வழங்கப்பட்டது..? பாராட்டுதலுக்கு நன்றி. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அறிவியல் பிரச்சாரப் பணிகளுக்காக அறிவியல் இயக்கத்தில் தொடர்ந்து இயங்கி வருவதைப் பாராட்டி வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் போது அறிவியல் இயக்கத்தில் சரியாக முப்பது வருடம் எனது பயணம் முடிந்திருந்தது. ஆம், அக்.1987ல் அகில இந்திய அறிவியல் பயணம் வரும் பொழுது ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் ஒருங்கிண...