Posts

Showing posts with the label ஓங்கூட்டு டூணா

மனக்கஷ்டமா இருக்கும்போது இந்த நூலை வாசிங்க.. : ரமேஷ் ராஜா

Image
குழந்தைகளோடு பேசுவதென்பது நம் மனதை இலகுவாக மாற்றிவிடும்.ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைகளை கவனமாக கையாள வேண்டிய அழுத்தத்தை மீறி,அவர்களோடு உரையாடும் வாய்ப்பு அவர்களின் பணியின் சுவாரசியத்தை கூட்டிவிடுகிறது. அப்படியான ஒரு ஆசிரியரின் வகுப்பறை நிகழ்வுகளின் தொகுப்பு தான் இந்த 'ஓங்கூட்டு டூணா'. நூலின் ஆசிரியர் பெயர் தேனி சுந்தர். பள்ளி ஆசிரியர்,அறிவியல் மற்றும் கல்வி செயற்பாட்டாளர். 'டுஜக் டுஜக்- ஒரு அப்பாவின் டைரி ', ' சீமையில் இல்லாத புத்தகம் ' ஆகிய நூல்களின் ஆசிரியர். தன் வகுப்பறையில் மாணவர்களோடு நடந்த சுவாசியமான வகுப்பறை நிகழ்வுகளை நூலாக்கியிருக்கிறார்.குழந்தைகள் எதிர்பாராத நேரங்களில் நம்மை நமக்கு உணர்த்தி விடுவார்கள். அப்படியான நிகழ்வுகள் அதிகம் நடக்கிற இடம் பள்ளி.அதுவும் ஆரம்பப்பள்ளிகள் இவ்வாறான நிகழ்வுகளால் நிரம்பி வழியும்.மாணவர்களுக்கிடையான சண்டைகள்,ஆசிரியருடனான பிரச்சனை,ஆசிரியரின் பிரச்சனை, மாணவர்களின் வீட்டுப் பிரச்சனைகள் போன்ற எல்லாவற்றையும் போற போக்குல அடித்து விளாசிவிடுவார்கள் குழந்தைகள். நூலில் ஒவ்வொரு நிகழ்விற்கும் வரையப்பட்ட ஓவியங்கள் சிறப்பு.வரைந...

ஓங்கூட்டு டூணா - மாற்றங்களைத் தருகிற முயற்சி : கனவு ஆசிரியர் இதழின் பின்னூட்டம்

Image
ஓர் ஆசிரியர் தன் மாணவர்களுடனான உரையாடலையும் மாணவர்கள் ஆசிரியரிடம் சொன்ன கதைகளையும் மிக நேர்த்தியாகக் கொண்டுள்ள நூல். சின்னச் சின்ன உரையாடல்களில் பாடமே நடத்தி முடிக்கிற அசாத்தியமான யுக்திகள் மிகப் புதுமையாக உள்ளன. மாணவர்களின் உள்ளுணர்வைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு பதில் அளிக்கும் விதம் உற்சாகத்தைத் தருகிறது. இந்நூலில் இடம்பெற்றுள்ள வகுப்பறைக் குறிப்புகள் மாற்றங்களைத் தருகிற முயற்சி எனலாம். கட்டாயம் வாங்கிப் படியுங்கள். - கனவு ஆசிரியர்  பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்காக நடத்தும் மாத இதழ் பிப்.2025  

“ஓங்கூட்டு டூணா” : நீலகிரி சித்ரா டீச்சர்

Image
டார்வின், புகழ்மதியோட அப்பா.. எனது மரியாதைக்குரிய நண்பர்.. குழந்தை நேய ஆசிரியர்.. சிறார் புத்தக எழுத்தாளர்..‌ அறிவியல் செயல்பாட்டாளர்.. இந்தப் புத்தகத்திலிருந்து தெரிந்து கொண்டது.. “நடிகர்”.. இத்தனை கதாப்பாத்திரங்களும் ஒருங்கே கொண்ட.. Theni Sundar அவர்களின் மற்றுமொரு படைப்பான.. அவர் ஆட்டோகிராப் இட்டு எனக்கு அனுப்பி வைத்த.. “ ஓங்கூட்டு டூணா “.. வாசித்தேன். அதன் பின்னூட்டத்தை பகிராமல் இருக்க முடியுமா?!! “ ஓங்கூட்டு டூணா ” இந்த வார்த்தைகள் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பரிட்சயமானது தான்.. ஆனால் எத்தனை பேர் அந்த மழலை மொழிகளை ரசித்திருப்பார்கள்.. பதிவு செய்ய முன் வந்திருப்பார்கள்?!!.. அபியின் கதையில் ஆரம்பித்த புத்தகம் இறுதியில்.. “ஐ லைக் இட்” என்ற பாரதிராஜா வின் பிரபலமான டயலாக் உடன் முடிந்திருந்தது சிறப்பு.. இடையில் பதிவாகியுள்ள வகுப்பறை அனுபவங்கள் அருமையிலும் அருமை.. பொதுவாகவே ஆசிரியர்களாகிய அனைவருக்குமே வகுப்பறை அனுபவங்கள் இருக்கும்.. ஆனால் இது போன்ற ஒரு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த உணர்வுப்பூர்வமான அனுபவங்கள் வாய்க்கப் பெற்ற வரம் பெற்றவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாகிய நாம்...

உள்ளுட்டேன் சார்..! - பேரா ச.மாடசாமி

தனித்து நிற்கும் ஆசிரியரை அல்ல.. கண்கள் எப்போதும் தேடுவது… கலந்து நிற்கும் ஆசிரியரை- குழந்தைகளோடு கலந்து நிற்கும் ஆசிரியரை! அப்படி நாங்கள் தேடிக் கண்டுபிடித்த ஆசிரியர்களில் முக்கியமானவர் - தேனி சுந்தர். இவர் மொழி, சிந்தனை, செயல் ஒவ்வொன்றிலும் கல்விக்கான வேரைக் காண்கிறோம். குழந்தைகளின் மொழி - இலக்கியம் ஆனது இவரால்... குழந்தைகள் சொல்லும் டுஜக் டுஜக்கை இசைத் துணுக்குகள் என்றவர் இவர். ‘காக்காச்சி அங்கக்கு’க்கு டிக்சனரியில் அர்த்தம் இல்லை. சுந்தரின் எழுத்துலகில் அர்த்தம் இருக்கிறது. ‘இந்த மாடு பேரு என்னப்பா?’ என்று குழந்தை முன்வைத்த கேள்விக்குப் பெரியவர்கள் உலகில் விடை இல்லை. நெகிழ்வான உலகம் முன்வைக்கும் கேள்விக்கு இறுகிய உலகத்தில் விடை கிடைக்குமா? குழந்தை உலகில் பயணிக்க நம் அதிகாரம், அகங்காரம் இரண்டையும் மூட்டை கட்டி வைக்க வேண்டும். அது ஒரு வாய்ப்பு. மீண்டும் அந்த வாய்ப்பு ‘ஓங்கூட்டு டூணா’வில் கிடைத்தது. வெளியே வேறொருவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, ‘சுந்தர் சார்! சுந்தர் சார்!’ என்று குழந்தைகள் கூப்பிடுகின்றனர். வகுப்பறையில் நிலவும் இந்த சுதந்திரம் அழகானது; அபூர்வமானது. நான் மிக ரசித்...

"ஓங்கூட்டு டூணா" - நானும் "ஐ லைக் இட்..! - மனத்துணைநாதன்

"குழந்தைங்க இப்பவெல்லாம் ரொம்ப மோசங்க.. சொல் பேச்சே கேட்கிறதில்ல.. அடிச்சா தான் உருப்பிடுவாங்க.. எங்க கையில் இருந்த கம்ப தான் பிடுங்கிட்டாங்களே!"- இப்படி தான் குழந்தைகள் மீதான அக்கறையும் பரிவும் பரவலாய் பொங்கி வழிகிறது. ஆம், குழந்தைகளை குற்றவாளிகளை போல அணுகுகிற பார்வை தொடர்ந்த வண்ணம் உள்ளது. குழந்தைகள் அவர்களது இயல்பை, அது தவறோ, சரியோ... வெளிப்படுத்தி விடுவார்கள்.. பெரியவர்களைப் போல உள்ளும் புறமும் வேறு வேறாக அவர்கள் இருப்பதில்லை. எப்பொழுதும் நான் சொல்வதை மட்டும் செய் என்றால் அது சரியாகுமா? "ஏய்.. சாருக்கு நான் தான் எட்டுப் போட சொல்லிக் கொடுத்தேன்..!" என்று குழந்தைகள் சொன்னால் "ஆமாம்" என்று அதை ஏற்று சிரிக்கிற மனங்கள் தேவை அல்லவா...? இயல்பாக ஒரு மாணவனுக்கும் ஆசிரியருக்கும் இடையேயான உரையாடல்கள் பற்றி பெரிதாக எங்குமே பதிவு செய்யப்படவில்லை. அதுவும் அதே குழந்தைகளுக்கான உரையாடல் மொழியில்... பாடங்களுக்கு அப்பால் வகுப்பறையில் நடக்கின்ற உயிரோட்டமான ஒரு அசல் சூழலை பேசவோ அதை முக்கியத்துவம் கருதி எழுதி ஒரு புத்தகமாகவோ வெளியிட யாரும் முயலவில்லை. தேனி சுந்தர் அவர்கள் அ...

ஓங்கூட்டு டூணா : தினமலர் நாளிதழ் நூலறிமுகம்

Image
மழலையர் வகுப்பறையில் பெற்ற அனுபவங்களை இலக்கிய மனதுடன் பகிர்ந்துள்ள நுால். நிகழ்வுகளை எளிய கவிதைகள் போல் சுவாரசியம் குன்றாமல் தருகிறது. வாழும் சூழலை புரிய துடிக்கும் மழலையர் செயலை உள்வாங்கி அற்புதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கற்பிக்கும் போதே கற்றலும் உணர்வுப்பூர்வமாக வெளிப்பட்டுள்ளது. அறியாமல் தவிப்பது போன்ற ஆசிரியரின் பாவனைகள், எளிய கற்பித்தல் உத்தியாக வெளிப்பட்டுள்ளன.வகுப்பறையை கூர்ந்து கேட்டல், விழிப்புடன் இருத்தல், சமநோக்கு பார்வை என மழலையருக்கு கற்பிக்கும் ஆசிரியருக்கு இருக்க வேண்டிய பண்புகளை வெளிப்படுத்துகிறது. பதிவாகியுள்ள ஆக்கங்கள், மழலை மொழியை மகிழ்வுடன் உள்வாங்கிய இனிய கவிதைகள் போல் இதம் தருகின்றன. – மலர் தினமலர் நாளிதழ் நூலறிமுகம்

வளர்ந்து வரும் ஓர் இலக்கிய வகை இது - ச.தமிழ்ச்செல்வன்

Image
டுஜக் டுஜக் என்கிற நூலின் மூலமாக புகழ்பெற்ற எழுத்தாளர் தேனி சுந்தரின் இரண்டாவது முயற்சி இது. டுஜக் டுஜக் நூலில் அவர், அவருடைய குழந்தைகளின் உரையாடல்களையும் அவர்களுடனான உரையாடல்களையும் தொகுத்திருந்தார். ஆசிரியரான அவர் இந்த நூலில் வகுப்பறைக் குழந்தைகளின் பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் படம் பிடித்திருக்கிறார்.. தமிழில் இப்போது வளர்ந்து வரும் ஓர் இலக்கிய வகை இது. குழந்தைகளின் உலகத்துக்குள் நுழைய பெரியவர்களுக்கு எளிதில் பாஸ்போர்ட் கிடைப்பதில்லை. அந்த பாஸ்போர்ட்டுக்காக பலரும் மனுப் போட்டுக் கொண்டுள்ளார்கள் பலகாலமாக.. குழந்தைகளுடன் நடத்தும் உரையாடல்கள் அவர்களின் மனப்போக்கு எத்திசையில் செல்கிறது என்பதைக் கணிக்க உதவும் கருவியாக பயன்படுவதை இத்தகைய நூல்கள் காட்டுகின்றன.. வீட்டுக்கு நிறைய விருந்தாளிங்க வந்திருக்கும் போது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர், அன்று வகுப்பில் அவள் அழுதுகொண்டே இருந்தாலும் பள்ளிக்கூடம் போனால் நாலு எழுத்துப் படிச்சுக்குவாளே என்று சொல்கிறார்கள். வீடு நிறைய விருந்தாளிகள் வந்திருக்கும் போது வீட்டில் இருந்தால் குழந்தைகள் எவ்வளவோ கத்துக்குமே என்று தேனி சுந்தர் எழுதுகிற...

ஓங்கூட்டு டூணா _வாசிப்பு அனுபவம் : அருந்ததி

தேனி சுந்தர் அவர்கள் எழுதிய ஓங்கூட்டு டூணா _ புத்தகத்தை நானும் வாசித்தேன். அதுவும் இரண்டு முறை...! எனை வெகுவாக கவர்ந்த எழுத்து நடை... இதே விடயத்தை இன்னொருவர் இதே போல எழுத முடியுமா என தெரியவில்லை. இது அவருக்கே உரிய தனி நடை.. புத்தகத்தை படித்தபோது...  சிரித்த சிரிப்பிற்கு அளவே இல்லை.  அப்படி ஒரு நகைச்சுவை. ஆமாம், நானும் 20 ஆண்டுகள் தொடக்கப் பள்ளி ஆசிரியை தான்... அரை மணி நேரத்தில் விறுவிறுப்பாக வாசிக்கலாம். 'இயலாதென்று முயலாதவர்கள்... இறக்கை இருந்தும் பறப்பது இல்லை' ஆம்... மாற்று சிந்தனையுடன் புத்தகம் படைத்து... இதை பறை சாற்றி இருக்கிறார் ஆசிரியர்.. குழந்தைகளின் அனுபவங்கள் சார்ந்த வரிகளிலும் வகுப்பறையை தாண்டி... நாம் மண்வாசனையை கவனிக்கலாம்.' எழுத முனைகையில் தான்... எழுத்தாளர் அருமை தெரிகிறது. அப்படி ஒரு அருமையான எழுத்தில்...  தாங்கள் மனதை கவர்கிறீர்கள். வாழ்க.. வளர்க...💐 அன்புடன் தோழமை அருந்ததி ஆசிரியை, தேனி

ஓங்கூட்டு டூணா - வாசிப்பு அனுபவம் : தேனி சீருடையான்

குழந்தைகளே நடித்து குழந்தைகளே இயக்கும் கலைக் காவியம்...! “உனக்குத் தெரியும்; ஒரு குழந்தை ஒரு வார்த்தையைச் சொல்லும்போது அது உனக்குத் தெரியும் என்ற உண்மை உனக்குப் புரியும்.”  நான் ஆறாம் வகுப்பு வாசித்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்காவில் இருந்தும் லண்டனில் இருந்தும் வெளிவந்த பிரெய்லி புத்தகங்களை வாங்கி வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவற்றில் குழந்தைகளுக்கான பருவ ஏடு ”சில்ட்ரன்ஸ் ஃப்ரண்ட்” முகப்பு அட்டையில் மேற்கண்ட வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். (you know that truth when a child says it in her language.) ஒரு குழந்தை அனுதினமும் பேசும் மொழிதான் என்றாலும் அது புதிய திசையில் இருந்து புறப்பட்டு புதிய இலக்கு நோக்கிப் பயணிப்பதை உணர முடிகிறது. நம் முகத்தை நாமே பார்த்துக் கொள்வது போல நமக்கே ஆச்சர்யமாய் இருக்கிறது. அனுதினமும் கண்டு கேட்டவை என்றாலும் ஓர் குழந்தை நல விரும்பியால்தான் அதை ஆவணப் படுத்த முடிகிறது.. தேனிசுந்தர் அதைச் செய்திருக்கிறார். “குழந்தை இயலின் ஆவணக் காப்பகம் தேனிசுந்தர்” என்றால் அது மிகையல்ல. ஏற்கனவே குழந்தைகளுக்கான இரண்டு நூல்கள் எழுதி அதை நிரூபித்திருக்கிறார். அவற்றின் ப...

ஓங்கூட்டு டூணா - வாசிப்பு அனுபவம் : ராஜசேகரன், ஆசிரியர்

வணக்கம் தோழர்.... படிச்சுட்டேன்.. உங்க டுஜக் டுஜக் மற்றும் ஓங்கட்டு டூணா - இந்த ரெண்டு புஷ்தகத்த படிச்சுட்டேன்.. கீத்தி,புலல்,ஷர்வீன், டார்வின், அபி, அனிருத்,அஜீஸ், யோகா,கலெக்டர் பவுனியா, திவ்யேஷ், பூவினி, சகானா, சிவாணி, யாஷனா, வெனிதாஸ்ரீ தஙக்ச்சி வித்யா, ஜீவனேஷ், சுபிக்ஷா, யோகஸ்ரீ , நந்துசேனா, அம்ரிதா மோடி, ரக்சித், மயூரி, மஞ்சுளா, கவிஸ், ஊமைகுசும்பன் பூங்கதிர், வித்யா, பாரதிராஜா, ரஜினி - இத்துணை காதாபாத்திரங்களை கண்முன் நிறுத்தி... வகுப்பறையிலும் வீட்டிலும், குட்டி குட்டி குழந்தைகளுடன் வாழும் உள்ளம்... எல்லாருடைய வீட்டிலும், வகுப்பறையிலும், நடக்கும் எதார்த்த உரைகளை சற்றே இல்லை இல்லை .. ஆழமாக சிந்திக்க தூண்டும் வகையில் எழுதி இருக்கீங்க.. அரிய பொக்கிஷம் ..‌‌.! டுஜக்.. டுஜக் மற்றும் ஓங்கட்டு டூணா... நூல்களில் குழந்தைகளின் மழலைகளின் சொற்களை கொண்டாடியுள்ளீர்கள்.... சிறப்பு சார்... 👍👍👍 - இராஜசேகரன், ஆசிரியர், தி.கூடலூர்

ஓங்கூட்டு டூணா - வாசிப்பு அனுபவம்.. : பிரதீபா

வணக்கம் சார், உங்களது "ஓங்கூட்டு டூணா"- நூலைப் படித்த போது ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்ற ஆசை வந்து விட்டது எனக்குள்... நான் சந்தித்த, கடந்து வந்த ஆண் ஆசிரியர்களுள் வேறுபட்டவர் நீங்கள்.. ஆமாம் சார், தாயுள்ளம் கொண்ட தாயுமானவனாய் உணர்கிறேன் யோகா பாப்பாவின் உணர்வுகளை மதிக்கும் அந்தப் பதிவை வாசிக்கும் பொழுது..! ஜனநாயக வகுப்பறை என்பதை வெறும் வாய் வார்த்தையோடு நிறுத்தி விடாமல் செயலில் காண்பித்து உள்ளீர்கள்.. நூலின் ஒவ்வொரு பக்கமும் ரசிக்க வைக்கிறது சார், வாழ்த்துகள்.. உங்கள் வகுப்பறையை கண் முன்னே கொண்டு வந்து காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள்.. பேரானந்தமாய் உணர்கிறேன். குரங்கை கரையில் சேர்க்கும் பவன்யா, எண்கள் படிக்கும் வித்யா,ஆங்கில வகுப்பில் சுபிக்சாவின் தன்னம்பிக்கையான வார்த்தை வரை பாடப்பொருள் அறிமுகத்திலும் ஜனநாயகமே... மாணவர்கள் உங்களை தன் தந்தையைப் போல் பாவித்து உள்ளார்கள், நீங்களும் அவர்களை உங்கள் குழந்தையைப் போல் பாவித்து உள்ளீர்கள் என்பதற்கு உங்கள் எழுத்தே சாட்சி.. வாசிக்கத் தொடங்கி, கடைசி பக்கத்தை முடிக்கும் வரை சிரித்துக் கொண்டே இருந்தேன்.. இப்படி ஒர...

ஓங்கூட்டு டூணா.! - வாசிப்பு அனுபவம் : மதுரை அமுதா செல்வி

தோழர் தேனி சுந்தர் அவர்கள் எழுதிய ஓங்கூட்டு டூணா..!  நூலை வாசித்து முடித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்து விட்டது. படிக்கும் அத்தனை புத்தகங்களை குறித்த வாசிப்பு அனுபவங்களை எழுத வேண்டும் என்ற பேராசை மனதில் எழுந்து கொண்டே இருந்தாலும் சூழல் காரணமாக டைரியில் குறிப்பெடுக்கும் கிறுக்கல்களுடன் மட்டுமே நின்று போகின்றது. அதையும் மீறி இந்த புத்தகம் தரும் வாசிப்பு அனுபவத்தை நாலு பேருக்கு சொல்லியே ஆக வேண்டும் என்ற ஆவல் சில நேரங்களில் வலுக்கட்டாயமாக என்னை எழுத உந்தித் தள்ளுகிறது அப்படிப்பட்ட உந்துதலின் காரணமாகவே இதை எழுத தொடங்கினேன் ஒரே மூச்சில் எழுத முடியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக எழுதிய அனுபவம் வித்தியாசமானது. காத்திருக்கும் கனப்பொழுதுகளில் கூட 4 வரி எழுதிவிட்டு பயணத்தை தொடரும் போது நான் எந்த ரோட்டில் பயணம் செய்தாலும் என் நினைவுக்குள் அந்த குழந்தைகளின் குறும்புகளே நிரம்பி வழிந்தது . மாதங்களை கடந்த பிறகும் மனதை விட்டு இறங்கிச் செல்ல மறுக்கும் அந்த குழந்தைகளின் உலகம் அற்புதமானது. அவர்களின் உலகில் வாழ எத்தனை பேருக்கு அதிர்ஷ்டம் இருக்கும் என்று சொல்லி விட முடியாது. குழந்தைகளோடு பணியாற்ற...

ஓங்கூட்டு டூணா: வாசிப்பு அனுபவம் : மா.காமுத்துரை

கடந்த சில தினங்களுக்கு முன்பு எங்கள் மண்ணின் மூத்த படைப்பாளி, அன்புத் தோழர் தேனி மா. காமுத்துரை அவர்கள் "ஒங்கூட்டு டூணா.." நூலை வாசித்து விட்டு, தேனி பேச்சு வழக்கிலேயே தன் வாசிப்பு அனுபவத்தை அனுப்பி இருந்தார்.. அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.. அந்தப் பதிவை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.. ############################################################## சுந்தர் கூட டூணா... ஆமா, என்னிய நோகடிச்ச புத்தகத்த அவுரு பாட்டுக்கு எழுதுனா, பழமா வுடுவாங்க. எம்படிப்புத்தான இன்னிக்கிப்பூராம்.. நான் டூணா. இவரோட முந்திய நூல்களான டுஜக் டுஜக், சீமையில் இல்லாத புத்தகத்த படிச்சப்ப என்னமோ மாதரியா இருந்திச்சி.. ஆனா அதச் சொல்ல.. ம்ம்.. என்னா சொல்லன்டு வெளங்கல... ஆமா, என்னமோ இவுரும் இவுரு பிள்ளைகளும் மட்டுந்தே ஊர்ல இருக்க மாதிரியும் வேறு யாருக்கும் பிள்ளைகளே இல்லாத மானிக்கி, ரொம்ப தான் செல்லங் கொஞ்சி எழுதியிருப்பாரு. அன்னிக்கே சுந்தர் கூட மனசுக்குள்ளயே டூணா விட்டுட்டேன்.. ஆனா இந்த "ஓங்கூட்டு டூணா" புஸ்தகம் வாத்யாருக்கும் க்ளாஸ் பிள்ளைகளுக்குமான பேச்சு. உம்மயச் சொ...

ஓங்கூட்டு டூணா: வாசிப்பு அனுபவம் : சக.முத்துக்கண்ணன்

சுந்தர் வீட்டிலிருந்து வகுப்பறைக்கு வந்திருக்கிறார். அதே டுஜக் டுஜக் பாணிதான் ஆனால் இது வகுப்பறைக் குழந்தைகள். டார்வினும் புகழ்மதியும் சுந்தரின் பிள்ளைகள் மட்டுமில்லை; டுஜக் நூலினை வாசித்த பலருக்கும் உறவாகியிருந்தார்கள். டுஜக் டுஜக் சுந்தர் எழுத்தின் மிகச்சிறந்த அடையாளம். அது ஒரு முன்மாதிரி வகைமை. ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளுக்காக எழுதி வைக்க அப்படியொரு டைரியை அறிமுகப்படுத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாய் வந்த சீமையில் இல்லாத புத்தகம் டுஜக்-கின் இரண்டாம் பாகம் போல வந்திருந்தது. இப்போது "ஓங்கூட்டு டூணா...!" - வகுப்பறைக் குறிப்புகள். குழந்தைகளுக்கும் தனக்குமான உரையாடலை தொடர்ந்து எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார் சுந்தர் என்பதை அறிய முடிகிறது. இதுவரை தொடக்கப்பள்ளி வகுப்பறை அனுபவங்களை யாரும் தொகுப்பாக எழுதி வெளியிட்டது போலத் தெரியவில்லை. இப்படித் தொடங்கி வைத்திருப்பதை ஒரு கல்வி சார் செயல்பாட்டாளனாக வரவேற்கிறேன். இது வேண்டும். பலரால் இதுபோல தொடர்ந்து எழுதப்பட வேண்டும். ஈரச் சிலேட்டைக் காய வைக்க ஒரு மந்திரம் சொல்கிறார்: ''அம்மா சட்ட காஞ்சுக்க அப்பா சட்ட காயாத தாத்தா சட...

ஓங்கூட்டு டூணா - வாசிப்பு அனுபவம் : இரா. தெ. முத்து

தொடக்கப்பள்ளி பால்வாடி மாணவர்கள் உடனான அனுபவங்களை சின்ன சின்னதா எழுதி இருக்கிறார் வாத்தியார் தேனி சுந்தர். அபி சொல்லும் கதையைப் படிக்கையில் நூல் முழுவதும் வாசித்து விட வேண்டும் என்ற ஆர்வம் பொங்கியது. அப்படி என்ன சொன்னாள் அபி? அபி சொன்ன கதையில சிங்கத்துக்கும் மாட்டுக்கும் சண்டை... மாட்டோட கொம்பு வானம் அளவிற்கு பெரியது. மாடு முட்டியதால் சிங்கம் வானத்தில் பறந்து போய் விழுகின்றது. அப்படி என்றால் மாடு என்னா வேகத்தில் முட்டியிருக்கும் என அடுத்த வரியை வாசித்தால் மாடு செத்துப் போச்சு என பொசுக்கென்று கதையை முடிக்கிறாள் அபி. இந்த இடம் ரொம்ப முக்கியமான இடம்.. வானம் உயரத்திற்கு கொம்பு இருந்த மாடு, தான் முட்டியதால் வானத்தில் பறந்து போய் விழுந்த சிங்கம் அல்லவா செத்துப் போயிருக்க வேண்டும்? இப்படி சின்னச் சின்ன கவிதை போன்ற வடிவத்தில், பால்வாடி மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்களோடு கற்ற அனுபவங்களை வகுப்பறை டயரி குறிப்புகளாக ஓங்கூட்டு டூணா எனும் சிறுவர்களுக்கான அறிதல் நூலை கொண்டு வந்திருக்கிறார் தேனிசுந்தர்.. தேனி சுந்தர் சாருக்கு வாழ்த்துகள்; நன்றிகள். நூலை எழுத ஆர்வத்தை உருவாக்கிய பேராசிரியர் மாடசாமி சா...

ஓங்கூட்டு டூணா..! : வகுப்பறை அலப்பறை – து.பா.பரமேஸ்வரி

Image
இலக்கைத் தொலைத்த வகுப்பறைகளும் இருப்பையே தொலைத்த குழந்தைகளும் மறந்து போன மந்திரம்…! அதுவே “ஓங்கூட்டு டூணா” என்ற ஒற்றைத் தாரக மந்திரம். செல்லக் கோபங்களுக்கும் அதைப் பரிமாறிய பின்பாக முட்டிக் கொள்ளும் கண்ணீர் குமிழிகளுக்கும் இடையிலான பாலம். நீரில் எழுதிய எழுத்து போல…. முடிக்கும் முன்னமே கரைந்து விடும்…காற்றில் அடித்து செல்லும் புழுதிபோல கலந்து விடும் அவர்களின் வெள்ளை அன்பின் வளிவெளியில்.. கணநேரம் காணாமலே போய் விடும். “ஓங்கூட்டு டூணா” எழுத்தாளர் தேனி சுந்தர் அவர்களின் அன்றாடம் தரிசிக்கும் வகுப்பாலயத்தின் மூலவர்களான பிள்ளைத்தெய்வங்கள் தனக்கு வழங்கிய ஆசீர்வாதங்களையும், நிதம் அர்ச்சிக்கும் அபிஷேக விசேஷங்களையும், பாராயணம் செய்யும் ஜெபங்களையும், வழிபாட்டுத் துதிகளையும் சேகரித்து கவின் உலகின் மழலைக் காவியமாகப் நமக்கு வழங்கியுள்ளது. வகுப்பறை வாசத்தைப் பள்ளிப் பருவத்தில் தொலைத்த வாசகருக்கு மீண்டும் மாணவர்களாகப் பயணிக்கும் தம்மை இவர்கள் மத்தியில் தேடவும் ஒரு வாய்ப்பாக நினைவாலயத்தின் அருங்காட்சியகமாக இந்நூல் திகழ்கிறது. குழந்தைகளைப் பற்றி எழுத பெரிதாக என்ன தெரிந்திருக்க வேண்டும். பாரட்டும் அளவிற்கு...