ஓங்கூட்டு டூணா: வாசிப்பு அனுபவம் : சக.முத்துக்கண்ணன்
சுந்தர் வீட்டிலிருந்து வகுப்பறைக்கு வந்திருக்கிறார். அதே டுஜக் டுஜக் பாணிதான் ஆனால் இது வகுப்பறைக் குழந்தைகள். டார்வினும் புகழ்மதியும் சுந்தரின் பிள்ளைகள் மட்டுமில்லை; டுஜக் நூலினை வாசித்த பலருக்கும் உறவாகியிருந்தார்கள்.
டுஜக் டுஜக் சுந்தர் எழுத்தின் மிகச்சிறந்த அடையாளம். அது ஒரு முன்மாதிரி வகைமை. ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளுக்காக எழுதி வைக்க அப்படியொரு டைரியை அறிமுகப்படுத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாய் வந்த சீமையில் இல்லாத புத்தகம் டுஜக்-கின் இரண்டாம் பாகம் போல வந்திருந்தது.
இப்போது "ஓங்கூட்டு டூணா...!" - வகுப்பறைக் குறிப்புகள்.
குழந்தைகளுக்கும் தனக்குமான உரையாடலை தொடர்ந்து எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார் சுந்தர் என்பதை அறிய முடிகிறது. இதுவரை தொடக்கப்பள்ளி வகுப்பறை அனுபவங்களை யாரும் தொகுப்பாக எழுதி வெளியிட்டது போலத் தெரியவில்லை.
இப்படித் தொடங்கி வைத்திருப்பதை ஒரு கல்வி சார் செயல்பாட்டாளனாக வரவேற்கிறேன். இது வேண்டும். பலரால் இதுபோல தொடர்ந்து எழுதப்பட வேண்டும்.
ஈரச் சிலேட்டைக் காய வைக்க ஒரு மந்திரம் சொல்கிறார்:
''அம்மா சட்ட காஞ்சுக்க
அப்பா சட்ட காயாத
தாத்தா சட்ட காஞ்சுக்க
பாப்பா சட்ட காயாத''
#
தொடர்ந்து எழுதுங்க சுந்தர்... வாழ்த்துகள்.
-
சக.முத்துக்கண்ணன்
ஆசிரியர், எழுத்தாளர்
Comments
Post a Comment