ஓங்கூட்டு டூணா - வாசிப்பு அனுபவம்.. : பிரதீபா

வணக்கம் சார், உங்களது "ஓங்கூட்டு டூணா"- நூலைப் படித்த போது ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்ற ஆசை வந்து விட்டது எனக்குள்...

நான் சந்தித்த, கடந்து வந்த ஆண் ஆசிரியர்களுள் வேறுபட்டவர் நீங்கள்.. ஆமாம் சார், தாயுள்ளம் கொண்ட தாயுமானவனாய் உணர்கிறேன் யோகா பாப்பாவின் உணர்வுகளை மதிக்கும் அந்தப் பதிவை வாசிக்கும் பொழுது..!

ஜனநாயக வகுப்பறை என்பதை வெறும் வாய் வார்த்தையோடு நிறுத்தி விடாமல் செயலில் காண்பித்து உள்ளீர்கள்.. நூலின் ஒவ்வொரு பக்கமும் ரசிக்க வைக்கிறது சார், வாழ்த்துகள்..

உங்கள் வகுப்பறையை கண் முன்னே கொண்டு வந்து காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள்.. பேரானந்தமாய் உணர்கிறேன்.

குரங்கை கரையில் சேர்க்கும் பவன்யா, எண்கள் படிக்கும் வித்யா,ஆங்கில வகுப்பில் சுபிக்சாவின் தன்னம்பிக்கையான வார்த்தை வரை பாடப்பொருள் அறிமுகத்திலும் ஜனநாயகமே...

மாணவர்கள் உங்களை தன் தந்தையைப் போல் பாவித்து உள்ளார்கள், நீங்களும் அவர்களை உங்கள் குழந்தையைப் போல் பாவித்து உள்ளீர்கள் என்பதற்கு உங்கள் எழுத்தே சாட்சி..

வாசிக்கத் தொடங்கி, கடைசி பக்கத்தை முடிக்கும் வரை சிரித்துக் கொண்டே இருந்தேன்.. இப்படி ஒரு அருமையான புத்தகத்தைக் கொடுத்ததற்கு நன்றி சார்.

-

பிரதீபா, ஆசிரியை
கூடலூர்

Comments

Popular posts from this blog

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

நீர் விளக்கு - பென்னிகுக் நூல் அறிமுகம்