ஓங்கூட்டு டூணா: வாசிப்பு அனுபவம் : மா.காமுத்துரை

கடந்த சில தினங்களுக்கு முன்பு எங்கள் மண்ணின் மூத்த படைப்பாளி, அன்புத் தோழர் தேனி மா. காமுத்துரை அவர்கள் "ஒங்கூட்டு டூணா.." நூலை வாசித்து விட்டு, தேனி பேச்சு வழக்கிலேயே தன் வாசிப்பு அனுபவத்தை அனுப்பி இருந்தார்.. அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.. அந்தப் பதிவை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..

##############################################################
சுந்தர் கூட டூணா...

ஆமா, என்னிய நோகடிச்ச புத்தகத்த அவுரு பாட்டுக்கு எழுதுனா, பழமா வுடுவாங்க. எம்படிப்புத்தான இன்னிக்கிப்பூராம்.. நான் டூணா.

இவரோட முந்திய நூல்களான டுஜக் டுஜக், சீமையில் இல்லாத புத்தகத்த படிச்சப்ப என்னமோ மாதரியா இருந்திச்சி.. ஆனா அதச் சொல்ல.. ம்ம்.. என்னா சொல்லன்டு வெளங்கல...

ஆமா, என்னமோ இவுரும் இவுரு பிள்ளைகளும் மட்டுந்தே ஊர்ல இருக்க மாதிரியும் வேறு யாருக்கும் பிள்ளைகளே இல்லாத மானிக்கி, ரொம்ப தான் செல்லங் கொஞ்சி எழுதியிருப்பாரு. அன்னிக்கே சுந்தர் கூட மனசுக்குள்ளயே டூணா விட்டுட்டேன்..

ஆனா இந்த "ஓங்கூட்டு டூணா" புஸ்தகம் வாத்யாருக்கும் க்ளாஸ் பிள்ளைகளுக்குமான பேச்சு. உம்மயச் சொல்லணும்னா. பத்மநாபன் ஆரம்ப பள்ளில தரைல ஒக்காந்து ராஜு வாத்யார்ட்ட பாடம் படிச்ச மாரி இருந்துச்சு...

ஆனாலும் இன்னிக்கி படிக்கிற புள்ளீக மாதரி அன்னிக்கி இருக்கமிடியாது தான்..

ப்ளேன்ல போற பிரதமர ஆவுகமாச் சொல்லுதுக...

இங்கிலீஷ் டிவிக்கும் தமிழ் டிவிக்கும் வித்யாசம் கண்டு சொல்லுது...

எம்புட்டுத்தே சிரிச்சாலும் மாசானியம்மன் சாமிய நம்புற புள்ளீக அப்பவே பாத்துருக்கலாம்.

ஆனா வாத்யார தூங்க கூடாது படிப்பு வராதுன்னு சொல்லமுடியுமா..??

திரும்பி உக்காந்து ஒளிகிற அஜீஸ், அபிமன்யூ, ஜீவனேஷ். யோகேஷ், ஹாசினி இவங்களாம் பதிவுகள்ல வந்தாலும் "சார் இன்னம் சோறாக்கலியான்டு கேக்கற யோகாதான் நெஞ்சுக்குள்ளேயே நிக்கிது. சோறு சாப்பிடுறப்ப சத்தியமா சங்கட்டமா இருக்கி...!

ஒண்ணொன்னும் ஒரு சிறுகதை.
சார் அனுமதிச்சால் விரிச்சி எழுதலாம்.
-
மா. காமுத்துரை

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!