ஓங்கூட்டு டூணா - வாசிப்பு அனுபவம் : இரா. தெ. முத்து

தொடக்கப்பள்ளி பால்வாடி மாணவர்கள் உடனான அனுபவங்களை சின்ன சின்னதா எழுதி இருக்கிறார் வாத்தியார் தேனி சுந்தர்.

அபி சொல்லும் கதையைப் படிக்கையில் நூல் முழுவதும் வாசித்து விட வேண்டும் என்ற ஆர்வம் பொங்கியது.

அப்படி என்ன சொன்னாள் அபி?

அபி சொன்ன கதையில சிங்கத்துக்கும் மாட்டுக்கும் சண்டை... மாட்டோட கொம்பு வானம் அளவிற்கு பெரியது. மாடு முட்டியதால் சிங்கம் வானத்தில் பறந்து போய் விழுகின்றது. அப்படி என்றால் மாடு என்னா வேகத்தில் முட்டியிருக்கும் என அடுத்த வரியை வாசித்தால் மாடு செத்துப் போச்சு என பொசுக்கென்று கதையை முடிக்கிறாள் அபி.

இந்த இடம் ரொம்ப முக்கியமான இடம்.. வானம் உயரத்திற்கு கொம்பு இருந்த மாடு, தான் முட்டியதால் வானத்தில் பறந்து போய் விழுந்த சிங்கம் அல்லவா செத்துப் போயிருக்க வேண்டும்?

இப்படி சின்னச் சின்ன கவிதை போன்ற வடிவத்தில், பால்வாடி மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்களோடு கற்ற அனுபவங்களை வகுப்பறை டயரி குறிப்புகளாக ஓங்கூட்டு டூணா எனும் சிறுவர்களுக்கான அறிதல் நூலை கொண்டு வந்திருக்கிறார் தேனிசுந்தர்..

தேனி சுந்தர் சாருக்கு வாழ்த்துகள்; நன்றிகள். நூலை எழுத ஆர்வத்தை உருவாக்கிய பேராசிரியர் மாடசாமி சார் மற்றும் நூலை அழகாக வெளியிட்ட பாரதி புத்தகாலயத்தின் Books for Children பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள்.

வளர்ந்த குழந்தைகளும் வளரும் குழந்தைகளும் வாசிக்க வேண்டிய நூல் இது.

-

இரா. தெ. முத்து

தமுஎகச, சென்னை
19/03/23
#ஓங்கூட்டு-டூணா
#தேனிசுந்தர்

Comments

Popular posts from this blog

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23