Posts

Showing posts from June, 2026

இந்த நூல் என்னை என் மாணவர்கள் முன்னிலையில் குற்றவாளியாக நிறுத்தி இருக்கிறது : பா.விமலாதேவி, ஆசிரியர்

Image
உண்மையிலேயே இப்புத்தகத்தின் நூலாசிரியர் அவர்களுக்கு ரொம்ப தைரியம்தான். ஏனெனில் இத்தனை உண்மைகளை நறுக்குத் தெறித்தார் போல் பட்டென பதிவு செய்வதற்கு ஒரு மனோதிடம் வேண்டும். அதற்காக அவருக்கு ஒரு வாழ்த்துக்கள்.. சரி, தப்பாக போன அந்த ஜட்ஜ்மெண்ட் என்ன என்று பார்க்கலாம் வாங்க. முதலில் அந்த ஜட்ஜ்மெண்ட் தவறு என்று சொல்வது யார் என்று நினைக்கின்றீர்கள். ஒரு சில கட்டுரைகளில் மாணவன் சில கட்டுரைகளில் ஆசிரியர் சில கட்டுரைகளில் பொதுமக்களின் பொது புத்தி என எடுத்துக் கொள்கிறேன் நான். மொத்தத்தில் இந்த தீர்ப்பானது தவறு என்று உயர் அதிகாரிகளையும் , கல்வி நடைமுறைகளையும் அதனை வகுப்பறையில் பரிசோதிக்கும் ஆசிரியர்களையும் சுட்டுகிறது. கணிதமும் அறிவியலும் கசப்பென வாழ்ந்த ஒரு மாணவன் இரண்டையும் கற்கண்டாய் கையில் எடுத்து ஆசிரியராக உருமாறியபோது அவருள் எழும்பிய வினாக்களின் தொகுப்பு இக்கட்டுரைகள் எனலாம். வாசிக்கும்போது இவையெல்லாம் உண்மை நிகழ்வுகள் என்று தான் எடுத்துக் கொள்ள முடிந்தது. தன்னைவிட மேல்மட்ட அதிகாரியை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு எந்த ஒரு இளம் பணியாளருக்கும் மூத்த பணியாளர்கள் சொல்லித் தருவதில்லை. மாறாக எப்படி அவர...

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு சார் : கற்பிக்கச் செல்லும் இடத்தில் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் என்பதை உணர்த்தும் நூல் : இந்துமதி ஆசிரியர்

Image
கற்பிக்கச் செல்லும் இடத்தில் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் என்பதை உணர்த்தும் நூல் இது. சின்னச்சின்ன கட்டுரைகளில் பெரியபெரிய சிந்தனைகளைத் தூவிச் செல்கிறார் ஆசிரியர். 25 கட்டுரைகளும் மிகமிகச் சிறியவை. ஆனால் அவை ஒவ்வொன்றும் நம் ஆசிரியச் சமுதாயத்தைச் செதுக்கும் உளிகள். ஆசிரியர்களாகிய நாம் வகுப்பில் நன்கு படிக்கும் மாணவர்களையும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களையும் தெரிந்து வைத்திருக்கும் அளவிற்குத் தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாத இடைப்பட்ட மாணவர்களைக் கண்டு கொள்வதில்லை. அப்படிப்பட்ட மாணவனான ‘சரவணன்’ பற்றிக் கூறுகிறது ‘உனக்குரிய இடம் எங்கே…?’ என்னும் கட்டுரை. ‘இம்மாணவனுக்கு வகுப்பறையில் ஒரு இஞ்ச் இடம் கூட தரவில்லையே’ என வருத்தப்படுகிறார். இது முற்றிலும் உண்மையாகவே தோன்றியது. கணக்கு வாத்தியார் என்றாலே சிரிக்காத முகம்…ஐந்தாம் வகுப்பில் வட்டம் ஒழுங்காக வரையாததால் முதுகில் போட்ட அடி… அன்றைக்குக் கணக்குப் பாடத்திற்குப் பயந்து மேல்நிலை வகுப்பில் கணக்குப் பாடம் இல்லா பிரிவில் சேர்ந்து படித்தது பற்றி, ‘கணக்கு இனிக்கும்’ என்னும் கட்டுரை விளக்குகிறது. இக்கட்டுரை அப்படியே என் பள்ளி வாழ்வை நினைவூட்ட...