ஓங்கூட்டு டூணா _வாசிப்பு அனுபவம் : அருந்ததி

தேனி சுந்தர் அவர்கள் எழுதிய ஓங்கூட்டு டூணா _ புத்தகத்தை நானும் வாசித்தேன். அதுவும் இரண்டு முறை...!

எனை வெகுவாக கவர்ந்த எழுத்து நடை... இதே விடயத்தை இன்னொருவர் இதே போல எழுத முடியுமா என தெரியவில்லை. இது அவருக்கே உரிய தனி நடை..

புத்தகத்தை படித்தபோது...  சிரித்த சிரிப்பிற்கு அளவே இல்லை.  அப்படி ஒரு நகைச்சுவை. ஆமாம், நானும் 20 ஆண்டுகள் தொடக்கப் பள்ளி ஆசிரியை தான்... அரை மணி நேரத்தில் விறுவிறுப்பாக வாசிக்கலாம்.


'இயலாதென்று முயலாதவர்கள்... இறக்கை இருந்தும் பறப்பது இல்லை' ஆம்... மாற்று சிந்தனையுடன் புத்தகம் படைத்து... இதை பறை சாற்றி இருக்கிறார் ஆசிரியர்..

குழந்தைகளின் அனுபவங்கள் சார்ந்த வரிகளிலும் வகுப்பறையை தாண்டி... நாம் மண்வாசனையை கவனிக்கலாம்.'

எழுத முனைகையில் தான்... எழுத்தாளர் அருமை தெரிகிறது. அப்படி ஒரு அருமையான எழுத்தில்...  தாங்கள் மனதை கவர்கிறீர்கள். வாழ்க.. வளர்க...💐

அன்புடன் தோழமை
அருந்ததி ஆசிரியை, தேனி

Comments

Popular posts from this blog

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23