சீமையில் இல்லாத புத்தகம் - வாசிப்பு அனுபவம் : கண்ணன்
டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்ட செயலாளர் தோழர் கண்ணன் அவர்களின் முகநூல் பின்னூட்டம்...
சுந்தர் தோழர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.. மேலும் பல புத்தகங்கள் தங்கள் மூலம் வரவும் பல பரிசுகள், பட்டங்களை பெறவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தங்களின் சீமையில்லா புத்தகத்தை இன்று (7.4.2023) டெல்லி ஏப்.5 போராட்டத்திற்கு சென்று விட்டு ரயில் பயணத்தில் படித்தேன்.. எனது பேத்தி துளிர்விகா என்னிடம் கைபேசியில் தனது மழலை மொழியில் "த்தா சப்டியா?" என கேட்டு அசத்தியதை போல, உங்கள் குழந்தைகள் பேச்சு மழலை மொழி.. தமிழ் வார்த்தைகளை படிக்க படிக்க மிக சோர்வை கூட எனது மூளை தாங்கிக் கொண்டு புத்துணர்ச்சியுடன் படித்து முடித்து விட்டேன் தோழர்.. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழர்..
-
கண்ணன்
Comments
Post a Comment