“ஓங்கூட்டு டூணா” : நீலகிரி சித்ரா டீச்சர்
டார்வின், புகழ்மதியோட அப்பா.. எனது மரியாதைக்குரிய நண்பர்.. குழந்தை நேய ஆசிரியர்.. சிறார் புத்தக எழுத்தாளர்.. அறிவியல் செயல்பாட்டாளர்.. இந்தப் புத்தகத்திலிருந்து தெரிந்து கொண்டது.. “நடிகர்”.. இத்தனை கதாப்பாத்திரங்களும் ஒருங்கே கொண்ட.. Theni Sundar அவர்களின் மற்றுமொரு படைப்பான.. அவர் ஆட்டோகிராப் இட்டு எனக்கு அனுப்பி வைத்த.. “ஓங்கூட்டு டூணா“.. வாசித்தேன். அதன் பின்னூட்டத்தை பகிராமல் இருக்க முடியுமா?!!
“ஓங்கூட்டு டூணா” இந்த வார்த்தைகள் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பரிட்சயமானது தான்.. ஆனால் எத்தனை பேர் அந்த மழலை மொழிகளை ரசித்திருப்பார்கள்.. பதிவு செய்ய முன் வந்திருப்பார்கள்?!!..
அபியின் கதையில் ஆரம்பித்த புத்தகம் இறுதியில்.. “ஐ லைக் இட்” என்ற பாரதிராஜா வின் பிரபலமான டயலாக் உடன் முடிந்திருந்தது சிறப்பு..
இடையில் பதிவாகியுள்ள வகுப்பறை அனுபவங்கள் அருமையிலும் அருமை.. பொதுவாகவே ஆசிரியர்களாகிய அனைவருக்குமே வகுப்பறை அனுபவங்கள் இருக்கும்.. ஆனால் இது போன்ற ஒரு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த உணர்வுப்பூர்வமான அனுபவங்கள் வாய்க்கப் பெற்ற வரம் பெற்றவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாகிய நாம் தான்.. நம்மை பதவியில் உயர்ந்த.. மற்ற சில ஆசிரியர்கள் சல்லிக் காசுக்கு மதிக்காவிட்டாலும். இந்த பட்டாம்பூச்சிகளின் உலகத்தில் நாம் தான் ஹீரோ.. ஹீரோயின்ஸ்.. இதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை..
“அபிமன்யூ வின் மேஜிக்கல் கதை முடிவதற்குள்.. இந்த யோகா வின் சார் இன்னும் சோறாக்கலயா?!!.. இந்த வார்த்தைகளுக்குள் நான் கரைந்தே போய்விட்டேன்.. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கூட அறியாத அந்த குழந்தை சிரித்துக் கொண்டே கேட்பது.. ஒரு ஆசிரியராக அந்த நேரத்தில் உங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும்??!!.. என்பதை எனக்கு உணர்த்துகிறது..
பவனியாவும், யோகாவும் உங்களை ஏமாற்றி வேடிக்கை காட்டுவது அவ்வளவு அழகு.. உண்மையிலேயே “குழந்தைகளிடம் தோற்றுப் போகும் ஆசிரியர்களைத் தான் அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள்”.. ஆசிரியர்களின் “எல்லாம் தெரிந்த மேதாவிகள் மாதிரியான தோற்றம்” தான் அவர்களை கற்றலில் ஈடுபாடு இல்லாமல் செய்கிறது..
“பேனாவுல எழுதுனா டீச்சரு.. பென்சில்ல எழுதுனா ஸ்டூடன்ட்” எப்படி இப்படி இரண்டே வரியில் திருக்குறள் மாதிரி பிள்ளைகள் நம்மைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்!!! அதையும் நீங்கள் கண்டுபிடித்து பதிவாக்கியுள்ளீர்கள் பாருங்களேன்! நீங்கள் தான் குழந்தை மைய ஆசிரியர்..
“பேச்சு எங்கயோ போய்.. கடைசியாக போலீஸ் னா வசூல் பண்ண தான் நிப்பாய்ங்க”.. ஆத்தாடி! உங்க வகுப்பு பிள்ளைக பயங்கரமானவிங்களா இருப்பாங்க போலயே!!..
“அபிமன்யூ”.. அவன் கதைப் போல தான் சிங்கம் கரடியாயிடும்.. கரடி புலியாகிடும்.. புலி டைனோசராகிடும்.. இந்த அபிமன்யூக்களை நாம் இனியாவது அடையாளம் கண்டு ஊக்கப்படுத்துவோமே!!
” சொந்த பந்தம் பூராம் வந்திருக்கப்ப.. வீட்டுலயும் படிக்க நிறைய விஷயம் இருக்குப்பா”!!.. உண்மையிலும் உண்மை.. இந்தக் கருத்தை நானும் ஒரு ஆசிரியராக 200% ஆமோதிக்கிறேன்.. பிள்ளைகள் நல்லது கெட்டது என அனைத்து குடும்ப நிகழ்வுகளிலும் பங்கெடுக்க வேண்டும். அப்படி ஒரு நாள் கூட லீவு போடாமல் பள்ளிக்கு வரும் குழந்தைகளை சில பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்தும் சில ஆசிரியர்களை நான் பார்த்திருக்கிறேன்.. அது முற்றிலும் தவறு. குடும்பத்திலும் உறவுகளிலும் குழந்தைகள் கற்க நிறைய உள்ளன.. உண்மையில் சொல்லப் போனால் குழந்தைகளுக்கு ஊக்கப் பரிசு கொடுப்பது கூட தவறு என்கிறது உளவியல்.. அவர்கள் ஒரு செயல் செய்தால் இது கிடைக்கும் என்ற போக்கிற்கு தள்ளப்படுவார்கள்.. அல்லது அதிலும் சலிப்பு தட்டிவிடும்.. பாராட்டை வேறு எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம்..
படிச்சு முடிச்சு என்ன ஆகப்போறீங்க..
நான் போலீஸ் ஆகப் போறேன்.. நான் மிலிட்டரி.. நான் கலெக்டர்.. அற்புதம்..
இப்படி ஏதாவது ஒன்று ஆகிவிட வேண்டும் என்று தான் ஆசிரியர்கள் நாம் கனவு காண்கிறோம்..
“பால்வாடி மஞ்சுளா.. எத்தனை வித கோரிக்கைகள்.. எத்தனை விதப் போராட்டங்கள்..
கட்டுண பணமெல்லாம் வீணாக.. கவலையோடு வந்தாங்க கட்டணமில்லா நம் பள்ளிக்கு.. நம் பள்ளி நம் பெருமை”.. அட அப்படியே ஒரு அரசுப் பள்ளிக்கான விளம்பரத்தையும் போட்டுக் காட்டி விட்டீர்கள்.. போங்க
“இந்த வித்யா மாதிரி தான்.. நம்மை சில நேரங்களில் சங்கடப்படாமல்.. நம் உடையைப் பற்றி கலாய்த்து நம் காத்தப் புடுங்கி விட்ருவாங்க வாண்டுப் பசங்க”.. அருமை.. அப்படியே உங்க முகம் சுருங்கிப் போயிருக்குமே!!
“குரங்கை கரை சேர்க்கும் செயல்பாட்டில்.. பவன்யா வின் கெட்டிக்காரத் தனத்தை என்னனு சொல்றது!!. அதை ஒரு உயிருள்ள கதாப்பாத்திரமாகவே காணும் கற்பனை அவர்களுக்கே உரித்தானது..
இன்னும் உங்கள் ஒரு வரிக்கு ஒரு கட்டுரை எழுதலாம் போல..
இறுதியாக ஒன்று.. ஆனால் சிரிப்பை அடக்க முடியவில்லை..
“கொலை பண்ணவன் கூட ஒத்துக்குவான்.. குசு போட்டவன் ஒத்துக்கவே மாட்டான்”.. நமது பிள்ளைப் பருவத்திலிருந்து காலங்காலமாக.. எந்த வித மரபணு மாற்றமும் இல்லாமல் இருப்பது இது மட்டும் தான்.. அத கண்டுபுடிக்க அவங்க ட்ரிக் இருக்கே.. அடடே நாசா விஞ்ஞானிக கூட தோத்துருவாய்ங்க.. ஹா..ஹா..ஹா..
கடைசியில் பாரதிராஜாவும்.. குழந்தைகளைப் படித்து விட்டார்..
அப்பப்பா.. அழகு.. அருமை.. அற்புதம்..
உங்கள் பிள்ளைகள் இப்படி ஒரு எழுத்தாளரிடம் படிக்கிறோம் என்ற விவரம் கூட தெரியாமல் தான் இருப்பார்கள்.. பின்னொரு நாளில் அதை நினைத்து பூரிப்படைவார்கள்.. அதுவும் உங்களுடைய படைப்புகளின் காரணகர்த்தா மற்றும் கதாப்பாத்திரங்களே அவர்கள் என தெரியவரும் போது அவர்கள் மனநிலை எப்படி இருக்கும்??!! இப்போதே என்னால் கற்பனை செய்ய இயலுகிறது.. ஆசிரியப் பணியைத் தாண்டிய.. சக ஆசிரியர்களுக்கு உங்கள் படைப்புகளின் மூலம் வழிகாட்டும் உங்கள் பணி மகத்தானது.. மென்மேலும் தொடருங்கள்.. குழந்தை மொழிகளை தொடர்ந்து மொழிபெயருங்கள்.. என்ன சொல்வதென்று தெரியவில்லை.. மகிழ்வும் பாராட்டுகளும்.. வாழ்த்துகளும் தோழர்..
சித்ரா டீச்சர், நீலகிரி
நன்றி : புக்டே.இன்
Comments
Post a Comment