# உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23 : ஏப்ரல் முதல் தேதிக்கு என்ன சிறப்பென்று உங்களுக்கும் தெரியும்.. எனக்கும் தெரியும். முட்டாள்கள் தினம்! மேலே வெள்ளைக் காக்கா பறக்குது..... சட்டையில் பூச்சி ஏறுது.... என்று சொல்லி சிலரை ஏமாற்றி (!) விட்டதாய் நினைத்து சின்னப்புள்ளத் தனமாய் நீங்களும் சிரித்திருக்கக் கூடும். ஆனால் இதே ஏப்ரல் மாதத்தில் தான் உலகப் புத்தக தினமும் வருகிறது. ஆனால் நாம் யாரும் அதைக் கண்டுகொள்வதில்லை. உலகப் புகழ்பெற்ற மாபெரும் கவிஞர் ஷேக்ஸ்பியரின் பிறந்த தினம் ஏப்ரல் 23. இதைத்தான் உலகப் புத்தக தினமாக அறிவித்து புத்தகங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வாசிப்பை அதிகப்படுத்தவும் மக்களை அறிவாயுதம் ஏந்தச் செய்யவும் பல்வேறு தரப்பினர் பல்வேறு முயற்சிகளை செய்துகொண்டிருந்தாலும் தமிழக அளவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமே மாவட்டந்தோறும் நகரங்கள், கிராமங்கள் தோறும் புத்தகங்களைக் கொண்டு செல்லும் பணிகளை அலட்டிக்கொள்ளாமல் அதே நேரத்தில் பெருமிதத்தோடு ஆண்டு முழுக்கவும் செய்து வருகிறது.. புத்தகங்கள் மகத்தானவை.. அற்புதமானவை.. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் “ காரிருள் அகத்த...
தனக்குத் தானே முன்மாதிரியாக அமைந்த உலகின் ஒரே அணை என்று முல்லைப் பெரியாறு அணை குறிப்பிடப்படுகிறது. நீரின் ஓட்டத்தின் போக்கில் அதை மறித்துக் கட்டப்படுவது தான் பெரும்பாலான உலக வழக்கம். ஆனால் நீரின் போக்கையே மாற்றி, அதற்கு எதிர்ப்புறமாக அணையைக் கட்டி, அதிலும் பல்வேறு நுட்பங்களைக் கையாண்டு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் புளூபிரிண்ட்-ஐ அப்படியே தனது நாவல் மூலம் படம் வரைந்து விளக்கியுள்ளார் ஐயா பொ.கந்தசாமி ஐயா அவர்கள். விருதுநகரில் பிறந்தவர் என்றாலும் அவருக்கு தாய்வழிப் பூர்வீகம் தேனி தான். வைகை அணைக்குப் பக்கத்தில் முதலக்கம்பட்டி. சில பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளும் செய்திகளும் அவரை மேலும் மேலும் பென்னிக்குக்கை குறித்த தகவல்களைத் தேடி ஓட வைத்துள்ளது. இதய அறுவைச் சிகிச்சை செய்திருந்த போதிலும் தனது வாழ்நாள் , பிறவிப் பயனாக இந்நூலை அவர் எழுதி முடித்து இருக்கிறார். நான் முதன் முதலாக ஆசிரியர் பணிக்குச் சேர்ந்த குள்ளப்ப கவுண்டன் பட்டி தான் கதையின் முக்கியமான உள்ளூர் நாயகனாக வருகிற பேயத்தேவரின் தந்தை மொக்கையத் தேவர் வந்து குடியேறிய ஊர். கூடலூருக்குப் பக்கத்து ஊர் தான். பேயத்தேவர் கூடலூ...
கற்பிக்கச் செல்லும் இடத்தில் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் என்பதை உணர்த்தும் நூல் இது. சின்னச்சின்ன கட்டுரைகளில் பெரியபெரிய சிந்தனைகளைத் தூவிச் செல்கிறார் ஆசிரியர். 25 கட்டுரைகளும் மிகமிகச் சிறியவை. ஆனால் அவை ஒவ்வொன்றும் நம் ஆசிரியச் சமுதாயத்தைச் செதுக்கும் உளிகள். ஆசிரியர்களாகிய நாம் வகுப்பில் நன்கு படிக்கும் மாணவர்களையும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களையும் தெரிந்து வைத்திருக்கும் அளவிற்குத் தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாத இடைப்பட்ட மாணவர்களைக் கண்டு கொள்வதில்லை. அப்படிப்பட்ட மாணவனான ‘சரவணன்’ பற்றிக் கூறுகிறது ‘உனக்குரிய இடம் எங்கே…?’ என்னும் கட்டுரை. ‘இம்மாணவனுக்கு வகுப்பறையில் ஒரு இஞ்ச் இடம் கூட தரவில்லையே’ என வருத்தப்படுகிறார். இது முற்றிலும் உண்மையாகவே தோன்றியது. கணக்கு வாத்தியார் என்றாலே சிரிக்காத முகம்…ஐந்தாம் வகுப்பில் வட்டம் ஒழுங்காக வரையாததால் முதுகில் போட்ட அடி… அன்றைக்குக் கணக்குப் பாடத்திற்குப் பயந்து மேல்நிலை வகுப்பில் கணக்குப் பாடம் இல்லா பிரிவில் சேர்ந்து படித்தது பற்றி, ‘கணக்கு இனிக்கும்’ என்னும் கட்டுரை விளக்குகிறது. இக்கட்டுரை அப்படியே என் பள்ளி வாழ்வை நினைவூட்ட...
Comments
Post a Comment