"உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்" : எம்.ஜே.பிரபாகர் அவர்களின் வாசிப்பு அனுபவம்..

"சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு பிடிக்காத பாடம் கணக்கு"

கணக்கு பாடம் படிக்கக்கூடாது என்ற நிலையில் பிளஸ் டூ வகுப்பில் வணிகவியல் பாடத்தை தேர்வு செய்தவர், பிளஸ் டூ முடித்தவுடன் ஆசிரியர் பணிக்கான பயிற்சியில் சேருகிறார். 19 வயதில் பள்ளியில் ஆசிரியராக பணியாற்ற தொடங்குகிறார்.

பயிலும் மாணவர்களுக்கு கணக்கு பாடம் நடத்தும் போது ஆசிரியருக்கு கடுகடுப்பும் கோபமும் ஏற்படுகிறது. அறிவியல் கருத்தரங்கில் கலந்து கொண்ட போது புதியபாதை தோன்றுகிறது. ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களை, துவக்க நிலை வகுப்புகளில் கற்புக்கும் போது மிகவும் அன்புடன் கற்பிக்க வேண்டும் என்று என்பதை புரிந்து கொள்கிறார்.



அறிவியல் கருத்தரங்கில் கற்றுக்கொண்ட சிறு சிறு பயிற்சிகள் மூலம் கணக்குகளை மாணவர்களுக்கு எளிய வகையில் கற்பித்து புரிய வைக்கிறார்.
மாணவர்கள் கணக்கை புரிந்து கொண்டார்கள் என்பதை மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறார். கணக்கு பாடம் நடத்தும் போது மாணவர்களை ஒருபோதும் விரட்டுவதும், மிரட்டுவதில்லை என்ற முடிவுக்கு வருகிறார். தொடர்ந்து மாணவர்களுக்கு கணக்கு பாடத்தை இனிக்கும் பாடமாக மாற்றுகிறார்.
அவரது அனுபவத்தை மற்றவர்களுக்கும் தெரிவிக்கிறார்.

கணக்கும் இனிக்கும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த கூறுகிறார் கணக்கு பாடம் கடினம் என்பதை உடைத்தெறிய கூறுகிறார். கணக்கு பாடம் நடத்த செல்லும்போது கோபத்தை வாசலிலே வைத்து விட்டு ஆசிரியர் மட்டும் வகுப்பறைக்கு செல்ல வேண்டும் என வழி காட்டுகிறார்.

இது போன்ற பல்வேறு அனுபவங்கள் கொண்ட நூல் தான் "உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்" .. இந் நூலின் ஆசிரியர் பேரன்பிற்குரிய அரசு பள்ளி ஆசிரியர் தேனி சுந்தர்.

இந்த நூலை வாசிப்பதன் மூலம் கல்வியில் இன்றைய நிலை பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள முடியும். ஆசிரியர் தேனி சுந்தர் மாதிரி அனைத்து ஆசிரியர்களும் மாற்றங்களை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டால் பள்ளிக் கல்வியில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

நூலினை வாசியுங்கள்.... உங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.... மாணவர்கள் எதிர்காலம் உங்கள் கையில்....

நூல்: "உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்"
நூலாசிரியர் : தேனி சுந்தர்
விலை : ரூபாய் 130 /-
வெளியீடு : வாசல் பதிப்பகம் மதுரை-625003
நூலினை பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9842102133
இ மெயில் : vasalviji@gmail.com

எம்.ஜே.பிரபாகர்

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!