டுஜக் டுஜக் - ஒரு அப்பாவின் டைரி : வாசிப்பு அனுபவம் : ரமேஷ், நாராயணத் தேவன் பட்டி
டுஜக்..டுஜக்... படித்தேன்.. நண்பர் சுந்தரை பாராட்ட வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன். புத்தகத்தை கீழே வைக்காமல் படித்தேன். சூப்பர்...!
என் மகனின் மழலைப்பருவம் என் கண்முன் வந்து நிழலாடியது. அவனை பள்ளியில் சேர்க்க போகும் போது பள்ளியில் கேட்ட கேள்வி: யானை என்ன கலர்? அவன் சொன்னான்.. யானை, யானை கலர் தான்....!
டுஜக்... டுஜக்... ஓர் அற்புத படைப்பு..! குழந்தைகளின் மொழியை, சிந்தனையை, ஆர்வத்தை, தெளிவாக பதிவு செய்து தொகுத்திருக்கிறார். தரமான உரையாடல்கள்.. தேதி வாரியான பதிவுகள் மிகவும் சிறப்பு.!
கொரனா வந்து
பிஸ்கோத்து பாக்கெட்ட
தூக்கிட்டு போயிரும்!
என கூறும் மழலையின் புரிதல் சுகானுபவம்.
டார்வின், விவேக் இறந்துவிட்டார் என பதிவு செய்யும் போது குழந்தைகளின் சமூகம் சார்ந்த சிந்தனைகளை புரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பற்றிய புரிதல் இல்லாமல் போனது சுவாரசியமானது.
குழந்தைகளுக்கு எது பிடிக்குமோ அதனையே விரும்பி கற்றுக் கொள்கிறார்கள்.. நினைவிலும் வைத்துக் கொள்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. உதாரணமாக என்னிடம் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் அல்ஜீப்ராவில் மிக ஆர்வமாக இருக்கிறான். எட்டாம் வகுப்பு படிக்கும் இன்னொரு மாணவனுக்கு அதில் ஆர்வம் இல்லை.!
நூலில் ஓர் இடத்தில் "ம்க்கும்" என சுந்தர் சொல்லும் போது, அதற்கு டார்வினிடம் இருந்து வந்த பதில் என்னை ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியில் தள்ளியது. பெரியவர்கள் மாறுவார்கள்.. மாறிக் கொண்டு தான் இருப்பார்கள்.. ஆனால் எக்காலத்திலும் குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கிறார்கள்..
டுஜக்...டுஜக் அப்பாவின் டைரியல்ல... இது Children's History..! நல்ல படைப்பு, சுந்தர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.. புத்தகத்தின் பக்கங்கள் குறைவாக இருப்பது ஒன்றே என் வருத்தம்..!
-
ரமேஷ், நாராயண தேவன் பட்டி
தேனி மாவட்டம்
Comments
Post a Comment