அடுத்தடுத்து பக்கங்களை புரட்ட வைக்கிறது : டுஜக் டுஜக் - ராணி குணசீலி

தன் குழந்தைகளுடன் உரையாடிய பொழுதுகளை நல்ல ரசனையான படைப்பாக்கித் தந்திருக்கிறார் நூலாசிரியர் தேனி சுந்தர். குழந்தைகளைப் பேச வைக்கிற... பேசுவதை கவனிக்கிற ஒரு அப்பாவின் டைரி இது. குழந்தைகளின் பேச்சு மொழியிலேயே புத்தகத்தின் தலைப்பு.!


புத்தகம் முழுதும் டார்வின், புகழ்மதி இருவரின் கற்பனைகளும் பேச்சுகளும் தான். பேச்சுகளைத் தடை செய்யாத வீடு. வாசிக்கையில் நாம இப்படி எதையெல்லாம் நம் குழந்தைகளிடம் கவனித்தோம், பேச வைத்தோம் என்று சிந்திக்க தோன்றுகிறது.. கூடவே கவனிக்கத் தவறி விட்டோமோ என்ற ஒரு ஏக்கமும் வருது...!


ஒவ்வொரு பக்கமும் வாசித்து முடிக்க.. முடிக்க.. அடுத்து என்ன சொல்லப் போறாய்ங்களோ... அப்பா மாட்னாரா, இல்ல அம்மா சிக்குனாங்களான்னு தெரியலயே என அடுத்தடுத்து ஜாலியாக பக்கங்களை புரட்ட வைக்கிறது.!


மின்னல் வெட்டுவதை
"நிம்மல் இல்லப்பா..
அது கெட்டுப்போன லைட்டு..
இப்ப பாரு
அமந்து அமந்து எரியும்...!"


"அம்மா பூன
ஆபீசுக்கு போய் இருக்குப்பா"


"சீனி வேட்டு மாரி
உப்பு வேட்டு இருக்காப்பா" என கற்பனையில் பின்றாங்க...


டார்வின், அண்ணனாக மாறி பாப்பாவிடம் அலப்பறையைக் கொடுப்பது எல்லாம் செம கெத்து..! வெங்காயம் உரிச்சு , தோலைப் போய் போடுற வேலையை, அப்பா நைசா பாப்பாகிட்ட தள்ளிவிட பாக்க, அங்க பாப்பா பண்ண டுவிஸ்ட் என்ன.. புத்தகத்தை வாசித்தால் தெரியும்.!


பாப்பாவின் கேள்விகளுக்குத் தப்பிக்க வழி தெரியாமல்,
"தூங்கு பாப்பா..
போலீஸ் புடிச்சிட்டு போயிடும் " என்று சொல்லும் பகுதிகளில் "வாயக் குடுத்து மாட்டிக்காத பிகிலு" என்று சொல்லத்தோணுது...


தோழர் என்று அழைப்பது, புத்தகம் விற்று விளையாடுவது என, குழந்தைகள் அப்பாவைக் கவனிப்பதும் அப்பா குழந்தையைக் கவனிப்பதும் நமக்குப் படிப்பினை. அப்பா படிக்கிற புத்தகத்தை படக்குனு புடுங்கி அட்டப்படத்தை பாத்துட்டு "ஆடு புக்கா, சரி படிப்பா _ புத்தியால் அன்றி உணர்வுகளால் சிந்திக்கும் குழந்தை.


"பாருப்பா..
பார்த்துக்கே இருப்பா....
நல்லா சிரிப்பா..." - இது ஒட்டுமொத்தக் குழந்தைகள் விரும்பும் சிறு அங்கீகாரம். அம்மாவும் மகனும் அழுதுக்கிட்டே அப்பாவை ஒரண்ட இழுப்பது, அண்ணன்கிட்ட பாப்பா தூது போறதுன்னு பக்கங்கள் தோறும் இவிங்க செம ஆட்டம் போட்டிருக்காய்ங்க.


"அப்பா சோறாக்கட்டும்
நீ உக்காந்து படிம்மா..!" - கில்லாடி ஜட்ஜ்மெண்ட்.


தாங்கள் உணர்வதையும் சிந்திப்பதையும் சரியாச் சொல்லுவது குழந்தைகளுக்கு அவ்ளோ ஈஸி கிடையாது. அந்தப் பேச்சுக்கு வார்த்தைகள் தேவை. அதைப் புரிந்து கொண்டு பொறுமையாக, மென்மையாக பதிலளிக்கும் ஒரு அப்பாவா தேனி சுந்தர் இருக்காரு. எல்லோரும் வாங்கிப் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம்.
---------------------------------------------
டுஜக் ... டுஜக்...
ஒரு அப்பாவின் டைரி
தேனி சுந்தர்- பாரதி புத்தகாலயம்.
விலை _ ₹ 100
---------------------------------------------
ராணி குணசீலி, ஆசிரியை
மதுரை

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!