டுஜக் டுஜக் : குழந்தையின் வெற்றிக் குரல்.. செல்வம், ஆசிரியர்

பொருள் இல்லாத தலைப்பாக இருக்கிறதே! என்ற சிந்தனையோடு புத்தகத்தை புரட்டிபார்க்க தொடங்கினேன். புத்தகத்தின் உள்ளே பொருள் செறிந்து காணப்பட்டதை உணரமுடிகிறது.

குழந்தைகள் உள்ள எல்லா வீட்டிலும் நிகழும் இந்த நிகழ்வை எதார்த்தமாக கடந்து செல்வோம். ஆனால், ஆசிரியர் சுந்தர் அதற்கு அணிகலன் பூட்டி அழகுபடுத்தி நம் கையில் தந்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுக்கள்.


குழந்தைகளின் பேச்சு மொழியை அப்படியே தந்துள்ள பாங்கு அழகு ரசிக்கும் படியாக இருக்கிறது.. குழந்தை மொழிக்கு இலக்கண குற்றம் கண்டால் அதுவும் ஒர் 'இலக்கணப் பிழையே ' என்பதற்கு சான்றாகவே நம் முப்பாட்டன் வள்ளுவன் கூட "குழலினிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்" என்று சொல்லி இருக்கிறார் போல...

கற்றல் என்பது குழந்தைகளுக்கு வீட்டிலிருந்து தான் தொடங்கும் என்பதை ஆசிரியர் சுந்தர் உணர்ந்தவர் என்பதால் என்னவோ தன் குழந்தைகளை ஆக்கப்படுத்தியுள்ள நிகழ்வு அழகு மிளிர்கிறது. அந்த வகையில் டார்வின் கீர்த்தி புகழ்மதிக்கு பாராட்டுக்கள்.

"அப்பத்தா நீய்..எல்லாம் செத்துப்போய்ட்டா நானு ஓம் பக்கத்துலயே ஒக்காந்து அழுவேன்.." - பேத்தியின் ஒப்பாரியை கேட்டு அப்பாத்தாக்கள் அகம் மகிழ்வது பேத்தியின் பாச வெளிப்பாடுதான்.. !

வெற்றிக் களிப்பில் வீரன் எழுப்பும் குரல் ஹேய்...வேற்றி...வெற்றி...!! மீனவர்கள் கட்டுமரம் இழுக்கும்போது எழும்குரல் ஏலேலோ... ஐலசா...!! அழும் குழந்தையை அமர்த்த அம்மா சொல்லும்குரல் ஆராரோ..ஆரி..ராரோ..!! இங்கு தன்முயற்சியின் வெற்றியைக் கூற புகழ்மதியின் குரல் டுஜக்..டுஜக்..

குழந்தைகளின் உளவியலை கச்சிதமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர் சுந்தர். அவரின் இம்முயற்சி தொடக்கம்தான் என்றாலும், இன்னும் வரும்.. வரலாம் வா... வரலாம் வா..!
-
செல்வம், ஆசிரியர்
வேதாரண்யம்
நாகை மாவட்டம்


Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!