மாணவர் மனசு நூல் குறித்து சீனி சந்திரசேகரன்
பாரதி புத்தகாலயத்தின் மூலம் வாங்கிய புத்தகம். குழந்தைகள் மொழி, விளையாட்டு, வருத்தம், கொண்டாட்டம் என ஒவ்வொன்றையும் அருமையாக பதிவு செய்திருக்கும் கட்டுரைகள் தொகுப்பு இந்நூல்.
நூலிலிருந்து...
ஆசிரியரை மழலைகள் பயமுறுத்த விளையாடும் விளையாட்டு நெஞ்சைகொள்ளை கொள்கிறது..
மன்னிப்பு கேட்காமலேயே மன்னிக்கிறவங்க மாமனிதர்கள். அந்த குணம் குழந்தைகளிடம் இருக்கிறது.
ஆசிரியர் வீட்டை கண்டுபிடிப்பது ஆனந்தம் குழந்தைகளுக்கு..
குழந்தைக்கு வேறு சொத்துக்களெல்லாம் ஒண்ணும் வேண்டாம். எப்படியாவது அவனை நல்லா படிக்க வச்சிடுங்க சார். அதுபோதும் எனும் பெற்றோர்கள் வேண்டுகோள் கண்ணில் கண்ணீரை வர வரைக்கும்.
எப்பேர்ப்பட்ட ஆசிரியர் இருக்கும் வகுப்பறையாக இருந்தாலும் அவர் போட்ட கால அட்டவணைப்படி கற்றல் நிகழாது. ஆனால் நிகழும் கொஞ்சம் பிந்தி வாரதுகள நின்னு கூட்டிட்டு போகத்தான் இந்த பள்ளிகளுக்கு நேரமே இருப்பதில்லை..
பள்ளிக்கு வந்த அதிகாரி அந்த பதிவேடு எடுங்க இந்த பதிவேடு எடுங்க என ஆரம்பித்தார்.. வந்ததுக்கு ஏதாவது ஒன்றில் பிழை கண்டுபிடிப்பு கைகட்டி வாய் பொத்தி நிற்க வைத்து எங்களை அழகு பார்க்க வேண்டும் என்பதில் அவருக்கு அப்படி ஒரு ஆசை விருப்பம் ஆர்வம் .
கல்வித்துறையில் கோலோச்சுகிற இந்த அதிகார மனோபாவம் தான் முதலில் சரி செய்யப்பட வேண்டிய ஒன்று. பாதிக்கப் படுபவர்களுக்கும் குரல் கொடுக்க நீங்கள் இப்போது முன்வரவில்லை. என்றேனும் ஒரு நாள் உங்களுக்கு அதுவே நேரலாம். அப்போது உங்களுக்காக பேசுவதற்கு உங்கள் முன் ஒருவரும் இருக்க மாட்டார்கள்.
பள்ளிகளில் முதலில் காயடிக்கப்படுகின்ற குழந்தைகளின் முக்கிய குணம் மறுத்தல்..!
ஏற்றுக்கொள், சொல்வதைக் கேள், வளைந்து கொடு, வாழப்பழகு, ஒன்றாம் இடம் பிடி, ஒன்றாக நில்லாதே, அணி சேராதே, குரல் எழுப்பாதே, பணியப் பழகு, இதைத்தானே வேறு வேறு வார்த்தைகளில் சொல்லிக் கொடுக்கிறோம்.?!
இயல்பு இழக்காமல் இரு என்பதை இனி சொல்லித் தருவோம்.
இன்று அருகி, அதிசயம் ஆகி வரும் குழந்தைகள் அளவிற்கு குனிய வேண்டும் என்கின்ற ஆசிரியர் குணத்தை, அழகாக சொல்லித்தருகிறது நூல்..
நூல் : மாணவர் மனசு _ தேனி சுந்தர்
தோழமையுடன்
சீனி சந்திரசேகரன், செங்கல்பட்டு

அழகு 🌹
ReplyDelete