திட்டமிடாத வகுப்பறைகள் : வாசிப்பு அனுபவம் - வாலண்டினா பிரான்சிஸ்

மாணவர் மனசு என்ற புத்தகம்தான் நான் வாசித்த தேனி சுந்தர் அவர்களின் முதல் நூல். அந்நூலில் வகுப்பறையில் குழந்தைகளுக்கும் அவருக்கும் இடையில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை அப்படியே எழுதியிருந்தார். அந்நூலில் சில கட்டுரைகளை வாசிக்கும் போது சிரிப்பு அடக்கமுடியவில்லை. அந்த அனுபவம்தான் இந்நூலைப் படிக்கத் தூண்டியது.




இந்நூலிலும் குழந்தைகளுக்கான வகுப்பறை எப்படி இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு கட்டுரையும் உள்ளது. குழந்தைகளைக் கட்டுப்படுத்துவதைவிட அவர்களுக்குப் பிடித்தமானதை செய்ய விடும்போதுதான் குழந்தைகள் இயல்பாகக் கற்றுக் கொள்வார்கள் என்ற கருத்தை ஒவ்வொரு அனுபவக் கட்டுரையிலும் பார்க்க முடிகிறது.

இவர் எழுதிய ஒவ்வொரு கட்டுரையை வாசிக்கும்போதும் டோட்டாசான் புத்தகத்தில் வரும் கோபயாக்ஷி என்ற தலைமை ஆசிரியர்தான் நினைவுக்கு வருகிறார்.! குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த பேரன்பும் அக்கறையும் ஒவ்வொரு கட்டுரை வாசிப்பிலும் அறிய முடிந்தது.

சும்மா இரு.. என்பதுதான் குழந்தைகளுக்குப் பிடிக்காத விஷயம்.அவர்கள் விருப்பப்படி கற்றல் அமைந்துவிட்டால் கற்றல் ஒரு சுமையாக இருக்காது என்பதையும் அவர் அனுபவம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

திட்டமிடாத வகுப்பறை அனுபவங்கள் குழந்தைகளின் குழந்தைமையை அழிக்காமல் கற்றுக்கொடுக்க அனைவருக்கும் ஒரு பாடம் என்றும் சொல்லலாம்

பேரன்புடன்
வாலண்டினா பிரான்சிஸ், தூத்துக்குடி

#திட்டமிடாத_வகுப்பறைகள்
#தேனிசுந்தர்

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!