சீமையில் இல்லாத புத்தகம் குறித்து ஆசிரியர் தி.தாஜ்தீன்






தேனி மாவட்டம் எனும் பெயரை கேள்விப்பட்டதும் கண்ணுக்கு விருந்து, மலைகள், பள்ளத்தாக்குகள், அருவிகள், குன்றுகள். பச்சைப்பசேல் எனப்பரந்து விரிந்த அழகிய இடங்கள், எண்ணிலடங்கா தேனி மாவட்டம், தமிழகத்தின் பொக்கிஷம், இயற்கை அழகின் தோட்டம், எப்போதும் மனதை கொள்ளை கொள்ளும் என்பது அனைவரும் அறிந்ததே.  தேனிக்கு மற்றொரு பெருமை சேர்க்கும் விதமாக கல்விப் பணியில் எழுத்து ஆற்றலில் சிறப்பாக பங்காற்றி வருகிறார் தேனி சுந்தர் (Theni Sundar).

தேனி சுந்தர் (Theni Sundar) அவர்கள் டுஜக் டுஜக், எதிர்பாராத பரிசு, மாணவர் மனசு, ஓங்கூட்டு டூனா, தேசிய கல்விக் கொள்கை, மற்றும் “சீமையில் இல்லாத புத்தகம்” போன்ற புத்தகங்களை எழுதி உள்ளார்கள். இவர் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் குழந்தைகளின் வாசிப்பு உலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது.

குறிப்பாக என்னைக் கவர்ந்த நூல்சீமையில் இல்லாத புத்தகம்” (Seemaiyil Illatha Puthagam). இந்த புத்தகம், குழந்தைகளின் சிந்தனைத் திறனை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், அவர்களது கற்பனை உலகை விரிவுபடுத்துவதிலும் சிறப்பாக பங்காற்றும் சக்தி கொண்டது.

ஒரு அப்பா, இரு குழந்தைகள், ஒரு அற்புத உலகம். இந்த நூல், ஒரு அப்பாவிற்கும் இரு குழந்தைகளுக்கும் இடையிலான அன்றாட உரையாடல்களை மையமாகக் கொண்டு, குழந்தைகளின் பல்வேறு கேள்விகளுக்கு சுவாரசியமான விடைகளைத் தருகிறது.

வாசிக்கக் கூடிய வாசகர்களே மகிழ்விக்கும் விதமாக டார்வின், புகழ்மதி, கீர்த்தி என்ற மூன்று குழந்தைகள் நமக்கு நண்பர்களாகி, அவர்களுடன் சேர்ந்து பல புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் அளவிற்கு ஆசிரியன் எழுத்தாற்றலை உணரலாம்.

புதிர்கள், விளையாட்டுகள், உரையாடல்கள் போன்றவை மூலம் குழந்தைகளின் சிந்தனைத் திறனை ஊக்குவிக்கப்படுகிறது. ஒவ்வொரு கேள்விக்கும் பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைக்கும் இந்த நூல், சிறு வயதிலேயே சிந்தனைப் பழக்கத்தை ஏற்படுத்துகிறது.

கற்பனை கதைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் குழந்தைகளின் கற்பனை உலகம் விரிவடைகிறது. புதிய உலகங்களை கற்பனை செய்து, அதில் பயணிக்க வைக்கும் இந்த நூல், குழந்தைகளின் படைப்பாற்றலைத் தூண்டுகிறது.

புதிய சொற்களை அறிமுகப்படுத்தி, மொழி வளர்ச்சிக்கு உதவும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. குழந்தைகள் புதிய சொற்களை கற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அவற்றை சரியான இடத்தில் பயன்படுத்தவும் கற்றுக்கொள்கிறார்கள.

இந்த நூல் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் ஒரு சிறந்த கையேடு. குழந்தைகளுடன் எப்படி உரையாடுவது, அவர்களின் கேள்விகளுக்கு எப்படி பதிலளிப்பது என்பது குறித்த பல நல்ல யோசனைகளை இந்த நூல் தருகிறது.  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இந்த நூலை படித்து, அவர்களுடன் விவாதிக்கலாம்.

“சீமையில் இல்லாத புத்தகம்” (Seemaiyil Illatha Puthagam) என்பது குழந்தைகளுக்கான ஒரு அற்புதமான பரிசு. இந்த நூல், குழந்தைகளின் அறிவு, சிந்தனைத் திறன் மற்றும் கற்பனைத் திறனை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேனி சுந்தர் (Theni Sundar) அவர்களின் இந்த படைப்பு, தமிழ் குழந்தை இலக்கிய உலகில் ஒரு முக்கியமான பங்களிப்பாகும்.
நூலின் விவரம்:

ஆசிரியர்: தேனி சுந்தர் (Theni Sundar)
விலை: ரூ.100
தி.தாஜ்தீன்
முதுகலை ஆசிரியர்,
அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி,
அவனியாபுரம், மதுரை
நன்றி : புக்டே.இன்



Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

நீர் விளக்கு - பென்னிகுக் நூல் அறிமுகம்

கணக்கும் இனிக்கும்