அறிவியல் திருவிழா
இது என்ன அறிவியல் திருவிழா? வித்தியாசமாக இருக்கிறதே என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கு கொஞ்சம் அப்பாற்பட்ட நண்பர்களுக்கு தோன்றக்கூடும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் தமிழகம் முழுக்க அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் அதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டது நான் இங்கே சொல்லப்போவது.. டிப்டாப்பான மெட்ரிக் மாணவர்களும் சட்டைப்பித்தானின்றி பின்னூக்கு அணிந்த அரசுப்பள்ளி மாணவர்களும் ஒன்றாய் கலந்துகொண்ட திருவிழா.. மிகப்பெரிய மாநகரங்களைச் சேர்ந்த மாணவர்களும் எந்தவிதத்திலும் வெளியுலகிற்கு அறிமுகமே ஆகாத, போக்குவரத்து வசதிகளேகூட இல்லாத மிகப்பின்தங்கிய கிராமத்து மாணவர்களும் ஒருசேரக் கலந்து கொண்ட திருவிழா.. தமிழகம் முழுவதுமிருந்து இண்டர்நேஷனல் பள்ளிகள்,அரசுப் பள்ளிகள்,அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், துளிர் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் பயிலும் சிறப்புப் பள்ளிகள், இரவுப் பள்ளிகள் என அனைத்து விதமான பள்ளிகளிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட ஒரு திருவிழா.. ஆம். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தி...