தேய்ந்து வரும் அரசுப்பள்ளிகள்
நண்பர்கள் பலரிடம் பேசும்போதும் சரி, சில கூட்டங்களில் விவாதிக்கும் போதும் சரி.. அரசுப்பள்ளிகளில் சரிந்துவரும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து பேசினால் அப்பிரச்சனையை நாம் மிகைப்படுத்திப் பேசுவதாகவே சிலர் கூறக்கேட்டிருக்கிறேன்.. அந்த வகையில் நமது புரிதலுக்காக சில தகவல்கள்… அனைவருக்கும் கல்வி இயக்க இணையதளத்தில் தமிழ்நாட்டின் மொத்தம் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை, நிர்வாக வாரியாக அப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் எண்ணிக்கை பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளது.. ( Source: http://ssa.tn.nic.in/ Statistics.htm ) தமிழகத்தில் உள்ள முப்பது மாவட்டங்களிலும் சேர்த்து 37141 அரசுப்பள்ளிகள், 8409 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11642 தனியார் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 57192 பள்ளிகள் உள்ளன.. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் தான் அதிகபட்சமாக 80%க்கும் மேல் அரசுப்பள்ளிகள் இருக்கின்றன.. திருநெல்வேலி. தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகியமாவட்டங்களில் 50%க்கும் குறைவான அரசுப்பள்ளிகள் தான் இருக்கின்றன.. தலைந...