அனைவருக்கும் வேண்டும் தரமான கல்வி....!
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தமிழகக் கல்வித்தர மேம்பாட்டிற்கான கோரிக்கைகள் தொகுக்கப்பட்டன.. அக்கோரிக்கைகள் அடங்கிய பிரசுரம் அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.. அனைத்து ஆசிரியர்களும் அறிந்துகொள்ள வேண்டியல் பட்டியல்.. இதோ உங்கள் முன்..: தமிழ்நாடு மீண்டும் ஒரு ஜனநாயகத் திருவிழாவைச் சந்திக்க இருக்கும் சூழல்.. அறிவொளி இயக்க காலம் தொடங்கி இன்றுவரை தமிழ்நாட்டின் கற்றல், கற்பித்தல், மதிப்பீட்டு உத்திகள், கல்வித் திட்டங்கள், ஆசிரியர்கள் அறம்சார் செயல்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்திவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த முறை தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கீழ்க்காணும் கல்விசார்ந்த கோரிக்கைகளை முன்வைக்கிறது... தமிழ்நாட்டில் அழிவின் விளிம்பில் இருக்கும் அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்து முற்றிலும் அரசின் செலவிலும் பொறுப்பிலுமான பொதுப் பள்ளி முறையை, உண்மையான சமச்சீர் கல்வி முறையைக் கொண்டு வருவதே புதிய அரசின் தலையாய கடமையாக இருக்கவேண்டும்.. அரசுப்பள்ளியில், தாய்மொழிவழிக்கல்வியில் பயின்ற மாணவர்களுக்கே அரசு உயர்கல்வி நி...