நூல் அறிமுகம் : புரட்சியாளன் லெனினுடன் வாழச் செய்யும் ஒரு நூல்
நீலக் குறிப்பேடு. . இந்த நூல் ரஷ்ய புரட்சியின் நெருக்கு வட்டத்தில், மிகவும் பதற்றமான ஒரு காலகட்டத்தில் புரட்சியாளர் லெனின் அவர்களுடைய வாழ்வின் ஒரு சில நாட்களை அப்படியே காட்சிப்படுத்தும் விதமாக கசாகேவிச் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு திகிலூட்டும் பயணக் கதையா? வரலாற்றுக் குறுநாவலா? புரட்சிக் குழுவின் வாழ்க்கையா? குடும்பச் சித்திரமா என வியப்பூட்டும் வகையில் இருக்கிறது. வெளி நாடுகளில் வாழ்ந்து வந்த லெனின் பிப்ரவரி புரட்சிக்கு பிறகு ரஷ்யாவுக்கு வருகிறார். ஒரு பண்டிகை நாளன்று பெட்ரோகிராடு நகருக்கு ரயிலில் வருகின்ற தோழர் லெனின் இந்த நிலையில் நம்மை வரவேற்க அங்கு யார் இருப்பார்கள்.. தங்குவதற்கு என்ன செய்வது என்றெல்லாம் பல்வேறு சிந்தனைகளில் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நினைத்தவற்றுக்கு மாறாக அங்கு ஏராளமான தோழர்கள் திரண்டு அவரை வரவேற்பது கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறார்.. அடுத்த சில நாட்களில் அவருக்கு உள்ள ஆபத்துகளால் தலைமறைவாக இருக்க வேண்டிய நெருக்கடி. பெட்ரோகிராடு அருகிலேயே ஒரு சிறு கிராமத்தில் எமல்யனோவ் என்கிற விவசாயத் தோழருடைய பாதுகாப்பில் இருக்க வழிகாட்டப் படுகிறது. தோ...