Posts

Showing posts from May, 2020

நூல் அறிமுகம்: ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல் - டாக்டர் அம்பேத்கர்

Image
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கைப்பட எழுதிய நினைவலைகளில் இருந்து சில பகுதிகள் மட்டும் தொகுக்கப்பட்டு மக்கள் கல்விக் கழகத்தால் 1990ல் ஒரு சிறு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது இந்நூல். அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 25லும் இவை இடம்பெற்றுள்ளதாகவும் ஒரு குறிப்பு உள்ளது. தீண்டாமை வழக்கத்திலிருப்பதை பற்றி வெளிநாட்டவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால் அது எவ்வளவு கொடூரமானது என்பதை அவர்களால் உணரமுடிவதில்லை. இந்து மக்கள் அதிகம் வாழும் தனது கிராமத்தின் ஒரு ஒதுக்குப்புறத்தில் வாழ்ந்து, அறுவறுக்கத்தக்க அத்தனை கழிவுகளையும் அகற்றி, வாசலில் நின்று உணவு பெற்று, கடைகளிலும் கூட எட்ட நின்று பொருட்களை வாங்கி, அந்த ஊரில் யாரையும் தீண்டாமலும் யாராலும் தீண்டப்படாமலும் இருக்கும் மக்கள் அதனைத் தன் சொந்த ஊராகக் கருதுகிற அவலத்தை எப்படி வெளிநாட்டவர்களுக்கு உணர்த்துவது என்கிற முன்னுரையுடன் அம்பேத்கர் தன் வாழ்விலும் பிறர் வாழ்விலும் தீண்டாமை காரணமாக நிகழ்ந்த கசப்பான சம்பவங்கள் முன்வைக்கப்படுகின்றன. 1901, அப்போது அம்பேத்கருக்கு ஒன்பது வயது. அவருடைய அப்பா பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு க...

நூல் அறிமுகம்: நிக்கோலஸ் ஒஸ்திராவஸ்கியின் வீரம் விளைந்தது (சிறார் பதிப்பு)

Image
பாவல் கர்ச்சாக்கின் ஒரு பனிரெண்டு வயதுச் சிறுவன். தன் குடும்பச் சூழல் காரணமாக ரயில் நிலையத்தில் உள்ள கேண்டீனில் வேலை செய்கிறான்.. சிறுவன் என்பதால் இருக்கின்ற வேலைகளையெல்லாம் அவன் தலையில் சுமர்த்துகின்றனர் உணவகத்தார். ஏற்கனவே தொடர்ந்து 24 மணி நேரம் வேலை செய்து சோர்ந்து போயிருக்கிறான். அடுத்து ஷிப்ட்டுக்கு வர வேண்டிய பணியாளர் வரவில்லை என்பதால் தொடர்ந்து வேலை செய்ய கட்டாயப் படுத்துகிறார்கள். கொதிகலனில் தண்ணீர் பிடிக்கச் செல்கிறான். குழாயின் தண்ணீர் வரவில்லை. உடல் அசதி காரணமாக குழாயருகில் உட்கார்ந்தவாறே தூங்கி விடுகிறான். கொஞ்ச நேரத்தில் குழாயில் தண்ணீர் வந்து கொதிகலன் நிரம்பி அந்த அறையிலும் தண்ணீர் சூழ்கிறது. தண்ணீர் உடலில் பட்டபிறகு தான் பாவம் அந்தச் சிறுவன் கண்விழித்து அவசரமாக எழுகிறான். ஆனாலும் அவனது நிலையை உணராமல் அடித்து வேலையை விட்டே துரத்தி விடுகிறார்கள். அதன் பிறகு அவனுடைய அண்ணன் ஆர்தெம், உக்ரைனில் அவர்கள் வாழும் ஷெபதோவ்காவிலேயே உள்ள மின்நிலையத்தில் உதவியாளர் பணிக்குச் சேர்த்து விடுகிறான். அங்கு பணிபுரியத் தொடங்குகிறான். ரஷ்யாவில் அப்போது ஜார் மன்னனின் கொடும் ஆட்சி...

நூல் அறிமுகம்: நிறம் மாறிய காகம் – தேனி சுந்தர்

Image
இது ஒரு சிறார் சித்திரக் கதைகளின் தொகுப்பு நூல். மிக எளிய வார்த்தைகளில், மிகச் சிறிய வாக்கியங்களில் குழந்தைகளை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. இந்நூலில் உள்ள இருபத்தோரு கதைகளும் பல்வேறு நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டவை. மொழிபெயர்க்கப்பட்டவை. வாசிப்புப் பயிற்சிக்கான கருவியாக உருவாக்கப்பட்டுள்ள இந்நூலின் தொகுப்பாசிரியர் தோழர் யூமா வாசுகி. கதைகளுக்கேற்ற அழகிய சித்திரங்களை வரைந்திருப்பவர் ஓவியர் கி.சொக்கலிங்கம். இந்த கொரனா பொது அடங்கு காலத்தை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பயனுள்ளதாக மாற்றியமைக்கும் வண்ணம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சென்னை, ஈரோடு, தேனி, சேலம், திருப்பூர் என ஏராளமான இடங்களில் உள்ள நண்பர்கள் இணையவழிச் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் அறிவியல் இயக்கக் கிளையின் சார்பில் நண்பர் மனத்துணைநாதன் ஒருங்கிணைக்கும் சிறார்களுக்கான புத்தக நண்பன் என்கிற நிகழ்வும் குறிப்பிடத் தக்க ஒன்று. தமிழகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள், கதைசொல்லிகள், ஆசிரியர்கள் எனப் பலரும் அந்நிகழ்வில் கதைகளைச் சொல்லி வருகின்றனர். அதில் எனக்கும் ஒரு நாள் மாலை கதை...

நூல் அறிமுகம்: கறுப்பர் நகரம் நாவல்

Image
இரட்டை ஆயுள் தண்டனை முடிந்து மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிறையின் கதவுகள் திறக்க, விடுதலையாகி வரும் செங்கேணி தான் கதையின் நாயகன். காணும் எல்லாமே மாற்றமடைந்து இருக்கின்றன.. புதிய புதிய கட்டிடங்கள்.. அதுவும் பெரிது பெரிதாக.. ஒவ்வொரு இடங்களைப் பார்க்கும் போதும் செங்கேணியின் நினைவுகள் முன்னும் பின்னுமாக அலைமோதுகின்றன. அனைத்தையும் பார்த்துக் கொண்டே நடக்கிறார்.. நடக்கிறார்.. திக்குமில்லை திசையுமில்லை.. போய்ச்சேர இலக்குமில்லை.. தெரிந்த முகம் எதுவுமில்லை. சிறையில் உடனிருந்து ஏற்கனவே விடுதலையான ஒருவன் மட்டும் இவரை அடையாளம் கண்டு ரோட்டோரமாக தங்க, தூங்க ஒரு இடம் பிடித்து கொடுக்கிறான்.. நானும் அனாதை, நீயும் அனாதை.. என் கூடவே இருந்துடு மாமான்னு சொல்லிப் பார்க்கிறான்.. செங்கேணி கேட்கவில்லை.. விடிந்ததும் எழுந்து நடக்கிறார். தான் வாழ்ந்த பகுதியைத் தேடிப் போகிறார்.. குடிசைகள் இருந்த இடங்கள் முழுவதும் குப்பை மேடுகள்.. குப்பை மேடுகளில் ஏறி ஏறித் தேடுகிறார்.. அவர் முன்பு வாழ்ந்த குடிசையின் அருகில் ஓயாமல் அலறிக்கொண்டிருந்த மின்நிலையம் பாழடைந்து கிடைப்பது தெரிகிறது.. அங்கிருந்து விரிகிறத...

நூல் அறிமுகம்: பானை செய்வோம் பயிர் செய்வோம்

Image
பானை செய்வோம் பயிர் செய்வோம்: நூலறிமுகம் இந்த கொரானா காலகட்டத்தில் மிகவும் போற்றத்தக்க பணிகளைச் செய்தவர்கள் மருத்துவர்களும் செவிலியர்களும் துப்புரவுப் பணியாளர்களும் தான்.. உயிரைப் பணயம் வைத்து தங்கள் பணிகளை மேற்கொண்டார்கள்.. நாம் வீட்டு வாசலில் நின்று கைகளைத் தட்டியும் விளக்குகள் ஏற்றியும் நன்றி தெரிவித்தோம்.. இதனால் அந்தப் பணியாளர்களுக்கு என்ன பிரயோஜனம்? கிராமங்கள், நகரங்களில் தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களாக , நிரந்தரமற்ற ஊதியத்துடன் அளவுக்கு மீறிய பணிச்சுமையுடன் நாட்களைக் கடத்தும் அந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு நமது கைதட்டல் ஓசையும் விளக்கின் ஒளியும் என்ன தந்துவிடும்? மருத்துவருக்கு என்ன சம்பளம் வழங்கப்படுகிறதோ அதே சம ஊதியம் பொதுசுகாதாரத்தைப் பேணும் துப்புரவுப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்கிறார் இந்நூலின் ஆசிரியர் காஞ்சா அய்லய்யா. அதை விரிவாகப் பார்ப்போம். 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உயர்கல்வி நிறுவனங்களில் 27% இட ஒதுக்கீடு அறிவித்த போது ஏற்கனவே அத்தகைய உயர்கல்வி நிறுவனங்களில் படித்துக் கொண்டிருந்த வசதிமிக்க, உயர...