நூல் அறிமுகம் : மோகனா : ஓர் இரும்புப் பெண்மணியின் கதை - தேனி சுந்தர்
அறிவியல் இயக்கத்தை அறிந்தவர்கள் அனைவரும் பேரா.மோகனாவை அறிவார்கள்.. ஆகச் சிறந்த கருத்தாளர்.. எந்த தலைப்பில் பேச வேண்டுமென்றாலும் பேசிக் கொண்டே இருப்பார்.. அவ்வளவு சீக்கிரம் உரையை முடிக்கமாட்டார் என்பது தான் அவரைப் பற்றி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக நமக்குள்ள பயம்.. வானியல் குறித்துப் பேசும் போது எந்த குறிப்பும் இல்லாமல் ஏராளமான தகவல்களை சொல்லிக் கொண்டே போவதை பல நாட்கள் வியப்புடன் பார்த்திருக்கிறேன்.. அதே போல வாய்க்குள் வராத அறிவியல் பெயர்கள், விஞ்ஞானிகளின் பெயர்கள் அவர்களின் காலம் போன்றவற்றையும் கூட குறிப்பின்றியே பேசுவார்.. அப்படியொரு வியக்கத்தகு நினைவாற்றல் உடையவர்.. அந்த நினைவாற்றல் துணையுடன் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார்.. அதிலும் பல சம்பவங்களை தேதியுடன் குறிப்பிட்டிருந்தார்.. நான் அவரைத் தொடர்புகொண்டு, எப்படி தேதிகளுடன் எழுதியிருக்கிறீர்கள்..? டைரி எழுதி உள்ளீர்களா..? என்று கேட்டேன்.. இல்லை தோழர், எல்லாம் நினைவிலிருந்து தான் என்றார்.. ஆச்சர்யமாக இருந்தது. பார்க்கும் அனைவரிடமும் எளிதாகக் கலந்து விடுவார்.. பழகிய, பேசிய எல்லோரையும் நினைவில் வைத்திருப்பார்.. திடீரென போனில் அழை...