பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வைத்த BRTE பூஜ்ஜியக் கலந்தாய்வு..!
தேனி மாவட்டத்தில் கலந்தாய்வு அறிவிப்பிற்கு முன்பிருந்த மொத்த ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள் 56. அதில் இறப்பு, ஓய்வு, கன்வர்சன் காரணமாக கட்டாயமாகப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் 10. (வழக்கு காரணமாக இன்னும் 8 பேர் பணி விடுவிப்பு செய்யப்படவில்லை). ஆக, இந்த நிலையிலேயே தேனி மாவட்டத்தில் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 13 ஆகும். கலந்தாய்வுக்கு இருநாள் முன்னதாக பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதன் அடிப்படையில் புதிதாக 22 பணியிடங்கள். ஆக மொத்தம் தேனி மாவட்டத்தில் மட்டும் 35 காலிப் பணியிடங்கள் இருந்தன. மாவட்டத்திற்குள் வர வேண்டும் என கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தவர்கள் எண்ணிக்கை 15. ஏற்கனவே இருப்பவர்கள் தொடர்ந்து சொந்த மாவட்டத்தில் பணிபுரிவது போக, பணி நிரவல் காரணமாக வெளியில் சென்றவர்கள் 15 பேரும் மாவட்டத்திற்குள் வந்திருக்க முடியும். அது மட்டுமின்றி கூடுதலாக இன்னும் 20 பேர் தேனி மாவட்டத்திற்குள் வந்திருக்க முடியும். மிக முக்கியமாக பணி நிரவல் காரணமாக மாவட்டத்திற்கு வெளியில் சென்றவர்களை உள்ளே கொண்டு வருவதற்கான முயற்சியாக நடந்த இந்த கலந்தா...