அருண் மோ வின் “பெரியார் தாத்தா” – சு.டார்வின்
ஒரு ஊரில் மாறன் என்று ஒரு சிறுவன் இருந்தான். அவனுக்கு கதை கேட்காமல் தூக்கம் வராது. ஒரு நாள் அவங்க அம்மா தூங்கிட்டதால அப்பா தான் கதை சொன்னார். அப்போ ஒரு கேள்வி கேட்டார். அவர் என்ன கேள்வி கேட்டார்ன்னா, அவங்க வீட்டு ஹால்ல ஒரு பெரியார் போட்டோ இருந்தது. அதைப் பத்தி கதை சொன்னார். அவர், பெரியார் பத்தி விசயங்களை சொன்னார். என்னவென்றால் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் கழிச்சு அவங்க ஹால்ல ஒரு நிழல் தெரிந்தது. பெரியார் நிழல் தான். அப்போ அதைப் பார்த்து அங்கே போனான்.. ஐ.. பெரியார்..! அப்பா, இங்கே பாருங்க, பெரியார் தாத்தா..! அவரும் வந்து பார்த்தார்.. அட, ஆமா.. பெரியார் தாத்தா தான்.. மாறன் அவங்க அப்பாவுக்கு தூக்கம் கண்ணைக் கட்டியது. பெரியார் தாத்தா சொன்னார், பேரா, ஏங்கூட வா.. சில விசயங்கள் சொல்றேன் என்றார். அப்போ அவர் கையில் ஒரு தடி வைத்திருந்தார்.. அதை வைத்து ஒரு மினி ஜெட் உருவானது.. அதில் ஏறிக் கொண்டனர். சிறிது நேரத்தில் ஒரு கிராமம் வந்தது. அந்த கிராமத்தில் மக்கள் எல்லோரும் கேஸ் எரிக்க பணம் கட்ட முடியாமல் மரத்தையெல்லாம் வெட்டி வெட்டி விறகு எரித்தனர். மரத்தையெல்லாம் வீணாக்கி விட்ட...