சீமையில் இல்லாத புத்தகம் – நூல் குறித்து து.பா.பரமேஸ்வரி
மனிதன் மொழியை இயற்கையிடமிருந்து கற்றான். பறவைகளின் கிறீச்சல்கள் பூச்சிகளின் ரீங்காரங்கள் காற்றின் அசைவு இலைகளின் இசைவுமழையின் ஓசை இடியின் மொழி அருவியின் சலசலப்பு என மொழிகளின் ஜீவிதம் இப்புவியில் தோன்றும் முன்னம் மனித உணர்வின் வெளிப்பாடுகளும் பரஸ்பர அறிவுறுத்தல்களும் இப்பேரண்ட படைப்புகளின் வழியே உதயமானது. தொடர்ந்து சப்த லயங்களும் குரல் ஓசைகளும் நாவின் சுழல்களும் மனிதனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சாதனங்களாகத் திகழ்ந்தன. சுற்றுச்சூழலின் வகைமைக்கேற்ப தட்பவெப்ப மாறுதலுக்கேற்ப மனிதக் குழுக்களின் ஒன்றிணைந்த பரிபாஷ சௌகரியங்கள் ஆங்காங்கே கவரப்பட்ட பல்லுயிர்களின் பரிபாலனங்களை உள்வாங்கியும் என மொழிகளின் ஜனனம் என்பது மனிதகுல பரிணாமத்தின் பரிமாண வளர்ச்சி, மொழி உற்பத்தியான வரலாறு. அதே போல் ஒரு குழந்தை தனக்கான மொழியை முதன்முதலில் யாரிடம் கற்கிறது என்று ஆராய்ந்தால் படைப்பின் இயற்கை வழியாக என்பது ஒருபுறமிருந்தாலும், பிற உயிர்களுக்கு தன்னியல்பாக வெளிப்படும் குரலதிர்வு அவற்றின் தாய்வழி மொழி மனித குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை ஆதலால் தேவையின் பொருட்டு தமது அழுகையில் வெளிப்படுத்துவதும், நிறைமையை தமது பொ...