Posts

Showing posts from May, 2023

ஓங்கூட்டு டூணா : தினமலர் நாளிதழ் நூலறிமுகம்

Image
மழலையர் வகுப்பறையில் பெற்ற அனுபவங்களை இலக்கிய மனதுடன் பகிர்ந்துள்ள நுால். நிகழ்வுகளை எளிய கவிதைகள் போல் சுவாரசியம் குன்றாமல் தருகிறது. வாழும் சூழலை புரிய துடிக்கும் மழலையர் செயலை உள்வாங்கி அற்புதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கற்பிக்கும் போதே கற்றலும் உணர்வுப்பூர்வமாக வெளிப்பட்டுள்ளது. அறியாமல் தவிப்பது போன்ற ஆசிரியரின் பாவனைகள், எளிய கற்பித்தல் உத்தியாக வெளிப்பட்டுள்ளன.வகுப்பறையை கூர்ந்து கேட்டல், விழிப்புடன் இருத்தல், சமநோக்கு பார்வை என மழலையருக்கு கற்பிக்கும் ஆசிரியருக்கு இருக்க வேண்டிய பண்புகளை வெளிப்படுத்துகிறது. பதிவாகியுள்ள ஆக்கங்கள், மழலை மொழியை மகிழ்வுடன் உள்வாங்கிய இனிய கவிதைகள் போல் இதம் தருகின்றன. – மலர் தினமலர் நாளிதழ் நூலறிமுகம்

ஆசிரியர் இளங்கோ கண்ணன் எழுதிய "தவசு" நூல் குறித்து...

நான், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்துகிற புது விழுது: இருமாத கல்வி இதழின் ஆசிரியராக இருந்த போது ஒவ்வொரு இதழ் தயாராகும் முன்பும் தொடர்பில் இருக்கும் அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும் இதழுக்கு படைப்புகள் கேட்டு தகவல்கள் அனுப்புவதுண்டு.. வாட்ஸ்அப், குறுந்தகவல், மின்னஞ்சல், முகநூல், மெசஞ்சர், கடிதம் என அனைத்து வழிகளிலும் முயற்சிப்பது வழக்கம். "அய்யய்யய்யய்ய்யே..இவனோட பெரிய தொல்லையாக இருக்கே..!" என்று எத்தனை பேர் திட்டினார்களோ தெரியாது..! ஆனாலும் நான் தொடர்ந்து கொண்டே இருப்பேன். தமிழகம் அறிந்த கல்வியாளர் பெருமக்கள் மரியாதைக்குரிய எஸ்.எஸ்.ராஜகோபாலன், பேரா.ச.மாடசாமி, ஆயிஷா நடராசன், பிரின்ஸ் கஜேந்திர பாபு, விஞ்ஞானி தவி வெங்கடேஸ்வரன், கவிஞர் முத்து நிலவன் என ஏராளமான பெரிய தலைக் கட்டுகளிடம் எல்லாம் கட்டுரைகளை வாங்கிவிடுவேன்.. இருந்த போதிலும் நம்ம ஆசிரியர் பெருமக்களிடம் இருந்து பெரிய அளவுக்கு படைப்புகள் வந்து சேராது. ஆசிரியர் குழுவில் இருக்கும் நண்பர்களிடமே கூட போராடித்தான் வாங்க வேண்டி இருக்கும்.. நம்மை மகிழ்விக்கும் வகையில் படைப்புகள் அனுப்பிய ஒரு சில ஆசிரியர்களுள் நெல்லை இளங்கோ கண்ணனு...

வளர்ந்து வரும் ஓர் இலக்கிய வகை இது - ச.தமிழ்ச்செல்வன்

Image
டுஜக் டுஜக் என்கிற நூலின் மூலமாக புகழ்பெற்ற எழுத்தாளர் தேனி சுந்தரின் இரண்டாவது முயற்சி இது. டுஜக் டுஜக் நூலில் அவர், அவருடைய குழந்தைகளின் உரையாடல்களையும் அவர்களுடனான உரையாடல்களையும் தொகுத்திருந்தார். ஆசிரியரான அவர் இந்த நூலில் வகுப்பறைக் குழந்தைகளின் பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் படம் பிடித்திருக்கிறார்.. தமிழில் இப்போது வளர்ந்து வரும் ஓர் இலக்கிய வகை இது. குழந்தைகளின் உலகத்துக்குள் நுழைய பெரியவர்களுக்கு எளிதில் பாஸ்போர்ட் கிடைப்பதில்லை. அந்த பாஸ்போர்ட்டுக்காக பலரும் மனுப் போட்டுக் கொண்டுள்ளார்கள் பலகாலமாக.. குழந்தைகளுடன் நடத்தும் உரையாடல்கள் அவர்களின் மனப்போக்கு எத்திசையில் செல்கிறது என்பதைக் கணிக்க உதவும் கருவியாக பயன்படுவதை இத்தகைய நூல்கள் காட்டுகின்றன.. வீட்டுக்கு நிறைய விருந்தாளிங்க வந்திருக்கும் போது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர், அன்று வகுப்பில் அவள் அழுதுகொண்டே இருந்தாலும் பள்ளிக்கூடம் போனால் நாலு எழுத்துப் படிச்சுக்குவாளே என்று சொல்கிறார்கள். வீடு நிறைய விருந்தாளிகள் வந்திருக்கும் போது வீட்டில் இருந்தால் குழந்தைகள் எவ்வளவோ கத்துக்குமே என்று தேனி சுந்தர் எழுதுகிற...

ஆசிரியர் நாட்குறிப்பு : வெங்களத்தூர் பள்ளி

Image
ஆசிரியை உதயலட்சுமி எழுதிய ஆசிரியர் நாட்குறிப்பு : வெங்களத்தூர் பள்ளி சமீபத்தில் வகுப்பறை அனுபவங்கள் தொடர்பான பல அனுபவங்கள் சார்ந்த நிறைய கட்டுரைகள், நூல்கள், சமூக வலைத் தள பதிவுகள் வரத் துவங்கி உள்ளன. நானும் எழுதி இருக்கிறேன். "ஓங்கூட்டு டூணா..!" என்கிற தலைப்பில் வந்திருக்கும் அந்நூல் பால்வாடி மற்றும் முதல், இரண்டாம் வகுப்பு குழந்தைகள் உடனான அனுபவங்கள்.. அவர்களது உரையாடல்கள்.. விளையாட்டுகள் அடங்கியது. ஆசிரியை உதயலட்சுமி எழுதி இருக்கும் இந்நூல் 6 முதல் 10ஆம் வகுப்பு குழந்தைகள் தொடர்பானவை.. ஒவ்வொரு வகுப்பு குழந்தைகளின் புரிதலும் அனுபவமும் எதிர்பார்ப்புகளும் அவர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளும் வெவ்வேறானவை. அந்த அடிப்படையில் மிக முக்கியமான ஒன்று. பேரா.மாடசாமி அவர்களின் நீண்ட நாள் ஆசை, இதுபோன்ற வகுப்பறை டயரிகள் நிறைய ஆசிரியர்களால் எழுதப் பட வேண்டும் என்பது. அவரே அணிந்துரை எழுதியுள்ளார். மேலும் நண்பர்கள் விழியன், சிவா உள்ளிட்டோரும் எழுதி இருக்கிறார்கள்.. நாங்க குட்டிப் பள்ளிக் கூடத்து வாத்தியார்கள். பெரிய பள்ளிக் கூடத்து வாத்தியார்கள் பெரும்பாலானவர்களை சந்திக்கும் போது மிகவும் வெறு...

என் பெயர் ராஜா – வாசிப்பு அனுபவம் – சு.டார்வின்

Image
நாங்க சென்னைக்கு, புத்தகக் கண்காட்சிக்கு போயிருந்தப்ப வாங்குன புத்தகம் என் பெயர் ராஜா.. அந்தக் கதை தான் இது. நான் ஒரு கோம்பை நாய். எங்க அம்மா பெயர் ராணி. என் அம்மா ஒரே சமயத்தில் ஐந்து குட்டிகள் ஈன்றாள். அதில் முதல் குட்டி நான் தான். என் பெயர் ராஜா. நான் மூன்று மாத குட்டி. ஆனால் ஒன்று, என்ன ஆனாலும் என் தங்கச்சி மீது தான் அம்மா ரொம்ப பாசமாக இருப்பாள். ஒரு நாள் என் அம்மா ராணி உடைய எஜமான் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது, என் தம்பிகள் மூன்று பேரையும் தூக்கிப் போயி விட்டார். என் அம்மாவிடம் கேட்ட போது, அவர்களை விற்பனை செய்ய போவதாக சொன்னாள். எனக்கு விற்பனை என்றால் என்ன என்று தெரியாது. தாயாரிடம் கேட்டேன். அதாவது மகனே, விற்பனை என்றால் இப்போது நம்மிடம் இருக்கும் பொருளை இன்னொருவருக்கு கொடுத்து விட்டு பணம் வாங்கிக் கொள்வது என்று கூறினாள். விற்பனைக்கு என்று சந்தை இருக்கும். அங்கே காய்கறி, மீன், கறி என்று நிறைய இருக்கும். அங்கே தான் என்னையும் என் எஜமான் வாங்கி வந்தார். அங்கே தான் உன் மூன்று தம்பிகளையும் விற்பனை செய்யப் போகிறார்கள் என்று அம்மா சொன்னாள். அடுத்து எங்க அம்மா சொன்ன மாதிரியே என்னை...

தோழர் சீருடையான் அவர்களின் புதிய நாவல் "ஒற்றை வாசம்"

Image
சில நேரங்களில் புத்தகங்கள் வருகிற பார்சல்களைப் பிரித்த கையோடு வாசிக்க உட்கார்ந்து விடுவதுண்டு. நாம் ஆர்டர் போட்டு வாங்குகிற நூல்களை விட அன்பின் நிமித்தமாக அனுப்பி வைக்கப் படுகிற நூல்களுக்கு கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதுண்டு. அந்த வகையிலேயே தோழர் சீருடையான் அவர்களின் புதிய படைப்பான "ஒற்றை வாசம்" நாவல் வாசிப்பும் தொடங்கியது. அதிலும் நம்ம தேனியை மையப்படுத்திய படைப்புகள் என்றால் இயல்பாகவே கொஞ்சம் கூடுதலான ஈர்ப்பு வந்து விடுகிறது தானே.. இன்று போய், தேனியில் இறங்கி "காட்டுச் சாலை" எங்கு இருக்கிறது என்று கேட்டால் கிட்டத்தட்ட யாருக்கும் தெரியாது என்று தான் நினைக்கிறேன். அதையே "பாரஸ்ட் ரோடு" என்றால் சின்ன குழந்தை கூட சொல்லி விடும். அந்தச் சாலையில் அங்கங்கே சில குடிசைகள் முளைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் நடக்கிற கதை. சௌமிய வருடம் என்கிற ஒரு குறிப்பில் இருந்து அறுபதுகளின் கடைசி என்று நாம் உறுதிபட சொல்ல முடிகிறது. ஃபிளாஷ் பேக் கதை தான். வியட்நாம் வீடு படத்தில் வருகிற, "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் அன்பே, என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.. வேர் என நீ இ...