உள்ளுட்டேன் சார்..! - பேரா ச.மாடசாமி
தனித்து நிற்கும் ஆசிரியரை அல்ல.. கண்கள் எப்போதும் தேடுவது… கலந்து நிற்கும் ஆசிரியரை- குழந்தைகளோடு கலந்து நிற்கும் ஆசிரியரை! அப்படி நாங்கள் தேடிக் கண்டுபிடித்த ஆசிரியர்களில் முக்கியமானவர் - தேனி சுந்தர். இவர் மொழி, சிந்தனை, செயல் ஒவ்வொன்றிலும் கல்விக்கான வேரைக் காண்கிறோம். குழந்தைகளின் மொழி - இலக்கியம் ஆனது இவரால்... குழந்தைகள் சொல்லும் டுஜக் டுஜக்கை இசைத் துணுக்குகள் என்றவர் இவர். ‘காக்காச்சி அங்கக்கு’க்கு டிக்சனரியில் அர்த்தம் இல்லை. சுந்தரின் எழுத்துலகில் அர்த்தம் இருக்கிறது. ‘இந்த மாடு பேரு என்னப்பா?’ என்று குழந்தை முன்வைத்த கேள்விக்குப் பெரியவர்கள் உலகில் விடை இல்லை. நெகிழ்வான உலகம் முன்வைக்கும் கேள்விக்கு இறுகிய உலகத்தில் விடை கிடைக்குமா? குழந்தை உலகில் பயணிக்க நம் அதிகாரம், அகங்காரம் இரண்டையும் மூட்டை கட்டி வைக்க வேண்டும். அது ஒரு வாய்ப்பு. மீண்டும் அந்த வாய்ப்பு ‘ஓங்கூட்டு டூணா’வில் கிடைத்தது. வெளியே வேறொருவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, ‘சுந்தர் சார்! சுந்தர் சார்!’ என்று குழந்தைகள் கூப்பிடுகின்றனர். வகுப்பறையில் நிலவும் இந்த சுதந்திரம் அழகானது; அபூர்வமானது. நான் மிக ரசித்...