Posts

Showing posts from May, 2008

நூலறிமுகம்: எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க.......?

ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் மக்களின் பாடுபொருளாய் இருப்பவை குழந்தைகள், எடுத்த மதிப்பெண், அடுத்த பள்ளி, அது தொடர்பான விமர்சனங்கள், “என்னங்க, உங்க பையன் மார்க் எப்படி? பரவாயில்லையா? அய்யய்யோ, ஆயிரத்த்துக்கும் கீழே போனாலே கொஞ்சம் கஷ்டந்தான்..” என்பார்கள். அதிலும் தேர்வில் பெயிலானவர்கள் கதி, சொல்லவேண்டியதே இல்லை.. சொந்த பந்தங்கள் விசாரிப்பிலேயே வெட்கித் தலைகுனிந்து வெளியில் வரவே சங்கடப்பட வைத்து விடுவார்கள்.. மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் ஆசிரியர்களும், ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டுமென்பதில் அதிகாரிகளும், பாடத்திட்டம், கல்விக் கொள்கைகள் எப்படி இருக்க வேண்டுமென்பதில் அரசாங்கமும்.. ஆளுக்கொரு முன்முடிவுகளோடு செயல்பட்டு வருகின்றனர்.. இந்நிலையில் “ஆர்டர்..! ஆர்டர்..! ஆர்டர்...!” என்று ஆர்டர் போட்டு “ஆளாளுக்கு பேசுவதைக் குறைத்து நாங்கள் சொல்லுவதையும் கொஞ்சம் கேளுங்கள்” என்று மாணவர்கள் தலையெடுத்தால் என்ன நடக்கும்? எப்படி இருக்கும்? யோசிக்கவே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.. இல்லையா? இத்தாலி நாட்டில் உள்ள பார்பியானா பள்ளியின் எட்டு மாணவர்கள் சேர்ந்து தங்களைப...