Posts

Showing posts from 2013

இதயங்களில் வாழும் இதயகீதன்

Image
”பெற்றோர் வீட்டில் இருக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளியில் இருக்கும் பெற்றோர்கள்” என்பதற்கு முன்னுதாரணமாய்த் திகழ்ந்தவர் எங்கள் இதயகீதன்.. அவர் தேனி அருகே நவம்பர் 7 வியாழன்று மாலை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.. பேசுவதில், எழுதுவதில், நிதி திரட்டுவதில், நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதில், புதியவர்களைக் கண்டறிந்து அணுகுவதில், அவர்களை அமைப்பாகக் கட்டுவதில், விமர்சனங்களை சம்பந்தப்பட்டவர் மனம் எவ்விதத்திலும் காயப்படுத்திவிடாத வகையில் கவனமாக எடுத்துச் சொல்லும் வித்தையில், முற்போக்கு முயற்சிகள், நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் முதல் ஆளாய் முன்வந்து பாராட்டுவதில், பங்குபெறுவதில், எவ்வளவு பெரிய செயல்திட்டத்தை முன்வைத்தாலும் அதை எளிதாக முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை அனைவரின் மனதிலும் அரும்பும் வகையில் அழகாகத் திட்டமிட்டுக் கொடுப்பதில் என எல்லாவிதங்களிலும் எங்களுக்குள் ஆழமாய்த் தாக்கத்தை ஏற்படுத்திய முற்போக்கு ஆளுமைதான் இதயகீதன்.. பழைய சோறும் பாதாம் கீரும், என்றென்றும் வாழும் ஜீவா, வைரமுத்து கவிதைகளில் மார்க்சியத் தாக்கம் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர். அக்னிக்குஞ்சு இதழாச...

என்னமோ நடக்குது?

Image
நண்பர்களே... முதலில் கல்விப்பணியில் மகத்தான பங்களிப்பைச் செய்து வரும் நமது இயக்கச் செயல்பாட்டாளர்களுக்கும் ஆசிரியர் நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! கல்வியில் நாம்:  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழக கல்விச்சூழலில் ஆகச்சிறந்த பங்களிப்பைச் செய்திருக்கிறது. தமிழக கல்விச்சூழலில் ஏற்பட்டுள்ள முற்போக்கான சில மாற்றங்களைப் பேச முனைகின்ற நடுநிலையாளர்கள் / நண்பர்கள் எவரும் அறிவியல் இயக்கத்தைக் குறிப்பிடாமல் பேச முடியாது. கல்வி, சுகாதார விழிப்புணர்வுக்காக ஆரம்பகாலத்தில் நாடு தழுவிய அளவிலான கலைப்பயணங்களில் நமது பங்களிப்பாக இருந்தாலும், அரசின் திட்டமாக இருந்தாலும் மக்கள் இயக்கமாக நாம் மாற்றிக்காட்டிய அறிவொளிப் பணியாக இருந்தாலும் சரி, கற்றலில் இனிமை, கற்பது கற்கண்டே, சிட்டுக்கள் மையம், இரவுப்பள்ளி என நீளும் நமது இயக்கத்தின் முன்முயற்சிகளின் நெடும்பட்டியலாக இருந்தாலும் சரி... நிகழ்காலத்தில் செயல்வழிக்கற்றல், பொதுப்பாடத்திட்டம், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை ஆகியவற்றில் நமது ஆய்வுகளும் அரசுக்கு நாம் வைத்த முன்மொழிவுகளும் நமது ஆழமான தலையீட்டிற்கு ...

தாய்ப்பால் வாரம்:ஆகஸ்ட் 1-7

Image
தாய்ப்பால் அவசியம்:   WHO, UNICEF, WABA (World Alliance for Breastfeeding Action), IBFAN (International Baby Food Action Network போன்ற அமைப்புகள் சர்வதேச அளவில் தாய்ப்பால் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக பல பணிகளைச் செய்து வருகின்றன. இந்தியாவில் இதற்கெனவே ஒரு அமைப்பு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றது. அதுதான் BPNI (Breastfeeding Promotion Network of India) இந்த அமைப்பு உலக தாய்ப்பால் வார நிகழ்வை 1992 முதல் இந்தியாவில் ஒருங்கிணைத்து வருகிறது.  தாய்ப்பால் தருவது, தாயின் உடல்நலனுக்கும் உகந்தது. குழந்தை பிறந்த முதல் அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க தொடங்க வேண்டும். முதல் முறை கொடுக்கப்படும் பால், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப்படுகிறது. குழந்தைக்கு தேவையான புரதங்கள் இதில் அடங்கியுள்ளன. குழந்தை பிறந்தது முதல், ஆறு மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் எனவும், குழந்தையின் உடல்நிலையை பொறுத்து 2 வயது வரை தாய்ப்பால் வழங்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனமும் வலியுறுத்துகிறது. முழுமையான தாய்ப்பால் வழங்குவதன் மூலம் உலக...