இந்த நிலை மாற வேண்டும் தானே..?
1953 ல் சென்னையில் நடந்த ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் எனது ஆய்வுகளுக்கு இந்திய அரசு ஊக்கமளிக்கவில்லை என்பதைப் பகிரங்கமாகவே அறிவித்து தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் முன்னிலையிலேயே தனது ரேடியோ உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளைப் போட்டு நொறுக்கினாராம் நமது ஜி.டி.நாயுடு... அன்றிலிருந்து 60 ஆண்டுகள் கடந்தபின்னும் நிலைமை மாறியுள்ளதா? சர்வதேச அளவில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் நமது நாட்டில் இருந்து ஒன்று கூட இடம்பெறவில்லை.. தரத்தை மேம்படுத்த நாம் கவனம் செலுத்த வேண்டும்.. இந்த நிலை மாற வேண்டுமென தனது வருத்தத்தைப் பதிவு செய்தார் ஒரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பில் கலந்துகொண்ட நமது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி... (குடியரசுத் தலைவர் பேசி சில மாதங்கள் கழித்து அந்தப் பட்டியல் குறித்த செய்திகள் நமது நாளிதழ்களில் வெளிவந்தன... எப்படியாவது இடம் பிடித்துவிடவேண்டும் சிறந்த 100, சிறந்த 200 என நீட்டிக்கொண்டே போனதில் சிறந்த 500ல் 4ம் 800ல் 20ம் இந்தியப்பல்கலைக் கழகங்கள் இடம்பிடித்தனவாம்... இந்த நிலை மாற வேண்டும் தானே..? ) இந்திய அறிவியல் மாநாடு ஒன்றில் கலந்து கொ...