Posts

Showing posts from March, 2014

அன்றொரு நாள்

நானும் எனது நான்காம் வகுப்பு மாணவர்களும் சமூக அறிவியலில் தேசியச் சின்னங்கள் குறித்துக் கலந்துரையாடினோம்.. நமது கொடி மூவர்ணக் கொடி என்று அழைக்கப்படுகிறது. அது பற்றி பாடப்புத்தகத்தில் உள்ள விளக்கத்தைக் கூறிவிட்டு வேறொரு கருத்தையும் முன்வைத்தேன். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சாதி, மதம் பிடித்திருக்கிறது இல்லையா என்றேன்.. யானைக்கெல்லாம் மதம் பிடிக்கிறது மாதிரி இல்லையா சார் என்றாள் கிருத்திகா.. (எங்கள் வகுப்பின் அதிரடி பேட்ஸ் உமன் இவள். விட்டு விளாசுவதில் கில்லாடி). மதம்னா என்னாங்க சார் என்று குறுக்கே புகுந்தாள் மதுமிதா. இந்தியாவில் உள்ள மதங்களைப் பற்றி எடுத்துக்கூறி. இந்தப் பிரிவினைகள் எல்லாம் இருக்கின்றன என்பதைப் பறைசாற்றும் விதமாகத்தான் இந்துக்களின் காவியும், கிறித்தவர்களின் வெண்மையும், இஸ்லாமியர்களின் பச்சையும் புத்தமதத்தின் அசோகச் சக்கரமும் தேசியக்கொடியில் இடம்பெற்றுள்ளதாகவும் எடுத்துக் கொள்ளலாம்... என விளக்கமளித்தேன்.. தேசியக் கொடியை ஏற்றும் போது பூக்களை வைப்பது ஏன் என்று தெரியுமா? வெள்ளையர்களுக்கெதிரான விடுதலைப் போராட்டத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட...