Posts

Showing posts from July, 2014

கொஞ்சம் விளையாட்டு... கொஞ்சம் அரசியல்... கொஞ்சம் அறிவியல்....

Image
கிரிக்கெட் கிறுக்கு:  கிரிக்கெட்.... கிரிக்கெட்.... கிரிக்கெட்.... நம் நாட்டில் முளைச்சது, நரைச்சது என அனைத்துத் தரப்பினருக்கும் தெரிந்த விளையாட்டாக உருவாக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் மட்டுமே..... கவாஸ்கர், கபில்தேவ், சச்சின், கங்குலி, டிராவிட், தோனி, வீரட் கோலி பெரும்பாலான இந்திய மக்களுக்குத் தெரிந்த விளையாட்டு வீரர்கள் இவர்கள் தான்.... இவர்களின் மீது விழுந்த வெளிச்சத்தின் சிறுபகுதி கூட நமது நாட்டின் பிற விளையாட்டு வீரர்களுக்கு கிடைத்ததில்லை... யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங்கைத் தெரிந்த நம்மில் எத்தனை பேருக்கு ஹாக்கி வீரர்கள் சர்தார் சிங், தரம்வீர் சிங்கைத் தெரியும்? இந்தியக் கால்பந்து ஹீரோ பூட்டியாவைத் தெரியும்? விஸ்வநாதன் ஆனந்தை விதிவிலக்காகச் சொல்லலாம். நம் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பரவி கெடுதல் விளைவிக்கும் பார்த்தீனியம் போல ஏராளமான பாரம்பரிய விளையாட்டுகளை அழித்தொழித்த பெருமை இந்த கிரிக்கெட்டுக்கு உண்டு... கொட்டோகொட்டெனப் பொழியும் பணமழையில் நனைய விரும்பி கிரிக்கெட் வாரிய தலைமைப் பொறுப்புக்கு மல்லுக்கட்டும் அரசியல்வாதிகளையும் பெரு முதலாளிகளையும் நாம் அறிவோம்... அரசியல், பொர...