மௌனத்தின் அர்த்தமென்ன?
கடந்த சில வாரங்களுக்கு முன் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களை ஒரு வார இதழின் சார்பில் நேர்காணல் செய்திருந்தார்கள்.. அதில் ஒரு கேள்வி தமிழனின் தனிச்சிறப்பு, குணம் என்ன என்பது.. அதற்கு அவர் ஒரு நீண்ட யோசனைக்குப் பிற்கு அவர் தெரிவித்த பதில் இதுதான்.... கோழைத்தனம்.. உண்மைதானா? சமீபத்தில் மஞ்சப்பை என்ற திரைப்படம் வெளிவந்தது.. தாத்தா-பேரன் கதை என்றார்கள்.. எனக்கும் எங்க தாத்தாவை ரொம்ப பிடிக்கும்.. கண்டிப்பாக பார்க்கணும் என்று நினைத்திருந்தேன்.. ஒரு நாள் வாய்த்தது... கம்பம் திரையரங்கு ஒன்றில் இரவுக்காட்சிக்குச் சென்றேன்... மொத்தமே ஒரு ஐம்பது, அறுபது பேருக்குள்ளதான் இருக்கும்.. அதில் ஒரு ஐந்தாறு பேர் தங்கள் மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தனர்.. படம் ஆரம்பிக்கும் போதே சில இளைஞர்கள் சிகரெட்டைப் பற்றவைக்க.. உடனே ஓடிவந்த திரையரங்கக் காவலாளி இளைஞர்களை எச்சரித்துவிட்டு சென்றார்... படம் ஓடிக்கொண்டிருக்க, சிலர் பிராந்தி பாட்டிலை உடைத்து ஊற்றும் சத்தமும் கேட்க ஆரம்பித்தது.. இருட்டு அவர்களுக்கு வசதியாக இருந்தது... யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.... கதாநாயகி வருகின...