அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் வேலை சாத்தியமா?
சமீபத்தில் தேனீ கலை இலக்கிய மையம் மற்றும் திண்ணை மனித வள மேம்பாட்டு மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் ஆனந்த விகடன் இதழின் பொறுப்பாசிரியர் பாரதி தம்பி அவர்களின் நூலான கற்க கசடற: விற்க அதற்குத் தக என்ற நூலின் அறிமுக விழா நடைபெற்றது. அந்நூல் குறித்து கருத்துரையாற்றும் வாய்ப்பினை எனக்கு வழங்கினர் நண்பர்கள். நடைபெற்ற இடம் பயிற்சி மையம் என்பதால் பங்கேற்பாளர்களில் அநேகம் பேர் தகுதித் தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள்.. அவர்களிடம் இந்த நூலிற்கும் உங்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என வினவியபோது கனத்த மௌனமே நிலவியது. தொடர்பில்லை என ஆங்காங்கே சில தலைகள் ஆடியதையும் பார்க்க முடிந்தது. பயிற்சி மையம் பிடித்திருக்கிறதா? பயிற்சியாளர்கள் மீது மதிப்பு மரியாதை இருக்கிறதா? என்று நான் கேட்டேன்.... உடனே பலரும் ஆமாம் ஆமாம் என்றனர். சரி, அடுத்த ஆண்டும் இதே பயிற்சி மையத்திற்கு வர விரும்புபவர்கள் எத்தனை பேர் என்றேன்.. அதெப்படி சார் வருவோம்.. நாங்க வேலைக்குப் போக வேண்டாமா? என்றனர். தமிழக அரசு நாளைய தினமே ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்த அனைவருக்கும் அரசுப்பள்ளிகளில் எவ...